ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 18, 2023 வெள்ளிக்கிழமை
Today Janma Natchathira Palangal - ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 18, 2023 வெள்ளிக்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 18, 2023 வெள்ளிக்கிழமை
அஸ்வினி: தடைகள் விலகி பணவரவு தாராளமாக இருக்கும் .
பரணி: உறவினர்களின் பிரச்சனையால் வீட்டில் சலசலப்பு உண்டாகும்.
கார்த்திகை: வியாபாரத்திற்குத் தேவையான பண உதவி கிடைக்கும்.
ரோகிணி: உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.
மிருகசீரிடம்: திட்டமிட்டுச் செய்யும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
திருவாதிரை: குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்படலாம்.
புனர்பூசம்: தொழிலுக்கு இருந்த போட்டிகள் தானாகவே விலகும்.
பூசம்: பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள்.
ஆயில்யம்: வட்டி கட்டி வங்கியில் இருந்த நகையை மாற்றி வைப்பீர்கள்.
மகம்: சகோதரரால் பிரச்சனை உண்டாகி சங்கடப்படுவீர்கள்.
பூரம்: நிலம் விற்பனையில் இருமடங்கு லாபம் பார்ப்பீர்கள்.
உத்திரம்: அரசு வேலைகள் அனுசரணையாக நடக்கும்.
அஸ்தம்: வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
சித்திரை: பங்குச்சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள் .
சுவாதி: அடுத்தவர் குடும்பச் சண்டையில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள்.
விசாகம்: ஒருவரைப்பற்றி போட்ட தப்புக் கணக்கை மாற்றிக் கொள்வீர்கள்.
அனுஷம்: எதிர்பார்த்த வேலை கிடைத்து சந்தோஷம் அடைவீர்கள்.
கேட்டை: அடுத்தவருக்கு உதவ கைக்காசை செலவழிப்பீர்கள்.
மூலம்: வெளிநாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
பூராடம்: செலவைக் குறைத்து சேமிப்பைப் பெருக்கத் திட்டமிடுவீர்கள்.
உத்திராடம்: குடும்பத் தேவைக்கு கடுமையாக உழைப்பீர்கள்.
திருவோணம்: வருமானத்தைப் பெருக்க புதிய திட்டம் தீட்டுவீர்கள்.
அவிட்டம்: அன்பாகப் பேசி உறவுக்குள் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள்.
சதயம்: முடிக்க முடியாத வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
பூரட்டாதி: வங்கியில் வாங்கிய கல்விக்கடனை அடைப்பீர்கள்.
உத்திரட்டாதி: வேலை காரணமாக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள்.
ரேவதி: படிப்புச் செலவுக்காக ஏழை மாணவருக்கு பண உதவி செய்வீர்கள்.






