30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பிசாசு யோகம்: மே வரை கவனமா இருக்கவேண்டிய 3 ராசிகள்!

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிரகம் தான் சனி. இந்த சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் பயணிப்பார்.

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பிசாசு யோகம்: மே வரை கவனமா இருக்கவேண்டிய 3 ராசிகள்!

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிரகம் தான் சனி. இந்த சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது சனி தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் ராகு சேர்க்கையால் பிசாசு யோகம் என்னும் அழிவுகரமான யோகம் உருவாகவுள்ளது.

முக்கியமாக இந்த யோகமானது மே மாதம் வரை நீடித்திருக்கும். ஏனெனில் மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பிசாசு யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் பிசாசு யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கையில் இருந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் அழியும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தை சந்திக்க நேரிடும். எந்த வேலையை செய்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற்றாலும், செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான எந்த முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். குடும்ப பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் பிசாசு யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பழைய நோய்கள் மீண்டும் தோன்றலாம். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய கடன்களை வாங்கி அவதிப்பட நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கல்களை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் பிசாசு யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வயிற்று பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். மன அழுத்தம் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0