வருட ராசி பலன் 2021

சிம்மம்: குணாதிசயங்கள்

சிம்ம ராசியினர் உன்னதமானவர்கள். பரந்த இதயம் படைத்தவர்கள். பெருந்தன்மை வாய்ந்தவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் இருப்பார்கள். இந்த ராசியினர் அதிகாரம், கண்ணியம், ஆற்றல், உற்சாகம், புகழ் ஆகியவற்றை பெற்றிருப்பார்கள். நிர்வாகம், சட்டம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் இவர்களுக்கு பிடித்தமான பாடங்கள் ஆகும்.

ராசி பலன் - சிம்மம்

பொதுப்பலன்கள்: சிம்ம ராசி அன்பர்களுக்கு ராகு பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழில் மற்றும் நிதிநிலையைப் பொறுத்தவரை சிறந்த வருடமாக இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் இலக்குகளை அடைவீர்கள். ஆனால் குருவும், சனியும் இணைந்து உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் வரை நீங்கள் பணியிடத்தில் சில எதிரிகள் மூலம் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்கள் வெற்றிப் பாதையில் அவர்கள் சில தடைகளை உண்டாக்குவார்கள். வருடத்தின் ஆரம்பத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கும். நீங்கள் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். சுய வேலைவாய்ப்பில் இருப்பவர்கள் நஷ்டம் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறுக்கு வழியில் செல்லாமல் நேர் வழியில் செயல்பட வேண்டும். இந்த வருடம் மகர ராசியில் குரு சஞ்சரிக்கும் காலம் வரை உங்கள் இரண்டாம் வீட்டைப் பார்வை இடுவதால் உங்கள் பொருளாதாரம் முன்னேற்றம் காணும். சிலர் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பம் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்வீர்கள். வயிறு மற்றும் கிட்னி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வேலை: இந்த வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகள் மெச்சும் வகையில் நீங்கள் செயலாற்றுவீர்கள். பணியிடத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள். என்றாலும் உங்கள் சக பணியாளர்களில் சிலர் உங்கள் புகழ் மற்றும் பெருமை கண்டு உங்கள் மீது பொறாமை கொண்டு உங்கள் வளர்ச்சிக்குத் தடைகளை ஏற்படுத்துவார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தந்தையின் தொழிலில் உதவி புரிவீர்கள். வருடத்தின் மத்தியில் நீங்கள் பணி நிமித்தமாக நீங்கள் உள்நாடு அல்லது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் முதலீடு செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் புதிய தொழில் தொடர்புகள் ஏற்படும். அவர்களுடன் நல்லிணக்க உறவு மேற்கொள்வீர்கள்.

காதல் / திருமணம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் கேது சஞ்சரிப்பதன் காரணமாக உங்கள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூற இயலாது. என்றாலும், உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருக்கும் குரு உங்கள் குடும்பஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் சற்று ஆறுதல் அடையலாம். உங்கள் பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. உங்கள் அலுவலகத்தில் மட்டுமன்றி உங்கள் வீட்டிலும் எதிரிகள் தோன்றலாம். உங்கள் உறவினரில் ஒருவர் உங்களுக்கு எதிராக செயல் பட லாம். கடந்த கால கசப்பான அனுபவத்தின் காரணமாக குடும்பத்தில் வீடு வாங்குவது பற்றிய பேச்ச எழும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக் கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை வராமல் காத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கருத்தினையும் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சரியான முறையில் நடந்து கொண்டால் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்க பலமாக செயல்படுவார். உங்கள் குழந்தையுடன் இந்த வருடம் நல்லுறவு காணப்படும். திருமணத்திற்குத் தயாராக இருப்பவர்களுக்கு ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது, உங்கள் குழந்தைகள் இந்த வருடம் வெற்றி பெறுவார்கள். அவர்களுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும்.

நிதிநிலைமை: நிதிநிலையில் ஸ்திரமான நிலை இருக்கும். உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் வருத்தம் அடைய வேண்டியதில்லை. எனவே நீங்கள் வருமானத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்துங்கள். ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதங்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தமான செலவுகள் இருக்கும். நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் நீங்கள் மூலப்பொருட்கள் வாங்க அதிக செலவுகளைச் செய்வீர்கள். நீங்கள் செலவுகளை குறைக்க முயன்றால் சேமிப்பு உயரும். ஏப்ரல் முதல் உங்கள் செல்வம் பெருகும். சொத்துக்கள் சேரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் நீங்கள் செல்வம் பெறுவீர்கள். அல்லது அவர்களுடன் இணைந்து தொழில் செய்வதன் மூலம் லாபம் காண்பீர்கள்.

மாணவர்கள்: சிம்ம ராசி மாணவர்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன் கிட்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் கடினமாக உழைத்துப் போட்டித் தேர்வுகளில் வெற்றி காண இயலும். மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கு இது ஏற்ற காலம் அல்ல. விசாகிடைக்க அல்லது கல்லூரி சார்பில் தாமதங்களை சந்திக்க நேரும். படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வேலை உங்களுக்கு பிடித்தமானதாக இல்லாத போதிலும் இந்த அனுபவம் மூலம் நீங்கள் சிறந்த வாய்ப்பினைப் பெறலாம்.

ஆரோக்கியம்: சிம்ம ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமுன் காப்பது நல்லது என்பதற்கிணங்க நடந்து கொள்ள வேண்டும். சனி மற்றும் குரு இணைந்து உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு வயிறு மற்றும் கிட்னி சம்பந்தமான பிரச்சினை ஏற்படும். கண்கள், கை மணிக்கட்டு போன்ற பிரச்சினைகளும் எழும். முறையாக உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டால் பிரச்சினைகள் ஏதும் வராமல் காத்துக் கொள்ளலாம். ஆன்மீக நாட்டம் மற்றும் மருத்துவம் உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

பரிகாரங்கள்:
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்
• வார இறுதி நாட்களில் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவு அளியுங்கள்
• உங்கள் தந்தை, பாட்டன் போன்றவர்களுக்கு மரியாதை அளித்து அவர்களுக்கு உதவுங்கள்
• வியாழக்கிழமை விரதம் இருந்து கோவிலில் அன்னதானம் மேற்கொள்ளுங்கள்.
• தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்

சாதகமான மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர்

We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.