வருட ராசி பலன் 2021

மேஷம்: குணாதிசயங்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். ஒரு அணி அல்லது மக்கள் குழுவிற்கு தலைமை தாங்கி முன்னணியில் இருக்க விரும்புவார்கள். மேஷ ராசியினருக்கு பிறரின் கீழ் படிந்து நடத்தல் கடினமான காரியம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தைரியமாகவும் உற்சாகமாகவும் காணப்படுவார்கள்.அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். விவிசாயம், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப பாடங்கள் அவர்களுக்கு விருப்பமானவை. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் விளையாட்டுவீரர், மருத்துவர், பொறியியலாளர் அல்லது பாதுகாப்புப் பணியாளராக ஆவார்கள். கடுமையான இயல்பும் செயல்களில் வேகமும் அவர்களின் பலவீனங்களாகும்.

ராசி பலன் - மேஷம்

பொதுப்பலன்கள்: இந்த 2021 வருடம் மேஷ ராசி அன்பர்களுக்கு ஒரு சிறப்பான வருடமாக இருக்கும் சனி பகவானின் அருளாசியால் உங்கள் வாழ்வில் நீங்கள் சிறந்த முன்னேற்றங்களைக் காண்பீர்கள். இந்த வருடம் சனி பகவான் மகர ராசியிலும் ராகு பகவான் ரிஷப ராசியிலும் சஞ்சரிப்பார்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடாகிய மகர ராசியில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலும் சஞ்சரிப்பார். ஏப்ரல் முதல் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பார். ஆனால் வக்கிரம் அடைந்து செப்டம்பர் மாதம் மீண்டும் பத்தாம் வீடாகிய மகரத்தில் சஞ்சரிப்பார். பின் வக்கிர நிவர்த்தி பெற்று நவம்பர் மாதம் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பார். மேற் சொன்ன இந்த கிரக நிலைகள் உங்கள் பொருளாதார மேம்பாட்டைக் குறிக்கும். மேஷ ராசி கல்வி பயிலும் மாணவர்கள் வருட ஆரம்பத்தில் சில கடினமான தருணங்களை சந்திக்க நேர்ந்தாலும் வருட முடிவில், குரு பகவானின் அருளால் கல்வியில் வெற்றி காண்பார்கள். சனி பகவானின் அமைவு நிலை காரணமாக உங்கள் தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களுக்கு கிட்டாது. குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். சனி ஏழாம் பார்வை மற்றும் செவ்வாயின் நான்காம் பார்வை காரணமாக உங்கள் குடும்ப வாழ்க்கை பதட்டம் நிறைந்ததாக இருக்கும். வருடக் கடைசியில் இது சீராகும். ராகு கேது பெயர்ச்சி காரணமாக வயிற்று வலி, முதுகு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வேலை: உங்கள் வேலை மற்றும் தொழில் இந்த வருடம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், பத்தாம் வீட்டில் சனி மற்றும் குரு சஞ்சாரம் காரணமாக உங்கள் தொழில் மற்றும் பணியில் நிரந்தரத் தன்மை இருக்கும். குரு-சனி சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்துகின்றது. பன்னாட்டு வாடிக்கையாளர்களின் சேவை மற்றும் வெளிநாடு செல்லும் பாக்கியம் உங்களுக்கு அமையும். அதன் மூலம் உங்களுக்கு செல்வச் சேர்க்கை ஏற்படும். பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படும். நீங்கள் உயர் அதிகார பதவியில் இருந்தால் உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் நீங்கள் அளிக்கும் வேலைகளை நேர்மையுடன் எளிதில் முடித்து அளிப்பார்கள். என்ற போதிலும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சுய வேலை வாய்ப்பு உடையவர் அல்லது தொழில் செய்பவர் என்றால் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். பணியைப் பொறுத்தவரை இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடமாக அமையும்.

காதல் / திருமணம்: குருவும் சனியும் இணைந்து உங்கள் நான்காம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டில் அமைதி நிலவும். முன்னேற்றம் கிட்டும். ஆனால் இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது கவனம் தேவை. அவர்கள் மனது புண்படாத வகையில் பேச வேண்டும். உங்கள் ராசியில் இருக்கும் செவ்வாயும். பத்தாம் வீட்டில் இருக்கும் சனியும் திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் வருட ஆரம்பத்தில் கணவன்/மனைவி உறவில் சில சவால்களைச் சந்திக்க நேரும். உங்கள் மனதிற்கு பிரியமானவர்களிடம் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். வருட மத்தியில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சாதகமான நேரமாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகளை முற்றிலுமாக தவிர்க்க இயலாது. சிலருக்கு திருமணம் கைகூடும். பிப்ரவரி-மார்ச் மாதம் சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் சில வாரங்கள் சஞ்சரிப்பதால், அந்தக் காலக் கட்டத்தில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். குருவின் பார்வை ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் குழந்தையற்ற தம்பதிகள் குழந்தைப் பேறு பெறுவார்கள். குழந்தைச் செல்வம் உள்ளவர்கள் தங்கள் மக்களின் கல்வி முன்னேற்றம் கண்டு மகிழ்வார்கள். திருமண வயதில் இருக்கும் தங்கள் மகன் / மகளுக்கு திருமணம் நடக்கக் காண்பார்கள்.

நிதிநிலைமை: உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கும் ராகு காரணமாக நிதி நிலையில் ஏற்ற இறக்க நிலை இருக்கக் காண்பீர்கள். ராகு சில பொருள் ஈட்டும் வாய்ப்புகளை உங்களுக்கு அளித்தாலும் சில இழப்புகளையும் அளிப்பார். ஆபத்து ஏற்படுத்தும் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குரு பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலக் கட்டமான இந்த வருடத்தின் இரண்டாவது பகுதியில் உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சனியும் குருவும் உங்கள் நாலாம் வீட்டைப் பார்ப்பதால் நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்குவீர்கள். இந்த வருட இறுதியில்உங்கள் நிதிநிலை சீரடையும். உங்கள் பெற்றோரின் உடல் நிலை குறித்த மருத்துவச் செலவுகளை மேற்கொள்ள நேரும்.

மாணவர்கள்: கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். கல்வியில் நீங்கள் விரும்பும் பலன்களை அடைய நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரும். செவ்வாய் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் காரணத்தால் நீங்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். பதினொன்றாம் வீட்டில் குருவின் சஞ்சாரமும் உங்களுக்கு கல்வியில் வெற்றியைப் பெற்றுத் தரும். வெளி நாடு செல்ல விரும்பும் மாணவர்கள் தங்கள் கனவு நனவாகக் காண்பார்கள். கல்வி இறுதி ஆண்டு முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். குரு உங்கள் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் குறைந்த தூரப் பயணமும் சனி உங்கள் பன்னிரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணமும் மேற்கொள்வீர்கள்.

ஆரோக்கியம்: மேஷ ராசியினர் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சில சவால்களை எதிர்கொள்ள நேரும். அதிகப் பணிகள் காரணமாக உங்கள் மனதில் பதட்ட நிலை காணப்படும். அதிக நேரம் உட்கார்ந்து பணி புரிவதால் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எட்டாம் வீட்டில் கேதுவின் சஞ்சாரம் மற்றும் இரண்டாம் வீட்டில் ராகுவின் சஞ்சாரம் காரணமாக அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. சரிவிகித உணவை உண்ணுங்கள். . இதனால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம்.

பரிகாரங்கள்:

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்
• ஜோதிடர் ஆலோசனையைப் பெற்று சிகப்பு பவளம் அணியவும்.
• பிரதி செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை ஹனுமான் சாலிசா , ஹனுமான் மந்திரம் மற்றும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யவும்.
• யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். கடின வார்த்தைகளைப் பேசாதீர்கள்.
• முரண்பட்ட கருத்து ஏற்படும் இடங்களில் வாதத்தில் பங்கு கொள்ளாதீர்கள்.
• தினமும் சூரிய வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
• ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.