வருட ராசி பலன் 2021

ரிஷபம்: குணாதிசயங்கள்

ரிஷப ராசியினர் கலை சார்ந்த துறையில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். மற்ற ராசியினரைவிட அதிக செல்வம் பெற்றிருப்பார்கள். உடல் வலிமை, மன வலிமை இரண்டையும் பெற்றிருப்பார்கள். ரிஷப ராசியினர் கடினமாக உழைப்பார்கள். நன்றாக சாப்பிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளை அனுசரித்து சமாளித்தாலும் பிடிவாதமான அணுகுமுறையை தவிர்ப்பதன் மூலம் நல்ல பெயரைப் பெறுவார்கள். பொறுமை அவர்களின் மிகப் பெரிய பலமாகும். பிடிவாதம், பேராசை மற்றும் கோபம் இவர்களின் பலவீனங்களாகும்.

ராசி பலன் - ரிஷபம்

பொதுப்பலன்கள்: ரிஷப ராசி அன்பர்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் இருக்கும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரும். என்றாலும் அதன் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பணியில் போராட்டங்கள் இருந்தாலும் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். குருவும் சனியும் இனைந்து உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீகக் காரியங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும். போராட்டங்கள், வெற்றி இரண்டும் இணைந்து இருக்கும். வருட ஆரம்பத்தில் சில மாணவர்கள் வெளிநாடு செல்வார்கள். காதல் மற்றும் குடும்ப வாழ்வில் பதட்டம் இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை நிலைமை சீராக இருக்கும். பிப்ரவரி முதல் மார்ச் வரை குடும்பத்தில் சூடான வாக்குவாதங்கள் நிகழும். கருத்து வேறுபாடுகள் வந்து போகும். குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கண்களில் பிரச்சினை, முதுகு வலி, வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலை: சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் இந்த வருடம் பணியில் உங்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் இருக்கும். நீங்கள் விரும்பும் வகையில் வேலை மாற்றம் மற்றும் பதவி உயர்வு கிட்டும். வேலை மாற்றம் விரும்புபவர்கள் தங்கள் எண்ணம் ஈடேறக் காண்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில் கூட்டாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதன் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்புள்ளது. எனவே அதனை தவிர்க்க வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் உங்கள் பணியில் வெற்றி கிட்ட வாய்ப்புள்ளது. குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் உள்ளது. அதனால் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் நீங்கள் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண்பீர்கள்.

காதல் / திருமணம்: இந்த வருடம் உங்கள் குடும்ப வாழ்க்கை சாதரணமாக இருக்கும். வருட ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் வரும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிட்டாது. உங்கள் உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். குரு உங்கள் லக்னத்தைப் பார்ப்பதால் சற்று ஆறுதல் அடைவீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் குரு உங்கள் நாலாம் வீட்டைப் பார்ப்பதால் சொத்துக்களில் முதலீடு செய்வது பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்துவீர்கள். உங்கள் ராசியில் ராகுவும் ஏழாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதங்கள் வந்து போகும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் மனப் பதட்டம் ஏற்படும். என்றாலும் வருட மத்தியில் சுக்கிரன் நிலை காரணமாக உங்கள் உறவு முறை சீராகும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலம் உங்கள் குழந்தைகளுடன் உறவு முறை சிறப்பாக இருக்கும்.

நிதிநிலைமை: உங்கள் நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருட ஆரம்பத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். என்றாலும், சனி உங்கள் பதினொன்றாம் வீட்டைப் பார்ப்பதால் பண வரவும் இருக்கும். மேலும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு சொத்துக்கள் சேரும். குறிப்பாக தந்தை வழி சொத்துக்கள். குடும்ப விசேஷங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் நீங்கள் ஆன்மீக யாத்திரை அல்லது ஆன்மீகக் காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் குரு உங்களுக்கு பண வரவை அளிப்பார். இந்த காலக் கட்டத்தில் நீங்கள் பணியிடத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். பெரிய வகையிலான முதலீடுகள் செய்யும் எண்ணம் இருந்தால் நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயலாற்றுங்கள்.

மாணவர்கள்: ரிஷப ராசி மாணவர்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்கள் கிடைத்தாலும் சிறிது தொல்லைகளையும் சந்திக்க நேரும். நீங்கள் சிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்க்கை கிடைக்கப் பெறுவீர்கள். படிப்பு முடித்தவர்கள் வேலை கிடைக்கப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வெற்றி காண்பார்கள். உங்களில் சிலர் வெளி நாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. பிரயாணத்தின் போது உங்கள் மனதிற்கேற்ற நண்பர்கள் கிடைப்பார்கள்

ஆரோக்கியம்: வருட ஆரம்பத்தில் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். உங்கள் ராசியில் ராகுவும் ஏழாம் வீட்டில் கேதுவும் இருக்கும் காரணத்தால் அதீத தன்னம்பிக்கை காரணமாக சில தொல்லைகளை சந்திப்பீர்கள். உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. வருடத்தில் முதல் நான்கு மாதங்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிலும் சூரியன் மற்றும் புதன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கும் காலம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரங்கள்:

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்
• ஓம் ஸ்ரீ ராஹவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள்
• ஓம் ஸ்ரீ கேதவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள்
• ஜோதிடரை கலந்து ஆலோசித்து வைரக் கல்லை அணியுங்கள்
• தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்
• ஏழைகளுக்கு அன்னதானம் அளியுங்கள். விலங்குகள், மற்றும் பறவைகளுக்கு உணவு அளியுங்கள்

சாதகமான மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, செப்டம்பர், டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள் : பிபரவரி, மார்ச், ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர்

We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.