டிசம்பர் மாதம் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமா இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?

உங்களுக்கு 2021 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

டிசம்பர் மாதம் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமா இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?

2021 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. 

உங்களுக்கு 2021 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் டிசம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என டிசம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பல நல்ல வாய்ப்புக்களைக் கொண்டு வரும். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலை மேம்படும். இக்காலத்தில் நிதி முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்கள் வீட்டில் அமைதி நிலவும்.திருமணமாகாதவர்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 10, 29, 34, 47, 58

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி

அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, அடர் மஞ்சள், சிவப்பு, வான நீலம்

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் இம்மாதத்தில் நிதி ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகளால் உங்கள் பட்ஜெட் பாழாகும். இம்மாதத்தில் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். அவர்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். மற்றவர்களை கவர அதிகம் செலவழிப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் வராதது உங்களுக்கு கவலையை அளிக்கலாம். வேலையைப் பொறுத்தவரை, அலுவலகத்தில் உங்களால் முடிந்தளவு வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள். கவனக்குறைவுடன் இருந்தால், உயர் அதிகாரிகள் உங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். நிலுவையில் உள்ள உங்கள் வேலையை முடிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகள் வரும். அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 11, 25, 36, 44, 53

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், திங்கள், புதன், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், கிரீம், இளஞ்சிவப்பு, வான நீலம்

மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லையெனில் ஏமாற்றமடைவீர்கள். முக்கிய முடிவுகளை நீங்களே யோசித்து எடுங்கள். மற்றவர்களை இம்மாதத்தில் சார்ந்து இருக்காதீர்கள். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்காது. மாத தொடக்கத்தில் உங்களின் சில வேலைகளில் தடைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். உங்களின் கோபத்தால் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதயம் தொடர்பான நோய் இருந்தால், கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 8, 23, 30, 49, 52

அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, புதன், சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, சிவப்பு, நீலம், கிரீம்

கடகம் - உத்தியோகத்தில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பரபரப்பாக இருக்கும். சமீபத்தில் வேலையில் சேர்ந்திருந்தால், இம்மாதத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் முக்கியமானதாக இருக்கும். பங்குச்சந்தை தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்காது. இம்மாதத்தில் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். மாதத்தில் நடுப்பகுதியில் துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சண்டையால் உங்கள் உறவு பலவீனமாகலாம். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் சில நோய்கள் வரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 14, 23, 34, 48, 55

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், சனி, புதன், வெள்ளி

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மிகவும் உற்சாகத்துடன் இருப்பார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் கவனமாக எடுப்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, உங்களின் நேர்மறை எண்ணம் மற்றும் கடின உழைப்பு உங்களை மிகவும் சிறப்பானவராக வெளிக்காட்டும். இந்தக் காலக்கட்டத்தில் உங்களின் அனைத்துப் பணிகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வீர்கள். தொழிலதிபர்கள் தங்களின் நஷ்டத்தை ஈடுசெய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். இம்மாதத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். வீட்டின் பெரியவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையானதாக இருக்கும். உணவில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்கள்: 5 ,10, 17, 24, 30, 49, 57

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வெள்ளி, புதன், செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: பிரவுன், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை இனிமையானதாக இருக்கும். குறிப்பாக வேலை செய்பவர்களுக்கு இம்மாதம் முக்கியமானதாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். எலக்ட்ரானிக்ஸ், அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்கள் மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மாதத்தில் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். இந்த காலகட்டத்தில், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கலாம். மாத இறுதியில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 16, 27, 33, 41, 50

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வியாழன், சனி, புதன்

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், ஊதா, இளஞ்சிவப்பு, வெள்ளை

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையக்கூடும். மாதத்தின் நடுப்பகுதியில் நீதிமன்ற வழக்குகள் தொந்தரவு செய்யலாம். இதனால் நிறைய செலவும் ஏற்படலாம். வேலையை மாற்ற நினைத்தால், அதை தவிர்த்திடுங்கள். குறிப்பாக வணிகத்துடன் தொடர்புடையவர்கள் எந்த புதிய வேலையையும் தொடங்கக்கூடாது. இது தவிர, நீங்கள் பெரிய முதலீடு செய்ய விரும்பினால், சரியான ஆலோசனையைப் பெற்ற பின்னரே உங்கள் முடிவை எடுங்கள். சம்பளம் வாங்குபவர்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டும். கோபம் மற்றும் ஆணவத்தைத் தவிர்க்கவும் இல்லையெனில் உங்கள் வேலை போக வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதேனும் சிறிய பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4 12, 23, 37, 44, 59

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், சனி, வியாழன், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மெரூன்

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் மனம் அமைதியாக இருக்கும். ஒவ்வொரு முடிவையும் முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். பண விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் பணம் தொடர்பான சில பெரிய வேலைகளையும் செய்யலாம். வேலை செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். உயர் பதவி கிடைக்கலாம். இரும்பு வியாபாரிகளுக்கு இந்த நேரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வியாபாரம் செழிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் கலவையாக இருக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 11, 20, 33, 45, 54

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், திங்கள், ஞாயிறு, புதன்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பழுப்பு, இளஞ்சிவப்பு, நீலம்

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பான பலன்களைத் தரும். இம்மாதத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலை மேம்படும். இந்த மாதம் உங்கள் வேலை தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உயர் அதிகாரிகளை மகிழ்விக்க அளவுக்கு அதிகமாக உழைக்காதீர்கள். வேலை மாற்றங்களையும் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். இந்த மாதம் பண விஷயத்தில் கலவையான பலன்களை தரும். மாதத் தொடக்கத்தில் அதிக பணம் செலவழிக்க நேரிடும், நடுவில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இம்மாதத்தில் உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 10, 27, 31, 44, 56

அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, சனி, வியாழன், புதன்

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள்

மகரம் - மகர ராசிக்கார்களே, நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து முக்கிய முடிவு எடுத்தால், அது நல்ல பலன்களைத் தர வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரத்தில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். மேலும், நீங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். உங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்லது. இம்மாதத்தில் கோபம் மற்றும் அவசரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு உங்களை சிக்கலில் தள்ளும். பண விஷயத்தில் இந்த நேரம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வெளி உணவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 10, 28, 34, 47, 58

அதிர்ஷ்ட நாட்கள்: சனி, திங்கள், புதன், செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள், மெரூன், வெள்ளை, ஆரஞ்சு

கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வீட்டில் ஒரு மங்கள நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வீர்கள். இதுமட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து நிதி நன்மைகள் கிடைக்கும். இந்த மாதம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த திடீர் வேலைப்பளு உங்கள் மீது அதிகரிக்கலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. விரைவில் நீங்கள் உயர் பதவியைப் பெறலாம், எனவே கடினமாக உழையுங்கள். வியாபாரிகளுக்கு இந்த மாதம் கலவையான பலன்களை தரும். இந்த நேரத்தில் நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 17, 20, 38, 45, 50

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வியாழன், திங்கள், சனி

அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் பச்சை, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல புதிய சவால்கள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையின் உடல்நலம் குறித்த உங்கள் அக்கறை மிகவும் அதிகரிக்கும். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. மேலும், நீங்கள் மருத்துவர்களுக்கும் மருந்துகளுக்கும் நிறைய பணம் செலவழிக்கலாம். நீங்கள் வேலை செய்தால், அலுவலகத்தில் உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகளுக்கு இந்த நேரம் லாபகரமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் தெரியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், மிகவும் அலட்சியமாக இருக்கக்கூடாது.

அதிர்ஷ்ட எண்கள்: 7,15, 26, 34, 41, 58

அதிர்ஷ்ட நாட்கள்: சனி, திங்கள், செவ்வாய், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, இளஞ்சிவப்பு, வான நீலம், வெள்ளை, மஞ்சள்

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0