அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2021 | 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

அதாவது குரு பகவான் அதிசார பெயர்ச்சியை 06.04.2021 அன்று மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு சென்று, 16.09.2021 அன்று வரை குரு சுமார் 160 நாட்கள் அதாவது 5 மாதம், 1 வாரம் வரை கும்பம் ராசியில் சஞ்சரிக்க இருக்கின்றார். 

அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2021 | 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

அதிசார குரு பெயர்ச்சி 2021 பலன்கள் – Athisara Guru 

இன்றைய பதிவில் குரு மகரத்தில் இருந்து கும்பத்திற்கு அதிசாரம் பெற்று அனைத்து ராசிக்காரர்களுக்கும் பலன்களை கொடுக்க இருக்கின்றார் அதனை பற்றி தெரிந்து கொள்வோம். 

அதாவது குரு பகவான் அதிசார பெயர்ச்சியை 06.04.2021 அன்று மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு சென்று, 16.09.2021 அன்று வரை குரு சுமார் 160 நாட்கள் அதாவது 5 மாதம், 1 வாரம் வரை கும்பம் ராசியில் சஞ்சரிக்க இருக்கின்றார். 

சரி இந்த பதிவில் அதிசார குரு பெயர்ச்சி என்றால் என்ன?, இந்த அதிசார குரு பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை தர இருக்கின்றார்?, என்னென்ன ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் அடிக்கப்போகிறது போன்ற ஆன்மிக தகவல்களை பற்றி இப்பொழுது நாம் இங்கு படித்தறியலாம் வாங்க.

அதிசார குரு பெயர்ச்சி 2021 எப்போது?

குருபகவான் 06.04.2021 அன்று மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு சென்று, 16.09.2021 அன்று வரை சஞ்சரிக்க இருக்கின்றார்.

அதிசார குருபெயர்ச்சி என்றால் என்ன?

பொதுவாக நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் அவ்வப்போது அதிசார வக்ர நிலையினால் முன்னும், பின்னும் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அந்த வகையில் தன்னைவிட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாயை கடந்து செல்லும் போது ஈர்ப்பு விசையில் இருந்து காத்துக்கொள்ள குருபகவான் சாதாரணமாக நகரும் வேகத்தை விட 6 மடங்கு தனது வேகத்தை அதிகரித்து நகர தொடங்குவார் இதனை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன்களை வழங்க இருக்கின்றார் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

மேஷம் – Athisara Guru Peyarchi 2021 Mesham:-

ராசிகளின் வரிசை நிலையில் முதல் ராசி மேஷம். ஆகவே குருபகவான் இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது மேஷம் ராசிக்காரர்களுக்கு 10-ம் இடத்தில் இருந்து 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் இடம் பெறுகிறார். ஆகவே இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை வழங்குவார்.

அதாவது வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோஷன் கிடைக்கும், தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடிவடையும். அரசியல் சார்ந்த பிரமுகர்களுக்கு இந்த குருபெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். அதாவது மேஷம் ராசிக்காரர்கள் அரசியல் சார்ந்த என்ன விஷயங்களை செய்தாலும் அது வெற்றியில் முடிவடையும். திருமணம் சார்ந்த விஷயங்கள் வெற்றியில் முடிவடையும். அதேபோல் கணவன் மனைவிக்குள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருந்தால் அந்த பிரச்சனை இப்பொழுது சரியாகும்.

ரிஷபம் – Athisara Guru Peyarchi 2021 Rishabam:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குருபெயர்ச்சி சற்று சுமாராக இருக்கும். அதாவது குருபகவான் தங்களுடைய ராசியில் 10-ம் இடத்தில் இடம் பெயர்கிறார். ஆகவே தங்களுடைய பதவி கொஞ்சம் ஆட்டம் காணும். குரு பத்தாம் இடத்தில் இருந்தால் சிறந்த பலன் இருக்காது.

உத்தியோகம் – உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அடிக்கடி பணியிடம் மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். இந்த நிலை தங்களுக்கு 5 மாதங்கள் மட்டுமே ஏற்படும், அதன் பிறகு சரியாகிவிடும். குரு பத்தாம் இடத்தில் இருப்பதினால் ஸ்தானபலம் இல்லை என்றாலும். குரு அவரால் முடிந்த நல்ல பலன்களை ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வழங்குவார். அதாவது புதிய வேலை கிடைப்பது, புரமோஷன், வேற இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கி செல்வதற்கு இது போன்று நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்களை தங்களுக்கு சாதகமாக அமைத்து கொடுப்பார்.

பொது பலன்கள் – கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும், விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும், உடல் ஆரோக்கியம் மேம்படும், பணம் வரவு இருந்து கொண்டே இருக்கும், திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும், தவணை தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பான ஒரு காலகட்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கும்.

மிதுனம் – Athisara Guru Peyarchi 2021 Mithunam:-

புதனுடைய ஆதிக்கம் பெற்ற மிதுனத்திற்கு என்ன பலன்களை கொடுக்கப்போகிறார் என்று தெரிந்து கொள்வோம். இந்த குருபெயர்ச்சியில் தங்களுக்கு ஸ்தானம் பலம் நன்றாக இருக்கிறது. அதாவது வெளிநாடுகளில் கல்வி கற்க அல்லது பணிபுரிய நினைப்பவர்கள் இப்பொழுது முயற்சி செய்தால் தங்களுக்கு நல்ல பலன் உண்டாகும். தங்கள் தந்தை மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். குருபகவான் தங்களது ராசியையே பார்ப்பதினால் தங்களுக்கு அனைத்து விஷயத்திலும் நல்ல தெளிவு கிடைக்கும். செல்வம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

கடகம் – Athisara Guru Peyarchi 2021 Kadagam:-

கடகம் என்பது கால சக்கரத்தின் நான்காம் ராசியாகும். இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது குருபகவான் தங்களது ராசியில் 8-ம் இடத்தில் இடம் பெயருகிறார். ஆகவே இது தங்களுக்கு கொஞ்சம் கஷ்டகாலம் என்றாலும், அதனை கண்டு பயப்பட வேண்டாம். தங்களுக்கு குரு பெயரும் இடம் வேண்டுமென்றால் சரி இல்லை என்று சொல்லலாம். ஆனால் குரு பார்க்கும் இடம் நன்றாக இருக்கிறது. அதாவது வரா கடன்கள் இந்த பெயர்ச்சியின் போது வசூலாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும், வீண் செலவுகள் சற்று அதிகரிக்கும்.
 
உத்தியோகம் பொறுத்தவரை வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள் இப்பொழுது முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்கும், அதன் மூலம் நன்றாக சம்பாதிப்பீர்கள். அதேபோல் ஒரு சிலருக்கு சுப செலவுகள் ஏற்படும். அதேபோல் பணம் வரவும் உண்டாகும்.

சிம்மம் – Athisara Guru Peyarchi 2021 Simmam:-

சிம்மம் ராசிக்காரர்களுக்கு குரு 7-ம் இடத்திற்கு பெயர்ச்சி பெறுகிறார் ஆகவே சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குருபெயர்ச்சி சிறப்பாக இருக்கும். அதாவது கணவன் மனைவிக்குள் இருந்து வரும் பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகம் மற்றும் சொந்த தொழில் ஆகிய இரண்டுமே மிக சிறப்பாக இருக்கும். நீங்கள் எந்த விஷயத்தை எடுத்து நடத்தினாலும் அவற்றில் நீங்களே வெற்றி பெறுவீர்கள். இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது எண்ணற்ற பலன்களை பெறப்போகிறார்கள் இந்த சிம்மம் ராசிக்காரர்கள்.

கன்னி – Athisara Guru Peyarchi 2021 Kanni:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சியின் போது குருபகவான் தங்களது ராசியில் 6-ம் இடத்தில் இடம் பெயர்கிறார். ஆகவே இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு ஸ்தானம் பலம் இல்லை. ஆகவே இந்த அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு சுமாராக இருக்கும். இருந்தாலும் குருபகவான் அவரால் முடிந்த நன்மைகளை தங்களுக்கு வழங்குவார். அதாவது இந்த பெயர்ச்சியின் போது தங்களுக்கு கடன் சுமை குறையும். எதிரிகளின் தொல்லை நீங்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குரு பார்வையினால் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

துலாம் – Athisara Guru Peyarchi 2021 Thulam:

துலாம், ராசிகளின் வரிசை நிலையில் 7-ம் ராசியாகும். குருபகவான் இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது தங்கள் ராசியில் 4-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்திற்கு இடம் பெயர்கிறார். ஆகவே இந்த பெயர்ச்சியின் போது தங்களுக்கு ஸ்தானம் பலம் நன்றாக இருக்கிறது.  அதாவது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தங்கள் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க நினைத்தால் அதனை இப்போது முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எதை தொட்டாலும் அவற்றில் லாபம் பெறுவீர்கள். நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள். தொழிலில் மேன்மை அடைவீர்கள். இந்த அதிசார குருபெயர்ச்சி தங்களுக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

விருச்சகம் – Athisara Guru Peyarchi 2021 Viruchigam:-

குருபகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களது ராசியில் 4-ம் இடத்தில் இடம் பெயர்கிறார். ஆகவே இந்த பெயர்ச்சியின் போது தங்களுக்கு ஸ்தானம் பலம் இல்லை என்பதால் வரவிருக்கும் மூன்று மாதங்கள் சற்று சுமாராக தான் தங்களுக்கு இருக்கும். அதாவது இந்த பெயர்ச்சியின் போது தங்களது தாயாரின் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். மாணவ மாணவிகளுக்கு கல்வி மேம்படும்.

தனுசு – Athisara Guru Peyarchi 2021 Dhanusu:-

குருபகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களது ராசியில் 2-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு இடம் பெயர்கிறார். மூன்றாம் இடம் என்பது முயற்சி ஸ்தானம் ஆகும். ஆகவே தங்களுடைய அனைத்து முயற்சிகளும் தங்களுக்கு சாதகமாக முடிவடையும். அதேபோல் சகோதரர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்க கூடும். பிரிந்து போன உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தங்கள் தாயாருக்கு செல்வாக்கு அதிகரிக்கும் அதன் காரணமாக உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

சரி இதன் அடுத்த பதிவில் மீதி உள்ள நான்கு ராசிக்காரர்களுக்கான பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்…

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
1
wow
0