மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...

சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என சித்திரை மாத ராசிபலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையும், பிலவ வருடமும் பிறக்கிறது.

சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என சித்திரை மாத ராசிபலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளை வழங்கும். இக்காலத்தில் உங்கள் அதிகாரமும், தைரியமும் மேம்படும். மேலும் நீங்கள் கடுமையான முடிவுகளை மிகுந்த பொறுப்புடன் எடுப்பீர்கள். இக்காலத்தில் நீங்கள் நீங்கள் சிறப்பாக கற்று, அதை திறம்பட வெளிப்படுத்துவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளுடன்ன உறவு மேம்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து பாராட்டையும் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் மகிழ்ச்சியின் ஆதாரமாக குழந்தைகள் இருப்பார்கள். எனவே இக்காலத்தில் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.

ரிஷபம் - ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளை வழங்கும். சில சொத்து தொடர்பான பரிவர்த்தனைகள் உங்களுக்கு சாதகமாக நிகழலாம். அலுவலகத்தில் வேலை சிறப்பாக நடைபெற விஷயங்களை மென்மையான முறையில் அணுகி கையாளுங்கள். இந்த ராசிக்கார மாணவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தை கண்காணியுங்கள். ஆன்மீக செயல்பாடுகளான தியானம், ஆன்மீக புத்தகங்களைப் படிக்க சிறந்த காலம் இது. இதனால் மன அமைதி கிடைக்கும். இருப்பினும், இக்காலத்தில் தலைவலி, காய்ச்சல் மற்றும் கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

மிதுனம் - மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளை வழங்கும். இக்காலத்தில் உங்களது திறன்கள் மேம்படும். உங்களின் நேர மேலாண்மை திறன்களும் மேம்படும். பணியிடத்தில் வெகுமதிகள் அல்லது அங்கீகரங்கத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இக்காலம் உங்கள் அப்பாவுக்கு மிகவும் சிறந்த காலம். எனவே நீங்கள் இக்காலத்தில் அவருடன் தரமான நேரத்தை செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இக்காலத்தில் உங்களின் இளைய குழந்தைகள் பயனடைய வாய்ப்புள்ளது.

கடகம் - கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளை வழங்கும். வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டுமே சமநிலையில் சீராக இருக்கும். மோசமான சூழ்நிலைகளில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் உங்களின் திறமையால் ஈர்க்கப்படுவார்கள். எண்ணங்களில் சிறிது எதிர்மறை இருந்தாலும், இக்காலத்தில் உங்கள் மனம் நம்பிக்கையுடனேயே இருக்கும். மேலும் நீங்கள் மிகவும் தைரியமாக செயல்படுவீர்கள். வேலை மற்றும் வீட்டில் சில புதிய பொறுப்புகளை ஏற்க இது ஒரு நல்ல தருணமாக இருக்கும்.

சிம்மம் - சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளை வழங்கும். உங்களின் ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும் மேம்படும். உங்களின் செயலுக்கு ஏற்ப முடிவுகள் கிட்டும். அலுவலக வேலை சீராக இருக்கும். மேலும் உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒரு வேலையில் இறங்கினால், அதை முடிக்க முயற்சி செய்யுங்கள். இக்காலம் உங்கள் தந்தைக்கு சிறந்த காலமாக இருக்கும். மேலும் அவருடைய பக்கத்தில் இருந்து நீங்கள் மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

கன்னி - கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளையே வழங்கும். ஆராய்ச்சி/ஆய்வு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு இக்காலம் நல்ல காலமாக இருக்கும். அதேப் போல் மாணவர்கள் இக்காலத்தில் எதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். இக்காலத்தில் அதிக செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் அளவுக்கு அதிகமாக வேலை செய்யாமல், தினமும் ஒரே அளவில் வேலையை செய்யுங்கள்.

துலாம் - துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. உங்களின் மனநிலையை சீராக பராமரிக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் எந்த ஒரு விஷயங்களுக்கும் எதிர்மறையான எதிர்வினைகளைத் தருவதைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான உறவைப் பேணுவதில் சிரமத்தை சந்திக்கலாம். அலுவல வேலையை நன்கு கவனித்து, பொறுமை காத்து வேலை புரிவது சிறந்த முடிவுகளைத் தரும். நீங்கள் சூழ்நிலைகளை புத்திசாலித்தனமாக சமாளித்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். குறிப்பிட்ட நபர்களுடன் பழகும் போது நீங்கள் திசைத்திருப்பட்டால் பொறுமையாக இருக்க முயலுங்கள்.

விருச்சிகம் - விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான முடிவுகளை வழங்கும். இக்காலத்தில் நீங்கள் மிகவும் ஆற்றல்மிக்கவர்களாக செயல்படுவீர்கள். உங்கள் எதிரிகள் உங்களை விட்டு விலகி இருப்பார்கள். இக்காலத்தில் எந்த ஒரு எதிரியும் உங்களை எதிர்கொள்ள முடியாது. நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும், புதியவற்றைத் தொடங்கவும் மிகவும் சிறந்த நேரம். மன மற்றும் உடல் ஆரோக்கியம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் நல்ல ஆதாயங்களைப் பெறுவீர்கள். எனவே முன்னிலை வகிக்க தயங்க வேண்டாம்.

தனுசு - தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளை வழங்கும். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள காலமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் குழந்தைகளின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருப்பார்க்ள. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால், ஜங்க் உணவுகள் மற்றும் அதிக சிற்றுண்டிகளைத் தவிர்ப்பது நல்லது. இக்காலத்தில் உங்களின் சில திட்டங்கள் லாபங்களை ஈட்டக்கூடும்.

மகரம் - மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. அலுவலக வேலையில் வெற்றி காண குறுக்குவழிகளைத் தவித்தால், அந்த வேலை மென்மையாகவும் பயனளிக்கும் வகையிலும் இருக்கும். குறைவான சலுகை பெற்றவர்களுக்கு உதவுவது மிகவும் பலனளிக்கும். மேலும் இது நீண்ட கால வெகுமதிகளை ஈர்க்கும். வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். எப்போதும் வாகனத்தை ஓட்டும் போது சூடான வாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தைக் கவனியுங்கள் மற்றும் அவருடன் நேரத்தை செலவிடுங்கள்.

கும்பம் - கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான முடிவுகளை வழங்கும். வாழ்க்கைக்காக அணுகுமுறையில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அதேப் போல் இக்காலகட்டத்தில் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சிக்கான சில வாய்ப்புக்களை பெறுவீர்கள். உங்களின் ஆன்மா பிரகாசமாக இருக்கும். மேலும் விரும்பிய முடிவுகளைப் பெறுவதற்கும், நிகழ்த்துவதற்கும் உங்களின் திறன் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க அவர்களின் முன் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இக்காலத்தில் உங்களின் அதிர்ஷ்டம் மிகச்சிறந்ததாக இருக்கும்.

மீனம் - மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் பேச்சு மிகவும் செல்வாக்குமிக்கதாக மாறும். அதை நீங்கள் உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயலுங்கள். பேசும் போது சொற்களை பார்த்து தேர்ந்தெடுத்து பேசுங்கள். இதனால் தேவையற்ற விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். மிகவும் அவசர காலத்தில் மட்டுமே கடன்களைப் பெற வேண்டும். உங்களின் செயல்களில் வெறித்தனத்தைத் தவிர்த்து, தேவையான இடங்களில் அனுபவசாலிகளிடம் சரியான வழிகாட்டுதலைத் தேடுங்கள்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0