இந்த 3 ராசிக்காரர்கள் இன்றைய தினம் கடன் வாங்கவே கூடாதாம்!
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றி பார்க்கலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 17ம் தேதி வியாழக்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
மேஷம் - உங்களது பெற்றோருடன் நல்லுறவை வைத்திருக்க முடிந்தளவு முயற்சிக்கவும். அவர்களது ஆசீர்வாதம் இருந்தால் நல்வழி பிறக்கும். உங்களது உழைப்பிற்கேற்ற பலனை இன்று பெறுவீர்கள். பண வரவு திருப்தி அளிக்கும். வர்த்தகர்கள் இன்றைய தினம் பெரிய பொருளாதார பலனைப் பெற போகிறீர்கள். பணிகளை முடிக்க முடியாமல் இருந்துவந்த தடைகளை விலகி, விரைந்து பணிகள் முடிக்கப்படும். வாழ்க்கை துணையுடன் சிறு சண்டைகள் உருவாகலாம். ஆரோக்கியம் இன்று சாதகமாக இருக்கும். இருப்பினும், மனஅழுத்தத்தை குறைத்துக் கொண்டால் உடல் ரீதியாக நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 10 மணி வரை
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களே இன்றைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. எனவே, இன்று உங்களுக்கு கவனமும் நிதானமும் தேவை. வாகனங்களில் போகும் போது மிகுந்த வேகத்தில் செல்வதை தவிர்க்கவும். வீண் பேச்சுக்கள் வேண்டாம். வியாபாரிகள், இன்று ஆபத்து நிறைந்த விஷயங்களில் ஈடுபடுவது சரியல்ல. வணிகர்கள், அனைத்து முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற பலனை பெறுவதோடு, வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு அதிகரிக்கும. ஆரோக்கியம் பற்றி பேசினால், உண்ணும் உணவில் கவனக்குறைவு இருந்தால் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட மதிப்பெண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:05 மணி வரை
மிதுனம் - வேலைப்பளு காரணமாக அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இருந்தால், இந்த கடின உழைப்பு உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வியாபாரிகள் இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். நிதி நிலை முன்னேற்ற சில சாதகமான சூழல் உருவாகும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பாதகமான சூழலில் வாழ்க்கைத் துணையுன் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் 10 மணி வரை
கடகம் - இன்றைய தினம் உங்களது திறமையைக் காட்ட பொன்னான வாய்ப்பைப் பெறலாம். கிடைக்கும் வாய்ப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்துக் கொள்ளுங்கள். பணம் விவகாரங்களில் அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். செலவுகளை யோசித்து செய்வது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உறவு வலுப்பெறும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும். இருப்பினும், மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 4: 20 முதல் மாலை 3 மணி வரை
சிம்மம் - சிம்ம ராசி நேயர்களே, இன்றைய தினம் கடன் வாங்குவதை தவிர்த்திடுங்கள். அலுவலகத்தில் அதிகப்படியான வேலை பளு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். அத்தகைய சூழலில், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இருப்பினும், நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டு வேலையை விரைந்து முடிக்க முயற்சிக்கவும். வணிகர்கள் இன்றைய தினம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று தனிமையில் இருக்க விருப்பம் அதிகரிக்கும். மன அமைதி கொள்ள விரும்பினால், தியானத்தில் ஈடுபடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை
கன்னி - கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில், யாருடனாவது பெரிய சண்டையிட வாய்ப்புள்ளது. இதுபோன்ற குழப்பங்களில் சிக்கி நேரத்தை வீணாக்காதீர்கள். வேலை அல்லது தொழில் பற்றி பேசினால், இன்று ஒரு கலவையான முடிவுகளை பெறுவீர்கள். மேலும், சில சிக்கல்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்தி, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 மணி முதல் 9:50 மணி வரை
துலாம் - இன்றைய தினம் துலாம் ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கும். திருமண வாழ்க்கை அதிகப்படியான மன அழுத்தம் நிறைந்து காணப்படுகிறதா? அப்படிப்பட்ட சூழலில் வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்த உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற நிலைமையில், பெரிய சமசரசங்களையும் செய்ய வேண்டியிருக்கும். உடல்நலம் பாதித்திருந்த தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடின உழைப்பை செலுத்தினால், கை மேல் பலன் கிடைக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். உடல்நலம் சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 முதல் மதியம் 12 மணி வரை
விருச்சிகம் - இல்லாதவர்களுக்கு உதவுவதற்கான பொன்னான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் ஈடுபாடு அதிகரிக்கக்கூடும். வேலை அல்லது தொழில், எதுவாக இருந்தாலும், இன்று நீங்கள் பல முக்கிய பணிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையில் நிமையை சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான சச்சரவை சமாளிக்க முடியும். பெற்றோருடனான உறவு மேம்படும். குறிப்பாக, தந்தை உதவியுடன் முக்கிய வேலை ஒன்றை நிறைவேற்ற முடியும். உடல்நிலை நன்றாக இருக்கும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். போதுமான தூக்கத்தை பெறுங்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:55 மணி வரை
தனுசு - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. கையில் உள்ள பணம் எளிதில் கரையும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இழக்கக்கூடாது. உங்களது முயற்சிகளை தொடருங்கள். இன்று அலுவலகத்தில் வேலை அழுத்தம் குறைவாக இருக்கும். மேலும், உங்கள் பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இது தவிர, உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு நல்லுறவு மேம்படும். வர்த்தகர்கள் சில புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு புதிய வணிகத்தில் முதலீடு செய்ய நினைத்தால், பொருத்தமான ஆலோசனையை எடுத்த பின்னரே உங்களது இறுதி முடிவை எடுக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
மகரம் - இன்று மகர ராசிக்காரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்வது நல்லது. உணவுகளை குறைத்துக் கொண்டு, லேசான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். அலுவலகத்தில் இன்றைய சூழல் ஏற்றத்தாழ்வுகளை நிறைந்ததாக இருக்கும். கடினமான பணிகள் காரணமாக இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். வியாபாரிகள், அதிகப்படியான நம்பிக்கை காரணமாக தவறான எந்தவொரு முடிவையும் எடுத்து விடாதீர்கள். இல்லையெனில், நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான அன்பு அதிகரித்து, வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
கும்பம் - செய்யும் வேலையில் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகளுக்கு இன்று பொன்னா நாள். எனவே, உங்களது நேரத்தை தேவையற்ற விஷயங்களுக்காக வீணடிக்காதீர்கள். கூட்டு தொழில் செய்வோர், வணிகர் தொடர்பான எந்தவொரு முக்கிய முடிவுகளையும் இன்றைய தினம் எடுக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் உருவாகலாம். பேச்சில் முரண்பாட்டை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் பற்றி பேசும் போது, இன்று சற்று சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 முதல் 9 மணி வரை
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். மேலும் நீங்கள் இன்று நேர்மறையாக உணர்வீர்கள். உங்களது ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியை காண்பீர்கள். அலுவலகத்தில் உங்களது கடின உழைப்பிற்கான இனிமையான பலன்களைப் பெறலாம். தொழில் தொடர்பான கவலைகள் இன்று நீங்கும். மேலும் உங்களது நம்பிக்கை அதிகரிக்கும். மறுபுறம், வர்த்தகர்கள் இன்று நல்ல பயனடையலாம். பணம் வரவு உண்டு. வீட்டின் சூழ்நிலை இன்று மிகவும் நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது உங்களது நாளை மகிழ்ச்சியாக மாற்றும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை