இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விடயத்தில் அலட்சியமா இருக்கக்கூடாதாம்….
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 1 திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் விவாதிக்கும் போது, தெளிவாகவும், வெளிப்படையாகவும் பேசவும். இல்லையெனில், குழப்பம் ஏற்படக்கூடும். வியாபாரிகளுக்கு தடைப்பட்ட வேலைகள் குறித்த கவலை நீங்கும். விரைவில் தொல்லைகள் அனைத்தும் நீக்கப்படும். தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி, முக்கிய விஷங்களில் கவனம் செலுத்தவும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், குடும்பத்திற்கு எதிரான எந்தவொரு காரியத்தையும் செய்யாதீர்கள். உடல்ரீதியான பிரச்சனைகளிலிருந்து விடுபட உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
ரிஷபம் - நிதி சிக்கல்களால் மன கவலை அதிகரிக்கும். பணம் இல்லாததால், உங்களின் முக்கியமான சில பணிகள் இன்று முழுமையடையாமல் போகலாம். வர்த்தகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள், தங்களின் செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்கவும். உங்கள் வேலையை கவனமாகவும் நேர்மையாகவும் முடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும். வீட்டுச் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யவும். ஆரோக்கியமாக இருக்க, முதலில் நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் நன்றாக நினைத்தால், எல்லாம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மிதுனம் - அதிகரித்து வரும் பணிச்சுமையால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிவடையும். பெரிய லாபத்தை எதிர்பார்க்கும் வர்த்தகர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். பொறுமையின் பலன் எப்போதும் இனிமையானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பப் பொறுப்புகளின் சுமையை நேர்மையாக நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். திருமணமானவர்கள், வாழ்க்கைத் துணையுடன் சிறு விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று மிகவும் சோர்வாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கடகம் - இன்று புதிய யோசனைகளால் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி உங்கள் பணி சீராக தொடரும். வணிகர்கள் இன்று பெரிய லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. உங்கள் பணியால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவர். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதலை மேம்படுத்த முயற்சிக்கவும். இன்று உங்களின் நிதி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை
சிம்மம் - இன்று வேலை முன்னணியில் மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று, சில புதிய பொறுப்புகளைப் பெறலாம். இருப்பினும், உங்கள் எந்த வேலையையும் அவசரப்படாமல் செய்ய வேண்டும். வர்த்தகர்கள் தங்கள் போட்டியாளர்களுடன் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு பெரிய சிக்கலை உருவாக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது. குழந்தைகளின் கல்வி குறித்த உங்கள் கவலை அதிகரிக்கக்கூடும். சில காரணங்களால் படிப்பில் பின்தங்கியிருந்தால், இன்று அவர்களுக்கு உதவ வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 மணி முதல் மாலை 5:00 மணி வரை
கன்னி - தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சமநிலையை நிலைநிறுத்துவதில் இன்று நீங்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடலாம். பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று சோம்பலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இன்று குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கியத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். பிறர் விஷயங்கள் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், ஒரு பெரிய சிக்கல் உருவாகும். இன்று மனரீதியாக சில கொந்தளிப்புகள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடவுள் வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இன்று திடீர் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மாலை 6:00 மணி வரை
துலாம் - நீங்கள் இன்று அலுவலகத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். மனக் கஷ்டங்கள் மற்றும் இல்லாமை காரணமாக, நீங்கள் இன்று வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. தவறான தகவல்களால் சிலர் உங்களை குழப்ப முயற்சிக்கலாம். எனவே, இன்று மிகவும் உஷாராக செயல்பட வேண்டும். இன்று சிறு சிறு செலவுகள் இருக்கக்கூடும். பழைய குடும்ப பிரச்சனைகளால் பதற்றம் அதிகரிக்கலாம். இத்தகைய சூழலில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. முடிந்தவரை, கோபப்படுவதை தவிர்த்திடவும். அனைவரையும் பணிவுடன் நடத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
விருச்சிகம் - உத்தியோகஸ்தர்களுக்கு இன்று ஒரு நல்ல நாள். புதிய திட்டத்தில் பணியைத் தொடங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இன்று நீங்கள் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் சமூக தூரத்தை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று எந்த பொருளாதார பிரச்சனையும் இருக்காது. உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரிவருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பெற்றோர்கள் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் உங்கள் சாதனைகள் குறித்து பெருமைப்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
தனுசு - இன்று உங்கள் நம்பிக்கை அதிகரித்து, நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், இன்று அலுவலகத்தில் மிகவும் கடினமான பணிகளைக் கூட சுலபமாக முடிக்க முடியும். உங்கள் கடின உழைப்பால் உயர் அதிகாரிகள் மிகவும் திருப்தி அடைவார்கள். வணிகர்களுக்கு இன்று நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பொறுப்புகளை சிறப்பாகச் செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் உற்சாகமும் மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள். மாலையில் நண்பர்களுடன் நடைப்பயணத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
மகரம் - இன்று உங்களுக்கு மிகவும் மறக்கமுடியாத நாளாக இருக்கும். திருமணமாகாதவர்கள், தங்களின் வாழ்க்கைத் துணையை சந்திப்பீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று வங்கியுடன் தொடர்புடையோர் மிகவும் பரபரப்பாக இருப்பர். அதிக பணிச்சுமை இருப்பதன் காரணமாக நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். வணிகர்களுக்கு இன்று நிதி பிரச்சனை அதிகரிக்கக்கூடும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும். பிடித்த உணவை விரும்பி உண்பதற்கான வாய்ப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கும்பம் - வேலை முன்னணியில், நீங்கள் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். குறிப்பாக அலுவலகத்தில் உங்கள் திறமையைக் காட்ட முழு வாய்ப்பையும் பெறுவீர்கள். வணிகர்கள், தங்கள் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல, தீவிரமாக சிந்திக்க வேண்டும். நிதி நிலைமை பற்றி பேசும்போது, நீங்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் பணம் தொடர்பான எந்த பெரிய முடிவையும் எடுக்காவிட்டால் நல்லது. அத்தகைய விஷயத்தில் அவசரப்படுவது சரியல்ல. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசினால், வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் 10:00 மணி வரை
மீனம் - உத்தியோகஸ்தர்கள், இன்று தங்களில் பணியில் சில தவறுகளை செய்யக்கூடும். இதனால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். வணிகர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். பெரிய நிதி சலுகைகளைப் பெறுவீர்கள். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்கள் பாதகமான சூழ்நிலைகளில் ஆதரிக்கப்படுவார்கள். திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். உங்களுக்கிடையேயான புரிதலை அதிகரிக்க முயற்சிப்பது நல்லது. இல்லையெனில், உங்களிடையேயான இடைவெளி அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதை இன்றைய தினம் தவிர்த்திடவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை