இந்த ராசிக்காரர்கள் இன்றைய தினம் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது…
இன்று மேஷ ராசி அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இன்றைய தினம் அலுவலகத்தில் சாதகமான சூழலாக இருக்காது. உயர் அதிகாரிகளின் பார்வை உங்கள் மீது விழும் என்பதால், செய்யும் வேலைகளில் மிகுந்த கவனத்தோடு இருக்கவும். தேவையற்ற விவாதம், ஆவேசமான பேச்சு ஆகிறவற்றை தவிர்த்துக் கொள்ளவும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களது கனவு வேலையை பெறுவதற்கான வாய்ப்பு தேடி வரப்போகிறது. வணிகர்கள் இன்றைய தினம் நல்ல லாபம் ஈட்ட முடியும். பொருளாதாரத்தை பொறுத்தவரை அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையேயான கவலைகள் அகலும். ஆரோக்கியத்தை பற்றி பேசினால், நாள்பட்ட நோயால் அவதிக்குள்ளாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை
ரிஷபம் - அலுவலக முடிவுகளை மிகுந்த கவனத்தோடு, பலமுறை யோசித்த பின்னர் எடுக்கவும். மாற்று வேலை பற்றி யோசிப்பவர்கள். இன்றைய தினம் அவசரப்பட வேண்டாம். வணிகர்கள் பெரிய முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் இன்று நல்ல நாள். குடும்பத்தில் சாதகமான சூழல் இருந்தாலும், சில மாற்றங்கள் ஏற்படலாம். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வாழ்க்கை துணையில் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பண வரவு திருப்தியளிக்கும். பழைய கடன்களை செலுத்தி முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தசை சார்ந்த அசௌகரியத்தை உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை
மிதுனம் - அலுவலகத்தில் சக ஊழியர்களை காட்டிலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களது கடின உழைப்பாலும், நேர்மையாலும் உயர் அதிகாரிகள் ஈர்க்கப்படுவர். வணிக விரிவாக்கத்திற்கு சிறப்பான தருணமிது. இருந்தாலும், நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். திருமண வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். இன்றைய தினம் பயணம் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் 11 மணி வரை
கடகம் - சில குடும்ப பிரச்சனைகளால், அலுவலக வேலை பாதிக்கலாம். கவலைகள் அனைத்தையும் மறந்து, வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வர்த்தகர்கள் இன்று பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்த்திடவும். இரும்பு வியாபாரிகள், பெரிய விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக எடுத்து வந்த முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு வலுவான வாய்ப்புள்ளது. தொடர்ந்து கடின உழைப்பினை செலுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் உங்களது கனவை நனவாக்கிட முடியும். பண வரவு திருப்தியளிக்கும். இன்றைய தினம் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்த்திடவும். சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 9:15 மணி வரை
சிம்மம் - வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது பணிக்கு பாராட்டும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். வணிகர்கள் இன்ற நஷ்டத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. பண விவகாரத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திசாலிதனமாக செயல்படாவிட்டால் இழப்பு உங்களுக்கு தான். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். இன்று தந்தையிடம் இருந்து எதிர்பாராத பரிசு ஒன்றை பெறலாம். அதனால் உங்களின் மகிழ்ச்சி அதிகரித்திடும். ஆரோக்கியம் விஷயத்தில் அலட்சியப்போக்கை தவிர்த்திடவும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் 9 மணி வரை
கன்னி - பண வரவு திருப்தியளித்தாலும், விருப்பிய சேமிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதுபோன்ற நேரங்களில், நிதி முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், வாழ்க்கை துணையுடன் உறவை வலுப்படுத்த முயற்சி செய்யுங்கள். நம்பிக்கையை அதிகரிக்க முயற்சியுங்கள். வேலையில் சில முரண்பாடுகளை சந்திக்கலாம். அலுவலகத்தில் கூடுதல் வேலை ஒதுக்கப்படலாம். இதற்காக கூடுதல் நேரத்தை ஒதுக்கவேண்டியிருக்கும். வணிகர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு நிதி ரீதியாக பயனடையலாம். ஆரோக்கியம் பற்றி பேசினால், சரும பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் 9:15 மணி வரை
துலாம் - பணப்பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். நிதி கட்டுப்பாடுகள் காரணமாக சில முக்கிய பணிகள் பாதியிலேயே நிற்கக்கூடும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிசெய்தால், அதனை உடனே செய்யுங்கள். குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களோடு சில கருத்து வேறுபாடு உருவாகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும். அலுவலகம் அல்லது தொழில் சார்ந்து எடுத்த வேலைகள் சீராக முடிக்கப்படும். உடல்நலம் பற்றி பேசினால், நோய்தொற்று அல்லது ஒவ்வாமை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை
விருச்சிகம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், மருந்துகளை சரியான நேரத்தில் எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும், மருத்துவரின் ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள். பொருளாதார நிலைமை மேம்படும். நீங்கள் ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். நீங்கள் இன்று வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் காதலிப்பவராக இருந்தால், சில வெற்றிகளைப் பெறலாம். நாளின் இரண்டாம் பகுதியில் பழைய நண்பர்களை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் இரவு 8:15 மணி வரை
தனுசு - கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் இருந்தால், இப்போது எதிர்பார்த்ததை பெறுவதற்கு நேரம் வந்துவிட்டது. வணிகத்தை வளர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலகத்தில் சில தடைகள் ஏற்படக்கூடும். அந்த தடைகளை சமாளிக்க கடினமாக போராட வேண்டியிருக்கும். இறுதியில் வெற்றி உங்கள் வசமாகும். எனவே, எத்தகைய சூழலிலும் நேர்மறையான எண்ணங்களுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். தந்தையின் உதவியுடன் நிதி பிரச்சனையை தீர்க்க முடியும். ஆரோக்கியத்தை பற்றி பேசினால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:15 மணி முதல் இரவு 8:45 மணி வரை
மகரம் - இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை இருக்கும். நீண்ட காலமாக எதிர்கொண்டு வந்த சட்ட பிரச்சனையில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. இதனால் பெரிய கவலை நீங்கிடும். பண வரவு திருப்தி அளிக்கும். வரவிற்கேற்ற செலவு செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் மீண்டும் பழைய அன்பையும், ஆர்வத்தையும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். உங்களது அன்பையும், அருமையையும் புரிய வைக்க சிறிது இடைவெளியை பின்பற்றவும். வேலை தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
கும்பம் - வீட்டில் வயதில் பெரியவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவு வலுபெறுவதோடு, அன்பும், நம்பிக்கையும் வளரும். இன்று வர்த்தகர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கவனத்தோடு பணிபுரிந்தால், எதிர்பார்த்த முடிவை பெற்றிடலாம். அலுவலக சூழல் நன்றாக இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். சேமிப்பில் வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடன் தொகை எங்காவது சிக்கியிருந்தால், அதனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல்நலம் பற்றி கவலை தேவையில்லை.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: இரவு 9:20 முதல் 10 மணி வரை
மீனம் - அலுவலகத்தில், நீங்கள் இன்று சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும். அலுவலகத்தில் நடக்கும் அரசியல் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில், தேவையற்ற பிரச்சனையில் சிக்கக்கூடும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்பவராக இருந்தால், உங்கள் கூட்டாளருடன் வாதங்களைத் தவிர்க்கவும். இது வணிகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். குடும்ப குடும்பத்தாருடனான உங்கள் உறவுகள் நன்றாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைதுணையுடன் கூடுதல் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவருக்கு பரிசு வழங்க நல்ல நாள். பண வரவு திருப்தியளிக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடாதீர்கள். உங்கள் அலட்சியம் ஒரு பெரிய உடல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட மதிப்பெண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை