மனைவியோடு சண்டையிடுவதை இந்த 3 ராசிக்காரர்களும் தவிர்ப்பது நல்லது!

கிரக நிலைகள் எப்படி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள உதவுவது தான் ஜாதகம். தினசரி நமது ராசிக்கான பலன்களை தெரிந்து கொண்டால் அன்றைய தினத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும். 

மனைவியோடு சண்டையிடுவதை இந்த 3 ராசிக்காரர்களும் தவிர்ப்பது நல்லது!

இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

மேஷம் - கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பயன்படுத்தும் வார்த்தைகளில் நிதானம் தேவை. இன்று பெரிய சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வணிகர்ளுக்கு இன்று ஒரு கலவையான சூழல்களை சந்திக்கக் கூடும். பண வரவு திருப்தி அளிக்கும். உங்களது சேமிப்பால் பயனடைவீர்கள். குடும்ப உறவுகள் வலுபெறும். வாழ்க்கை துணையின் உதவி மகிழ்ச்சியளிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 முதல் 9:50 வரை

ரிஷபம் - மனஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டு உறுப்பினர்களுடனான தவறான புரிதலால் பிரச்சனைகள் மேலோங்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை ஆராய வேண்டும். தந்தையின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வணிகர்களின் நீண்ட நாள் கனவு, இன்று நனவாக போகிறது. இத்தனை நாள் செலுத்திய கடின உழைப்பின் பலன் கிடைக்கப்போகிறது. திடீர் வருவாய் மகிழ்ச்சியடையச் செய்யும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:55 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மிதுனம் - அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டுமென்றால், அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க முயலுங்கள். வீண் விவாதங்கள், தேவையற்ற சந்தேகங்களுக்கு இடமளிக்க வேண்டாம். அதிகப்படியான மனஅழுத்தத்தால் உடல்நலம் பாதிக்கக்கூடும். வியாபாரிகளுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கப்போகிறது. வணிகர்கள் முன்னேற்றத்திற்காக எடுத்த முடிவுகளால் பயனடைவர். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். தந்தைகளின் உடல்நலம் பாதிக்க வாய்ப்பிருப்பதால், அதிகப்படியான அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:55 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கடகம் - உங்களது நீண்ட கால விருப்பம் ஒன்றை இன்று நிறைவேற்றுவீர்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள். நேர்மறை எண்ணங்களால் நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டை பெறுவீர்கள். பழ வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையிடமிருந்து வரக்கூடிய ஒரு நற்செய்தியால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பண வரவு திருப்தி அளிக்கும். உடல்நலத்தை பொறுத்தவரை, பழைய உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 8:45 மணி வரை

சிம்மம் - ஆரோக்கிய குறைப்பாட்டால் இன்றைய தினம் சிறப்பானதாக அமையாது. உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை முறையாக செய்வதன் மூலம் உடல்நலத்தை பாதுகாக்கலாம். உங்களது உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியிருக்கும். அலுவலக வேலைகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தேவையற்ற சிறு கவனக்குறைவால் சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். வணிகர்கள் இன்று பெரிய நிதி இழக்கை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். அவசர முடிவுகள் அவஸ்தையில் முடிந்துவிடும். வாழ்க்கை துணையில் நேரம் செலவிட முயற்சிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:10 மணி முதல் மாலை 3:50 மணி வரை

கன்னி - குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் அமைதி நிலவும். அன்புக்குரியவர்களிடன் அன்பும், ஒத்துழைப்பும் சிறப்பாக உணரச்செய்யும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்று உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உங்களது பணி ஃபேஷனுடன் தொடர்புயது என்றால், இன்று நல்ல பலனை பெறுவீர்கள். வணிகர்கள், கடந்த காலத்தில் செய்த ஒரு முதலீட்டால் தற்போது லாபம் காண்பர். வீட்டில் செலவு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் 11:00 மணி வரை

துலாம் - பணிச்சுமை அல்லது அதிக வேலை காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். வணிகர்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டிய நாள். உங்ளது மிகப்பெரிய திட்டங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பது நல்லது. பண வரவு திருப்தி அளிக்காது. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது முயற்சிக்கவும். திருமணமானவர்கள், உங்களது வாழ்க்கை துணையுடனான வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. உங்களது கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்காமல் போகலாம். உங்களது வேலையார் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியடைய மாட்டார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரக்தியுடனும், அவநம்பிக்கையுடனும் இருக்க வேண்டியதில்லை. பொறுமையாக இருப்பதன் மூலம் கடின உழைப்பின் பலனை நீங்கள் நிச்சயமாகப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் மேற்கொள்பவர்கள், புதிய பணியை தொடங்குவதற்கான ஒப்புதல் கூட்டாளிகளிடம் இருந்து கிடைக்காது. மாணவர்களின் விடா முயற்சியால் நல்ல செய்தி தேடி வரும். வீட்டில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கை துணையின் உடல்நிலை பாதிக்கக்கூடும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தனுசு - இன்று சற்று கடினமாக நாளாக இருக்கப்போகிறது. திட்டமிட்ட காரியங்களில் தடை ஏற்படலாம். தேவையற்ற கோபத்தால் சூழ்நிலைகள் மோசமாக வாய்ப்புள்ளது. எனவே, உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். உங்களது கவனிப்பால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகர்கள், இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். பெரும் இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. நிலுவை பணிகளை விரைந்து முடிக்க முயற்சிப்பீர்கள். நாளின் பிற்பகுதியில், வாழ்க்கை துணையுடன் சண்டைகள் உருவாகலாம். உடல்நலம் பலவீனமடைய வாய்ப்புள்ளது. எனவே, உணவில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:05 மணி வரை

மகரம் - எடுத்த வேலையை வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள். உயர் அதிகாரிகள் சில முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கலாம். உங்களது கடின உழைப்பால் அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும். வணிகர்களுக்கு லாபம் நிறைந்த நாளாக இருக்கும். பெரிய சலுகை ஒன்றை பெறப்போகிறீர்கள். உங்களது நேர்மறையான எண்ணங்களால் பிறரால் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள். சமுதாயத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். பண வரவு திருப்தி அளிக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கும்பம் - உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகம் குறித்து எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவில் ஆழமான பிளவு ஏற்படக்கூடும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களது வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியுடன், வேலைகளை செய்து முடிப்பீர்கள். வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். குறுக்குவழி முறையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதால் இன்று நீங்கள் சில சிக்கல்களில் சிக்கலாம். நிதி சார்ந்த முடிவுகளை கவனத்துடன் எடுப்பது நல்லது. வீட்டின் சூழல் மிகவும் இனிமையாக இருக்கும். வீட்டில் உங்கள் பெரியவர்களுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நீங்கள் மேற்கொள்ளலாம். நீங்கள் இன்று உற்சாகமாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:05 மணி முதல் இரவு 9:30 மணி வரை

மீனம் - அலுவலகத்தில் உங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வருமானம் அதிகரித்தாலும், செலவுகளும் அதற்கேற்ப அதிகரிக்கக்கூடும். வாழ்க்கை துணையுடனான தவறான புரிதலால், கருத்து வேறுபாடு உருவாகலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வாழ்க்கை துணையுடனான சண்டை விரக்தியடையச் செய்யும். மாணவர்களுக்கு கல்வித்துறையிர் தடை ஏற்படக்கூடும். உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

like
0
dislike
1
love
0
funny
0
angry
0
sad
0
wow
0