இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...

அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். 

இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...

ஜனவரி 24, 2021 முதல் ஜனவரி 30, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இந்த வாரம் உங்களுக்கு கடினமான வாரமாக இருக்கும். வேலையாகட்டும், வணிகமாகட்டும், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மறுபுறம், பணிபுரிபவர்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது. இதுவரை படிப்பில் தடையை சந்தித்த மாணவர்கள், தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும். பணத்தைப் பொறுத்தவரை, செலவு அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க பட்ஜெட்டை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நாள் - வியாழன்

ரிஷபம் - இந்த வாரம் உங்களுக்கு வேலை முன்னணியில் மிகவும் முக்கியமான வாரமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரியின் மரியாதை உங்களுக்கு கிடைக்கும். உங்களின் வேலையால் உயர் அதிகாரிகள் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பார்த்து, உங்கள் முன்னேற்றத்தை தீர்மானிப்பார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்பவர்கள் பெரிதும் பயனடையலாம். நிலுவையில் உள்ள உங்களின் வேலை, இந்த வாரத்தில் நிறைவடையும் வாய்ப்புள்ளது. பண நிலைமை அற்புதமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு இந்த வாரம் நன்றாக இருக்காது. உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண் - 26

அதிர்ஷ்ட நாள் - செவ்வாய்

மிதுனம் -வியாபாரிகளுக்கு, இந்த வாரம் தங்கள் வணிகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த முடிவைப் பெறாவிட்டால், ஏமாற்றமடைய வேண்டாம். அதற்கு பதிலாக கடினமாக உழையுங்கள். இதனால் விரைவில் நிலைமை மேம்படும்.அதே சமயம் உங்களின் வணிக திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவசரப் பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இந்த வாரம் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். மேலும் இந்த வாரம் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - அடர் நீலம்

அதிர்ஷ்ட எண் - 45

அதிர்ஷ்ட நாள் - திங்கள்

கடகம் - இந்த வாரம் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிப்பதில் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை மற்றும் வீட்டில் உங்களின் பொறுப்புக்கள் அதிகரிப்பதால், சற்று அழுத்தத்தை உணர்வீர்கள். குறிப்பாக வாரத்தின் ஆரம்ப நாட்கள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த வாரம் உங்களின் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்துங்கள். பணிபுரிபவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு வாரத்தை கழிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் உங்களில் பல முக்கிய வேலை சரியான நேரத்தில் முடிக்கப்படும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கக்கூடும். பணத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் மனைவியின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் - 25

அதிர்ஷ்ட நாள் - வியாழன்

சிம்மம் - வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அலுவலகத்தில் அனைத்து வேலைகளும் எவ்வித இடையூறுமின்றி முடிக்கப்படும். உங்களின் நிர்வாகம் நன்றாக இருக்கும் மற்றும் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையால் ஈர்க்கப்படுவார்கள். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பின் நல்ல முடிவுகளைப் பெறலாம். வணிகர்கள் நல்ல லாபத்துடன் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இந்த வாரம் ஏழைகளுக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான வேறுபாடுகள் ஆழமடையக்கூடும். உங்கள் வார்த்தைகள் தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கும். எனவே உங்கள் பேச்சை கவனித்து பேசுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையானதாக இருக்கும். இந்த வாரம் உங்கள் தாயின் உடல்நலத்தை சற்று கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 16

அதிர்ஷ்ட நாள் - புதன்

கன்னி - இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் நன்றாக இருக்காது. தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்குவீர்கள். நிறைய கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும். பணியைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். ஈகோ மற்றும் மோதலைத் தவிர்த்திடுங்கள். அரசு வேலைகளில் பணிபுரியும் மக்களுக்கு நேரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த வாரம் பெரிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். சட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரும பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்ட எண் - 27

அதிர்ஷ்ட நாள் - திங்கள்

துலாம் - இந்த வாரம் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வாதாடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் தேவையற்ற சிக்கலில் சிக்குவதோடு, உறவுகளையும் பாதிக்கும். வேலையைப் பற்றி பேசினால், உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி நீங்கள் அலுவலகத்தில் நடப்பது நன்மை பயக்கும். உங்களின் வணிகத்தை மேம்படுத்துவது பற்றி யோசிப்பவரானால், இந்த வாரம் உங்கள் திட்டம் நிறைவேறும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் திடீரென்று பெரிய செலவு செய்ய வேண்டியிருக்கும். உடல்நலம் பற்றிப் பேசும் போது, ​​அதிக மன அழுத்தம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்ட எண் - 15

அதிர்ஷ்ட நாள் - வெள்ளி

விருச்சிகம் - இந்த வாரம் உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளாவிட்டால், திருடப்படலாம். வேலையைப் பொறுத்தவரை, எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் அனுபவமுள்ளவரின் ஆலோசனையைப் பொறுவது நன்மை பயக்கும். அவசரமாக முடிவெடுத்தால் பிரச்சனை சந்திக்க நேரிடும். ஆன்லைனில் வணிகம் செய்பவர்கள், இந்த வாரம் நிதி ரீதியாக பயனடையலாம். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, வீட்டின் அமைதியைக் காக்க உங்கள் நடத்தையில் சிறு மாற்றங்களை செய்யுங்கள். உங்களின் ஆக்ரோஷமான தன்மை வீட்டின் சூழலை கெடுத்துவிடும். முக்கியமாக உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். முடிந்தால் அவர்களை வெளியே அழைத்துக் கொண்டு செல்லுங்கள். நிதியைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 20

அதிர்ஷ்ட நாள் - சனி

தனுசு - இந்த வாரம் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், அலட்சியமாக இருக்காதீர்கள். வாரத்தின் ஆரம்ப நாட்கள் சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதன் பின் அற்புதமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் தந்தைக்கு சில பெரிய வெற்றிகள் கிடைக்கலாம். பணப்பிரச்சனை தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக பெற்றோரின் ஆதரவுடன் பாசமும் கிடைக்கும். இதனால் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நாள் - திங்கள்

மகரம் - இந்த வாரம் வேலை முன்னணியில் நல்ல பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக வேலையை உங்கள் அணியினருடன் சேர்ந்து சிறப்பாக முடிப்பீர்கள். வணிகர்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் கலவையான முடிவுகளைத் தரும். இந்த வாரம் கடன்கள் அதிகரிக்கும். நிதி விஷயங்களில் அலட்சியமாக இல்லாமல் இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் புரிதல் மேம்படும் மற்றும் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 38

அதிர்ஷ்ட நாள் - செவ்வாய்

கும்பம் - இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். ஒருபுறம் கடுமையாக உழைப்பீர்கள். மறுபுறம் அதிர்ஷ்ட காற்று வீசும். இந்த வாரம் சில்லறை வர்த்தகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நிதி ரீதியாக பயனடையலாம். அதே நேரத்தில், வேலை செய்யும் மக்களுக்கும் முன்னேற்றத்தின் பாதை திறக்கப்படும். மூதாதையர் சொத்து தொடர்பான எந்தவொரு சர்ச்சையும் தீர்க்கப்படுவதால் இந்த முடிவு உங்களுக்கு ஆதரவாக வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்வீர்கள். வார இறுதியில் சில விருந்தினர்களின் வருகையுடன், வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா

அதிர்ஷ்ட எண் - 13

அதிர்ஷ்ட நாள் - வியாழன்

மீனம் - இந்த வாரம் வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வேலையில்லாதவர்கள் இந்த வாரம் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. வாரத்தின் நடுப்பகுதியில், திடீரென்று ஒரு பெரிய சர்ச்சை எழலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பீர்கள். மறுபுறம், மிகவும் கடினமான சூழ்நிலையில், உங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, ​​இந்த காலகட்டத்தில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வெளிரிய மஞ்சள்

அதிர்ஷ்ட எண் - 29

அதிர்ஷ்ட நாள் - ஞாயிறு

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0