இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் இதனை செய்வதை தவிர்க்க வேண்டுமாம்...!
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். ஜனவரி 31, 2021 முதல் பிப்ரவரி 06, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இந்த வாரம் நீங்கள் உங்கள் கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாடற்ற கோபத்தால் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். இதை மனதில் வைத்து, அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களுடனும் நல்லுறவை வைத்திருக்க முயற்சிக்கவும். வணிகர்கள் இந்த வாரம் நல்ல பலன்களைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உங்கள் குடும்பத்தினருடன் நன்றாக நேரத்தை செலவிடலாம். குறிப்பாக பெற்றோருடனான உங்களது உறவு வலுப்பெறும். அன்புக்குரியவருக்கும் போதுமான நேரம் கொடுக்க முயற்சிப்பது நல்லது. இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் கல்வியில் இருந்துவந்த தடை நீங்க ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த காலக்கட்டத்தில், நீங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுவதை தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் காயமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
ரிஷபம் - இந்த வாரம், தேவையற்ற பேச்சைத் தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள், இன்று சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாற்று வேலை பற்றி சிந்திப்போர், அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். நிதி நிறுவனங்களில் பணியாற்றுவோர் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். சிறு கவனக்குறைவால் கூட நிறைய சிக்கலை சந்திக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில், இந்த வாரம் கலவையான முடிவுகளைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில், வார்த்தைகளை பார்த்து பயன்படுத்தவும். பொருளாதார முன்னணியில், இந்த வாரம் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடல்நலனில், கை, கால்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
மிதுனம் - இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக ஆஸ்துமா இருப்பவர்கள், அலட்சியமாக இருக்க வேண்டாம். அவ்வப்போது, மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வாரத்தில், உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். சோம்பலைக் கைவிட்டு உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். வணிகர்கள், இந்த வாரம் திடீரென நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். மரம் தொடர்பான தொழில் செய்வோர் இந்த காலகட்டத்தில் சில பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். வார இறுதியில் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கடகம் - குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டு சூழலில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். இந்த வாரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பை பெறலாம். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் திருமணம் கைகூட வலுவான வாய்ப்புள்ளது. பண நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் பெரிய செலவு மனநிலையில் இருந்தால், அதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் முழு வேலையையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. அப்போது தான் எல்லா வேலைகளையும் எந்த அழுத்தமும் இல்லாமல் முடிக்க முடியும். கூட்டு தொழில் செய்வோருக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
சிம்மம் - புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது சாதகமான நேரமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். மிகவும் கடினமான வேலைகளை கூட மிக எளிதாக செய்திட முடிக்க முடியும். இதனால், உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை போன்றவற்றில் பணிபுரிவோருக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பால் மகிழ்ச்சி இருக்கும். பொருளாதார விஷயங்களில் யோசித்து முடிவுகளை எடுக்கவும். கடன் வாங்கும் எண்ணம் இருந்தால், அதை தவிர்த்திடவும். உண்ணும் உணவில் கவனம் செலுத்தவும். இல்லையெனில், ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நாள்: புதன்
கன்னி - இந்த வாரம் பணி முன்னணியில் உங்களுக்கு நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது சிறந்த நிர்வாகத்தால் உயர் அதிகாரிகள் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். உங்களுக்கு சில முக்கியமான பொறுப்பும் வழங்கப்படலாம். வணிகர்கள் நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். குறிப்பாக பெரிய முதலீட்டுகள் செய்வதை இந்த வாரம் அதைத் தவிர்த்திடவும். இந்த காலகட்டத்தில் வீட்டின் பெரியவர்களுடனான உறவை சரியாக வைத்திருக்க முயற்சிக்கவும். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், அவர்களின் வார்த்தைகளை புறக்கணிக்காதீர்கள். பணத்தைப் பற்றி பேசினால், இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. பண பற்றாக்குறையால், உங்களுக்கு சில வேலைகள் முழுமையடையாமல் போகலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட, அதை புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை
துலாம் - கடந்த வாரத்தைப் போலவே, இந்த வாரமும் உங்களுக்காக வேலை முன்னணியில் பரபரப்பாக இருக்கும். வேகமாக வேலை செய்தால் உங்கள் எல்லா பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இது தவிர, வேலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள். இல்லையெனில், அவை காணாமல் போக வாய்ப்புள்ளது. வணிகர்கள் இன்று பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடவும். கல்வி தொடர்பான பணி புரிவோருக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், உடன்பிறப்புகளிடமிருந்து நிதி நன்மையை பெற வாய்ப்புள்ளது. வார இறுதியில் நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
விருச்சிகம் - சில காலமாக தடைப்பட்ட சில முக்கியமான பணிகள் இந்த காலகட்டத்தில் நிறைவடைய வாய்ப்பு அதிகம். இதன் மூலம் நீங்கள் நிதி ரீதியாக பயனடையலாம். வர்த்தகர்கள் இந்த காலகட்டத்தில் பேச்சில் கவனம் செலுத்தவும். பெரிய வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் அனைத்து வேலைகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். சொத்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்க முடியும். வார இறுதியில், வாழ்க்கைத் துணைக்கு உடல்நலப் பிரச்சனை இருக்கலாம். அவர்களை சிறப்பாக கவனித்துக்கொள்வது நல்லது. பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் வரவிற்கேற்ப செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. உடல்நிலையைப் பொருத்தவரை, உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், மன அழுத்தத்தையும் கோபத்தையும் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
தனுசு - வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு நல்லதாக இருக்காது. இந்த வாரத்தில் மனதில் பல கவலைகள் இருக்கும். கடந்த காலத்தை மறந்து புதிய தொடக்கத்தை உருவாக்க முயற்சிப்பது நல்லது. வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் நீண்ட காலமாக வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த வாரம் நீங்கள் விரும்பும் வேலையைப் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சிப்போர் இந்த வாரம் வெற்றியைப் பெறலாம். இந்த நேரம் வணிகர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பெரிய லாபம் ஈட்ட விரும்பினால், வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு பலவீனமடையக்கூடும். உங்களுக்கிடையேயான கசப்பு உங்கள் பிள்ளைகளுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், மாறிவரும் வானிலை காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மகரம் - உங்கள் பணி ரியல் எஸ்டேட் தொடர்பானது என்றால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய முதலீட்டைத் திட்டமிட்டிருந்தால், இந்த வாரம் அதற்கு சாதகமானது. நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அலுவலகத்தில் முதலாளியுடன் உங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பணம் தொடர்பான சிக்கல் இருக்கலாம். இந்த காலகட்டத்தில், கடும் போராட்டத்திற்கு பிறகும் உங்கள் நிதி முயற்சிகள் தோல்வியடையக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பு அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலையில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள், இந்த நேரத்தில் அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை
கும்பம் - வேலையைப் பற்றிப் பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், உங்கள் உயர் அதிகாரிகளுடன் வெளிப்படையாக பேச வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். சில்லறை வர்த்தகர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். அழகுசாதனப் பொருட்கள், இரும்பு, போக்குவரத்து போன்றவற்றில் பணிபுரிவோர் கலவையான முடிவுகளைப் பெறலாம். உடன்பிறப்புகளுடனான உறவு கொஞ்சம் மோசமாக இருக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படவில்லை என்றால், வீட்டு சூழ்நிலை மோசமடையலாம். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் நன்றாக இருக்கும். ஆனால் நடுவில் சில பெரிய செலவுகள் ஏற்படலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் உங்களுக்கு காது தொடர்பான சில சிக்கல்கள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மீனம் - குடும்ப பிரச்சனைகளால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். மனக் கஷ்டங்கள் காரணமாக உங்கள் வேலையில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உத்தியோகஸ்தர்கள் முன்னேற விரும்பினால், வேலையில் அலட்சியமாக இருக்க வேண்டாம். அரசு பணியாற்றுவோர் மிகச்சிறிய பணிகளைக் கூட மிக கவனமாக செய்ய வேண்டியிருக்கும். சிறு தவறும் பெரும் இழப்பை ஏற்படலாம். மருந்து வியாபாரம் செய்வோர் இந்த வாரம் மிகவும் லாபகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு மிக நல்லதாக இருக்கும். இந்த வாரம் பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில், உடல்நலம் வெகுவாகக் குறையக்கூடும். வேலையுடன் சேர்த்து உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: வியாழன்






