இன்றைய ராசிபலன் (31 ஜூலை 2021)

இன்று பயணத்தால் அலைச்சல் ஏற்படும் என்றாலும், உங்களுக்கு நற்பலன் ஏற்படும். சிந்தனை சிறப்பாக இருக்கும். உங்களின் கடன் தொல்லை குறையும்.

இன்றைய ராசிபலன் (31 ஜூலை 2021)

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...

மேஷம்

இன்று பயணத்தால் அலைச்சல் ஏற்படும் என்றாலும், உங்களுக்கு நற்பலன் ஏற்படும். சிந்தனை சிறப்பாக இருக்கும். உங்களின் கடன் தொல்லை குறையும். உங்கள் தொழில் வியாபாரத்தில் எதிபார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். ஆரோக்கியம் முன்னேற்றத்தைத் தரும். நீண்ட நாட்களாக உங்கள் செயலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

ரிஷபம்

உங்கள் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். தொழில். வியாபாரத்தில் இன்று நாள் கடைசியில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெற்றிடுவீர்கள். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருளை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்

சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக நிலை ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பது சந்தேகமே. வம்பு, வழக்குகளில் சாதகமற்ற நிலை இருக்கும் என்பதால், பொறுமையைக் காக்கவும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிலும் எடுத்ததும் வெற்றி கிடைக்க வேண்டும் என அவசரப்படுவது நல்லதல்ல. உத்தியோகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் இடையூறு ஏற்படலாம், பலன் கிடைக்க தாமதமாகும். உங்கள் மீதான வதந்தி கிளம்பும், இருப்பினும் அதை பொருட்படுத்த வேண்டாம். உத்தியோகத்தில் சில சலுகைகளை எதிர்பார்க்கலாம். பல மக்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

இன்று நீங்கள் மந்தமாக உணரலாம், உங்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம், இது வேலையில் உங்களை பாதிக்கலாம். நீங்கள் தேவையற்ற பயத்தில் நாள் முழுவதும் இருப்பீர்கள், இது உங்களை உணர்ச்சிவசப்படச் செய்யும். வாகனம் ஓட்டுதல் மற்றும் சாகச சுற்றுப்பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். ஆலயங்களுக்கு சென்று வர மன அமைதி கிடைக்கும். வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதால் உங்களின் பிரச்னைகளை எளிதாக கையாள முடியும். சில நேரங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள்.

கன்னி

இன்று மாலை வரை உங்களுக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும் . மாலையில் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. இன்று நீங்கள் உங்கள் வாழ்வில் செய்த தவறுகளை உணர்ந்து செயல்பட தொடங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் நம்பிக்கை அதிகரிப்பதோடு, உங்கள் குடும்பத்தில் துணையுடனான நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் மன அமைதி கிடைக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நலம். நீங்கள் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாகலாம். இருப்பதை அனுபவிப்பதற்கு கூட தடை ஏற்படலாம்.

துலாம்

உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். பணியிடத்திலும், தொழிலிலும் உங்கள் எதிரிகள், போட்டியாளர்கள் கட்டுக்குள் வருவர். வர வேண்டிய பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில் உங்கள் மீதான பொறுப்பு அதிகரிக்கும். பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும். முடிந்த வரை தூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது. சில நாட்களாக இருந்த மனக்குழப்பங்கள் எல்லாம் விலகி நிம்மதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

விருச்சிகம்

குழந்தை வரத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்க அல்லது அதற்கான நற்செய்தி கிடைக்கும் அற்புத நாள். இன்று உங்கள் குழந்தைகளுடன் நேரம் அதிகமாக செலவாகும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வணிகத்தில் உங்களின் சிறப்பான திறமையால் புதிய விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்வில் சச்சரவுகள் நீங்கும். மாணவர்கள் வெளிநாடு படிப்பு கனவு நினைவாகலாம். உயர்கல்வி திட்டங்கள் நிறைவேறலாம்.

தனுசு

வேலையில் ஏமாற்றத்தை உணரலாம். அதனால் மிக கவனமாக உங்கள் வேலையை செய்து முடிக்கவும். திட்டமிடல் மிகவும் அவசியம். சொத்து சார்ந்த விஷயங்களில் சில இழப்புகள் ஏற்படலாம். அதனால் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பெற்றோர் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். அனைத்தையும் தாண்டி வாழ்வில் இனிமையான் சில விஷயங்கள் நடக்கும். நண்பர்கள் மூலம் ஒரு ஏற்றமிகுந்த பலன் உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் எளிதில் கைக்கூடும்.

மகரம்

இன்று உங்களுக்கு பல வகையில் நற்பலன் கிடைக்கும். உங்களின் வலிமை அதிகரிக்கும். வேலையில் சில கடினமான விஷயங்களை செய்வதோடு, கடின முடிவையும் எடுப்பீர்கள். சமூக வலைத்தளத்தில் மும்முரமாக இருப்பீர்கள். உங்கள் உடன்பிறப்புகளுடன் இணக்கமான நிலை இருக்கும். அவர்களுடனான மோதல்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனுகூல பலன்களைப் பெறலாம். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது அவசியம்.

கும்பம்

குடும்பத்துடன் அதிக நேரம் செலவாகும். குழந்தைகளின் கல்வி குறித்து அதிகம் திட்டமிடுவீர்கள். வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். ஆக்கப்பூர்வமான பொருட்களை வாங்க உங்கள் பணத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளின் கல்வி, கல்விக்கட்டணம் உங்களை வருத்தப்பட வைக்கலாம். இல்லற வாழ்வில் சில கருத்து வேறுபாடு ஏற்படலாம். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினருடன் நிதானமாக பேசுவதால் உறவு வலுப்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு மிக சாதகமான பலன் கிடைக்கும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். உற்சாகம் அதிகமாக இருக்கும் என்பதால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். இன்று ஆவணங்களில் கையெழுத்திடுவது தவிர்க்கவும். கையொப்பம் இடுவதற்கு முன் ஆவணங்களை நன்றாக படிப்பது அவசியம்.தொழிலில் லாபகரமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதோடு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0