இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 19 புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்று உங்கள் நடத்தையில் கவனம் செலுத்தவும். குறிப்பாக அலுவலகத்தில் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். முதலாளியின் முன்பு சரியாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் வார்த்தைகளை புறக்கணிக்காதீர்கள். வணிகர்கள் நல்ல பொருளாதார நலனுக்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்று லாபம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை இன்று சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில் உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். பண வரவு நல்ல நிலையில் இருக்கும். நிதி முடிவுகளை கவனமாக எடுங்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை
ரிஷபம் - வேலை முன்னணியில், இன்று நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலையை விடாமுயற்சியுடனும் கடின உழைப்புடனும் செய்தால் நல்லது. வணிகர்கள் இன்று ஒரு பெரிய வாடிக்கையாளருடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் சமீபத்தில் ஏதேனும் பெரிய இழப்பை சந்தித்திருந்தால், அதை ஈடுசெய்ய இன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்வோர், எந்தவொரு பெரிய பிரச்சனையையும் தீர்க்க முடியும். குடும்ப வாழ்க்கையில் சச்சரவு ஏற்படும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், இன்று நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை
மிதுனம் - அலுவலகத்தில் சக ஊழியருடன் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், இன்று எல்லாம் சரியாகும். உங்கள் கவனத்தை உங்கள் வேலையில் செலுத்த வேண்டும். வணிகர்கள் பொருளாதார விஷயங்களில் சிறந்த புரிதலைக் காட்ட வேண்டும். அவசரமாக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று, உங்கள் துணை ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். நீங்கள் அவர்களை ஆதரிக்கவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், நீங்கள் சிறுநீர் தொற்றுக்கு ஆளாகலாம். எனவே, தூய்மையில் அதிக கவனித்துக்கொள்வதுடன், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை
கடகம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உங்களது அதிகமாக செலவு செய்யும் தன்மை உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். வேலையைப் பற்றிப் பேசினால், உணவு தானியங்கள் தொடர்பான வியாபாரம் செய்வோர் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். உணவகங்களில் பணிபுரிவோர் இன்று ஏமாற்றமடையலாம். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், உங்கள முயற்சியை துரிதப்படுத்த வேண்டும். விரைவில் உங்கள் கடின உழைப்பு வெற்றி பெறும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றிப் பேசும்போது, இன்று எதிலும் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை
சிம்மம் - மனரீதியாக நீங்கள் இன்று சரியாக உணரமாட்டீர்கள். பல வகையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டு, முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். முடிந்தால், இன்று குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். குறிப்பாக உடன்பிறப்புடன் உங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இன்று பணத்தின் அடிப்படையில் விலையுயர்ந்த நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் சுமை அதிகரிக்கும். இன்று நீங்கள் அதிக மன அழுத்தத்தை உணருவீர்கள். உங்கள் எல்லா பணிகளையும் அமைதியான மனதுடன் முடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்களுக்கு லாபம் ஈட்ட நல்ல நாள். குறிப்பாக பால் பொருட்கள் வணிகம் செய்தால், இன்று உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கன்னி - இன்று, நீங்கள் பொறுமையாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். நேரம் வரும்போது உங்கள் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்கள், தடைப்பட்ட எந்த வேலையையும் இன்று முடிக்க முடியும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் குறித்து முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். வணிகர்கள் இன்று ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். முடிந்தால், இன்று பெற்றோருடன் அதிக நேரம் செலவிடுங்கள். வாழ்க்கைத் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று சளி, இருமல் போன்றவற்றால் கலக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10:20 மணி வரை
துலாம் - வியாபாரிகள் இன்று ஒரு முக்கியமான வணிக முடிவை எடுத்தால், சொந்தமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் உங்கள் வணிக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக இழப்பு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உங்கள் முதலாளி உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருந்தால், அந்த வேலையை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசு ஊழியர்களுக்கு இன்று மிகவும் சவாலான நாளாக இருக்கும். நீங்கள் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்லதாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை
விருச்சிகம் - நீங்கள் தினமும் அலுவலகத்தில் தாமதமாக செல்லும் பழக்கத்தை விரைவில் மாற்ற முயற்சிக்கவும். இன்று அதனால் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம். இன்று அரசு வேலைக்கு முயற்சிப்போருக்கு நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பு வெற்றிகரமாக முடியும். கூட்டு வியாபாரம் செய்வோர் விவாதத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில், பெரிய நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் நடவடிக்கைகளை சரியாக வைத்திருங்கள். கோபப்பட வேண்டாம். அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம். வாழ்க்கைத் துணையிடையே அன்பு அதிகரிக்கும். உடல்நலம் பற்றிப் பேசும்போது, பழைய உணவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை
தனுசு - உங்கள் மனநிலை இன்று சரியில்லை என்றால், கடவுள் வழிபாட்டுடன் இன்று நாளைத் தொடங்குங்கள். இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும். அலுவலகத்தில், சோம்பலை விடுத்து, உங்கள் வேலையை விரைவாகச் செய்ய வேண்டும். உங்கள் எந்த வேலையும் இன்று முழுமையடையாமல் இருந்தால், அது உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வணிகர்கள் இன்று நிதி ரீதியாக பயனடையலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். உடன்பிறப்புகளின் திருமணம் உங்கள் உறவை விரிவுப்படுத்தும். பொருளாதார முன்னணியில், இன்று நீங்கள் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே, முயற்சியை அதிகரித்தால், உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
மகரம் - சிறு வணிகர்கள் அதிக அளவு பொருட்களை சேமிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் இழப்புகள் ஏற்படக்கூடும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் வேகமாக முடிக்க முடியும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிவோரின் வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்பத்தினருடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணை உங்களிடம் சில காலமாக கோபமாக இருந்தால், இன்று அவர்களிடம் மாற்றத்தைக் காணலாம். பணத்தைப் பற்றி பேசினால், வருமானத்தை விட அதிகமாக செலவு செய்ய வேண்டாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
கும்பம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆன்லைன் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வங்கித் துறையுடன் தொடர்புடையோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. வர்த்தகர்களின் பொருளாதார நிலை மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டு உறுப்பினர்களின் உணர்வுகளை மதிக்கவும். தேவையில்லாமல் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், பேச்சுவார்த்தை மூலம் அதை தீர்க்க முயற்சிக்கவும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால் இன்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை
மீனம் - வேலை தேடுபவர்கள் இன்று ஏமாற்றமடையக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள், சோம்பலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த பலன் கிடைக்கும். ரியல் எஸ்டேட்டில் பணிபுரிவோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. ஒரு பெரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடன்பிறப்பிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம். பொருளாதார நிலைமை மேம்படும். திடீர் வருமானத்தைப் பெற முடியும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களை ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை