இன்று இந்த ராசிக்காரர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்...
இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 01 புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. மன அழுத்தத்தால் மனதளவில் மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் குறையலாம். நீங்கள் அவர்களை கவனித்துக்கொள்வது நல்லது. இன்று வேலையில் உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் உள்ள குழப்பத்தால், நீங்கள் வேலை செய்ய விரும்ப மாட்டீர்கள். உங்கள் எதிர்மறை எண்ணங்களை நீக்காத வரையில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. இன்று உங்கள் உடல்நிலை சற்று மோசமடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் காலை 11:20 மணி வரை
ரிஷபம் - மாணவர்களுக்கு சாதகமான நாள். உயர்கல்வி பெற நீங்கள் முயற்சி செய்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது அறிவுரை கூறினால், கண்டிப்பாக அதனை பின்பற்றுங்கள். அலுவலகத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். இன்று நீங்கள் எந்த வித அழுத்தத்தையும் உணர மாட்டீர்கள். உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உணர்ச்சி ரீதியாக, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
மிதுனம் - இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். நிதி நிலையில் ஒரு பெரிய முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. நன்கு யோசித்துவிட்டு முன்னேறினால், சீக்கிரமே உங்களின் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பின் பலன்கள் பதவி உயர்வு வடிவில் விரைவில் கிடைக்கும். உங்கள் வருமானமும் அதிகரிக்கக்கூடும். வணிகர்கள் எந்த பெரிய பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். உங்கள் வணிகம் இரண்டு மடங்கு வேகமாக வளரும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உங்கள் கண்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:50 மணி முதல் மாலை 3:00 மணி வரை
கடகம் - இன்று நீங்கள் வேலையில் சற்று ஏமாற்றம் அடையலாம். இன்று உங்களின் பல முயற்சிகள் தோல்வியடையலாம். அதன் காரணமாக உங்கள் திட்டத்தில் குறைபாடு இருப்பதாக நீங்கள் உணருவீர்கள். உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்ளவும். அதனால் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். நீங்கள் தனிமையில் இருந்தால், இன்று வாழ்க்கைத் துணையை சந்திக்க முடியும். திருமணமானவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்காது. உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பண விஷயத்தில் இன்று சாதாரண நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், மன அழுத்தமில்லாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 1:25 மணி வரை
சிம்மம் - இன்று, நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதே போல் உங்கள் முன்னேற்ற பாதையில் இருந்து வரும் அனைத்து தடைகளும் நீங்கும். திருமண வாழ்க்கையில் இன்று மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையைப் பற்றி பேசினால், உங்கள் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தவில்லை என்றால், முக்கியமான வேலை இன்று தடைபடலாம். எனவே உங்கள் வேலையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலதிபர்களுக்கு நல்ல முதலீட்டிற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மற்றும் மன அமைதியை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
கன்னி - அலுவலகத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் உயர் பதவி பெறுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இன்று வணிகர்களுக்கு சில புதிய வேலைகள் கிடைக்கும். இது மட்டுமல்ல, இன்று நீங்கள் பெரிய முதலீட்டையும் செய்யலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பெற்றோர் ஆரோக்கியமாக இருப்பர். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உடல் வலியால் இன்று அவதியுறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
துலாம் - இன்று உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். வருமானம் அதிகரிப்பதால், பணப் பிரச்சனை அனைத்தும் தீரும். எதிர்காலத்தில் பெரிய பலன்களைப் பெற இன்றே சில புதிய திட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. உழைத்து சம்பாதித்த பணத்தை வீண் செலவு செய்யாதீர்கள். இன்று திருமண வாழ்க்கைக்கு சற்று சவாலாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையின் மனநிலை மிகவும் சூடாக இருக்கலாம். உங்கள் துறையில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அங்கும் இங்கும் பேசி அதிக நேரம் செலவழித்தால் இன்று நீங்கள் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 2:45 மணி வரை
விருச்சிகம் - இன்று பண விஷயத்தில் உங்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும். இன்று நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பைப் பெறலாம். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். இன்று நீங்கள் சில மதிப்புமிக்க பொருட்களையும் வாங்கலாம். குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களின் முன்னேற்றத்தில் நீங்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவீர்கள். இன்று நீங்கள் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலையில் நடத்துவீர்கள். அலுவலகத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் முடிப்பீர்கள். குடும்பத்தினருக்கும் போதுமான நேரத்தையும் கொடுப்பீர்கள். இன்று நீதிமன்ற விவகாரங்களில் சற்று கவனமாக இருக்கவும். உங்கள் எதிரிகள் புதிய பிரச்சனையை உருவாக்கலாம். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை
தனுசு - நிதி நிலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் சற்று அதிகரிக்கலாம். அதனால் நீங்கள் அதிகம் சேமிப்பில் கவனம் செலுத்த முடியாது. இன்று திருமண வாழ்க்கையில் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகள் விலகி நிம்மதியான நாளைக் கழிப்பீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடும் பழக்கத்தால், இன்று நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கலாம். முடிந்தவரை அமைதியாக இருந்து உங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்வது நல்லது. இன்று நீங்கள் வேலையில் சிறந்த வாய்ப்பைப் பெறலாம். எனவே அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் கடின உழைப்பு இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். இது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். முன்னேற்றம் பெற, நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். உங்கள் கனவு விரைவில் நிறைவேறும். இன்று நீங்கள் சாலையில் நடக்கும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
மகரம் - எதிர்மறையான விஷயங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உங்கள் சிந்தனையை மாற்றி கொள்வது நல்லது. கடந்த கால விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. இது உங்களின் பொன்னான நேரத்தையும் மன அமைதியையும் வீணடிக்கும். நீங்கள் கொஞ்சம் தைரியத்துடன் நல்லது செய்ய முயற்சிப்பது நல்லது. இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால் முயற்சி செய்து கொண்டே இருங்கள். உங்கள் கடின உழைப்பு விரைவில் வெற்றி பெறும். இன்று நீங்கள் எதைச் சொன்னாலும் கவனமாக சிந்தித்து பேசுங்கள். இல்லையெனில் உங்கள் வீண் பேச்சால் பெரிய சர்ச்சை ஏற்படலாம். இன்று நீங்கள் மன அமைதிக்காக ஆலயத்திற்கு செல்லலாம். துன்பங்களில், பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். இன்று நீங்கள் அதிக வேலைப்பளுவால் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கும்பம் - திருமணமான தம்பதிகளுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். பரஸ்பர புரிதல் மற்றும் பொறுமை ஆகியவை உறவை வெற்றிகரமாக்கும். இதை நீங்கள் இன்று நன்றாக புரிந்து கொள்ள முடியும். நிதி நிலையில் இன்று உங்களுக்கான நாள் அல்ல. பழைய கடன்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பல வகையான ஆலோசனைகள் வரலாம். உங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பது நல்லது. அலுவலகத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். குறிப்பாக உங்கள் முதலாளி உங்களிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்திருந்தால், அவருடைய தகவலை ரகசியமாக வைத்திருங்கள். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இன்று திடீரென்று வேலை சம்பந்தமாக பயணம் செய்ய நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10:00 மணி வரை
மீனம் - உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் சக ஊழியர்களுடன் உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். இது உங்கள் வேலையை எளிதாக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்க நேரம் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் துறை சார்ந்த முக்கிய நபரை சந்திக்கலாம். பொருளாதார ரீதியாக நல்ல நாளாக அமையும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். கூடுதல் பண வரவைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதளவில் நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை