இந்த 5 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம்!

வாழ்வில் நாம் அடையும் வெற்றி அல்லது தோல்வு இரண்டுமே நம் செயல்பாடுகளில் பலனாகவே கருதப்படுகிறது. அந்த செயல்பாடுகளை சரிவர திருத்திக் கொள்வதன் மூலம் வெற்றியை வசமாக்கிக் கொள்ள முடியும். 

இந்த 5 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம்!

தினசரி ராசிபலனை தெரிந்து கொண்டால் உதவியாக இருக்கும். அந்த வகையில், இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை பற்றி இப்போது பார்க்கலாம்.

மேஷம் - வீட்டில் பெரியவர்களின் ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் கிடைப்பதன் மூலம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தாரின் உதவியோடு எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். வாழ்க்கை துணையுடனான உறவு வலுபெறும். பண வரவு திருப்தியளிக்கும். யோசித்து செலவு செய்யும் பட்சத்தில் பிரச்சனைகளில் சிக்காமல் தப்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று கலவையான தினமாகவே இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் முறையாக நடந்து கொள்ளவும். ஆவேசமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை கவலை கொள்ள தேவையில்லை.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

ரிஷபம் - உத்தியோகத்தில் இருப்பவர்கள், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதன் மூலம் பலனடைவீர்கள். வணிகர்கள், இத்தனை நாள் செலுத்த கடின உழைப்பின் பலனை அனுபவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. வணிகத்தில் முன்னேற்றத்தை கொண்டு வர நினைத்தவர்களுக்கு, நினைத்தது கைகூடும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தந்தையின் உதவியுடன் சில முக்கிய வேலைகளை இன்று முடிக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணை மீது அதிக அக்கறை செலுத்துவதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். நிதி நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

மிதுனம் - ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, உண்ணும் உணவில் கவனம் தேவை. வறுத்த, பொரித்த அல்லது காரசாரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்திடவும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கக்கூடும். அதனால் மன அழுத்தம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள, திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகள், இன்று சில ஏமாற்றங்கள் சந்திக்கக்கூடும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பண பரிவர்த்தனை மேற்கொள்ள சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:25 மணி வரை

கடகம் - பண விவகாரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. இன்றைய தினம் கடன் வாங்குவது, கொடுப்பது இரண்டையுமே தவிர்த்திடவும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு ஏற்ற தினம் இன்று கிடையாது. வீட்டு சூழல் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உங்களது முடிவிற்கு வீட்டு பெரியவர்கள் மறுப்பு தெரிவிக்கக்கூடும். அத்தகைய சூழலில் அமைதியாக உங்களுடைய கருத்துக்களை எடுத்து முன்வைப்பது நல்லது. பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உயர் அதிகாரிகள் உங்கள் நடவடிக்கைகளை கண்காணிப்பர். வணிகர்கள், இன்றைய தினம் எந்தவொரு ஆபத்தான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:15 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

சிம்மம் - இன்றைய தினம் ஆரோக்கியம் அவ்வளவு நல்லதாக இருக்காது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு சிக்கல் ஏற்பட்டாலும், அவற்றை புறக்கணிக்காதீர்கள். வணிகர்கள் இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவர். திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் ஆணைக்கிணங்க செயல்பட வேண்டியிருக்கும். செய்யும் வேலையை உரிய நேரத்தில் முடிக்க முயற்சிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுபெறும். பொருளாதாரி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் விரும்பவில்லை என்றாலும் கூட, அதிக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கன்னி - உத்தியோகஸ்தர்கள் இன்று சில சவால்களை சந்திக்கக்கூடும். நேரத்தை கவனத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அவற்றை சரியாக நேரத்தில் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வர்த்தகர்கள், இன்றைய தினம் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்களது கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகள் உபயோகிப்பதை தவிர்க்கவும். பண சிக்கல்கள் எதுவும் இருக்காது. பெற்றோரின் ஆசீர்வாதத்தையும், பாசத்தையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிட்டும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு, இன்றைய தினம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சில முக்கிய சந்திப்புகள் நிகழும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் பணியாற்றினால், வாழ்வில் விரைவில் முன்னேற்றம் காணலாம். வணிகர்கள், இன்று நிதி ரீதியாக பயனடையலாம். குறிப்பாக உங்கள் பணி புத்தகங்கள், அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மின்னணுவியல் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறுவீர்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையை பொறுத்தவரை, உழைப்பிற்கு தகுந்த ஓய்வு எடுக்க வேண்டும். நிதி சார்ந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

விருச்சிகம் - வீட்டில் அமைதியான சூழல் நிலவாது. வீட்டில் பெரியவர்களுடன் சில விவாதங்கள் உருவாகலாம். அத்தகைய சூழலில், பயன்படுத்தும் வார்த்தைகளை பார்த்து உபயோகிக்கவும். பெரியவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதோடு, அவர்களது வார்த்தைகளையும் புறக்காணிக்காதீர்கள். இன்றைய வாழ்க்கை துணையின் ஆதரவை பெற முடியாது. பொருளாதார முன்னணியில் கலவையான சூழலே நிலவும். வருமானத்தை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகளில் சில தடைகள் உருவாகலாம். சக ஊழியர்களுடனான நட்பை வளர்க்க முயற்சியுங்கள். வணிர்கள், இன்றைய தினம் எந்தவொரு அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

தனுசு - உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் தங்களது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். உங்களது விடாமுயற்சியினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி நடந்து கொண்டால், நிச்சயமாக பயனடைவீர்கள். வணிகர்கள், இன்றைய தினம் நல்ல லாபம் ஈட்ட முடியும். இந்த நேரத்தில் விளம்பரங்களின் மீது கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தடைப்பட்ட பணம் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம் - இன்று நீங்கள் எதைச் செய்தாலும், மிகவும் சிந்தனையுடன் செய்ய வேண்டும். உங்கள் அவசர முடிவுகள் பெரும்பாலும் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். வர்த்தகர்கள், இன்றைய தினம் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட போகிறீர்கள் என்றால், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில்லரை வணிகர்களுக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள். விரும்பும் பண பரிவர்த்தனையை செய்யலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். பெரிய செலவு செய்ய வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்க மகிழ்ச்சியாக இருக்கும். விருந்தினர் வருகைக்கு வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் பிற்பகல் 2:05 மணி வரை

கும்பம் - காதல் விஷயத்தில் இன்று மிகவும் சிறப்பான நாள். உங்களது காதலை சொல்ல இந்த நாள் மிகவும் நல்ல நாள். நேர்மறை பதில்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பொருளாதார நிலைமை வலுப்பெறும். அதற்காக நீங்கள் கடுமையான உழைக்க வேண்டியிருக்கும். இருந்தாலும், எதிர்காலத்தில் அதற்கான பலனை நிச்சயம் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். அதிகப்படியான பணி சுமை, மன அழுத்தத்ததை உண்டாக்கக்கூடும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலையில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3:45 மணி வரை

மீனம் - திருமண வாழ்க்கையில் இருந்து வந்த சங்கடங்கள் அகலும். வாழ்க்கை துணையுடனான நெருக்கமும், காதலும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள், இன்று உற்சாகத்துடன், முழு அர்ப்பணிப்புடனும் வேலையை செய்து முடிப்பீர்கள். அதற்கான பலனையும் நீங்கள் பெற போகிறீர்கள். இருந்தாலும், இன்றைய தினம் சில சந்தர்பங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில், வீண் விமர்சனங்களுக்கு ஆளாகக்கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வருவதில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த நேரத்தில் ஓய்வெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

like

dislike

love

funny

angry

sad

wow