இன்று இந்த ராசிக்காரர்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 08 வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவை அளிக்கும். இன்று நீங்கள் செல்வம், புகழ் மற்றும் வெற்றியைப் பெறுவீர்கள். இதனால் இன்று நீங்கள் மிகவும் மகிழ்வீர்கள். இன்று, இந்த மகிழ்ச்சியில் உங்கள் நெருங்கிய நண்பர்களையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக இணைவதன் மூலம் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். உங்கள் வெற்றியை இன்று கொண்டாடுங்கள். நாளை வேலையை திட்டமிட்டு பொறுமையாக செய்யுங்கள். இன்று உங்கள் திருமண வாழ்க்கையும் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மதியம் 2 மணி வரை
ரிஷபம் - இன்று நீங்கள் புதிதாக ஒன்றை கற்று கொள்வதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு நிச்சயம் பயனளிக்கும். இன்று நீங்கள் குடும்பத்துடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் சமநிலையை ஏற்படுத்த முடியும். இன்று நீங்கள் பிறருக்கு உங்களால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்யலாம். உங்கள் உதவியால் ஒருவரின் தொழில் சிறப்படையும். இன்று நீங்கள் நேர்மறையாக இருப்பீர்கள். சக ஊழியர்கள் உங்களை மிகவும் பாராட்டுவார்கள். வணிகர்கள் முதலீடு செய்ய இன்று சிறப்பான நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் காலை 11:30 மணி வரை
மிதுனம் - இன்று உங்கள் மனநிலை சற்றே மாறக்கூடும். உங்கள் கனவுகள் வெகு தொலைவில் இருப்பதை உணர்வீர்கள். இதுபோன்ற எதிர்மறை விஷயங்களை உங்கள் மனதில் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, உங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமாக உழைக்கவும். நீங்கள் திட்டமிடலுடன் தொடர்ந்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் நேர்மறை மற்றும் நல்ல திட்டமிடலுடன் பணிபுரிந்தால், நீங்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை
கடகம் - இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை நன்கு செலவிடலாம். இன்று நீங்கள் ஒரு சிறிய விருந்திற்கு ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, நீங்கள் குடும்பத்துடன் குறுகிய பயணத்திற்கு செல்லலாம். இன்று நீங்கள் உங்கள் நாளின் பெரும்பகுதியை குடும்பம் மற்றும் நெருங்கிய நபர்களுடன் செலவிடுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் எந்த தடையும் இருக்காது. இந்த நாளில், வேலையை விட்டு விலகி மகிழுங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உலகளாவிய தொற்று நோய் குறித்து சற்றே எச்சரிக்கையுடன் இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 3 மணி வரை
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் இன்று தங்கள் வாழ்க்கையில் உள்ள கடமைகளையும், பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய நேரமிது. உங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள இன்றே சரியான நேரம். பிரச்சனைகளை புறக்கணிப்பது ஒருபோதும் தீர்வாகாது. நீங்கள் அதற்கான தீர்வைக் கண்டுபிடிப்பது ஒன்றே சிறந்த வழி. பிரச்சனைகளை நீக்குவதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணர்வீர்கள். உங்கள் நெருங்கியவர் நபர்களுடன் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் ஒதுக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை
கன்னி - இன்று நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக உணரலாம். இன்று உங்களுக்கு திடீர் மனநிலை மாற்றங்கள் இருக்கலாம். இன்றைய நாள் முழுவதும் சிறிய விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். இது உங்கள் கோபத்தையும் அதிகரிக்கலாம். இந்த சூழ்நிலையில், நீங்கள் நாள் முழுவதும் நேர்மறையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களுக்குப் பிடித்த காரியங்களைச் செய்வதில் இன்றைய நாள் முழுவதையும் செலவிடுகிறீர்கள். நெருங்கிய நபர்களுடன் பேசி மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை தேடவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை
துலாம் - உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டுத். அலுவலகத்தில் உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டு உங்களைத் துன்புறுத்த விரும்பும் நபர்களிடம் இருந்து சற்றே விலகி இருக்கவும். இன்று நீங்கள் ஏதாவது கவலையால் சூழப்படலாம். இன்றைய தினம் உங்களுக்கான நாளாக இருக்காது. அலுவலகத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் கவனமாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களுடன் மாலை பொழுதை செலவிடுங்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்க நீங்கள் யோகா மற்றும் தியானத்தின் உதவியை நாட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நேரம்: மாலை மணி5 முதல் மாலை 6 மணி வரை
விருச்சிகம் - இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். உங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இன்று உங்கள் பழைய முடிக்கப்படாத வேலைகளை முடிக்க இன்றைய தினத்தை முழுவதும் செலவிடலாம். வீட்டின் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பும் சாத்தியமாகும். நீங்கள் இன்று மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். நாளின் தொடக்கத்தில் நீங்கள் சரியாக திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 4 மணி வரை
தனுசு - இன்று நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது. நீங்கள் வேலை தொடர்பாக வெளியே செல்ல வேண்டியிருக்கலாம். தொழில்முறை வாழ்க்கையில் இன்று உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். எதிர்காலத்தில் இந்த பயணத்தின் மூலம் நீங்கள் பெரும் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் லாபம் இன்று குறைய வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான முடிவுகளை எடுக்க இன்று நல்ல நாள். இருப்பினும் மிக கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
மகரம் - நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடனான பிணைப்பு அதிகரிக்கவும், உறவில் புத்துணர்வை ஏற்படுத்தவும் இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று எந்த பதற்றமும் இல்லாமல் குடும்பத்தினருக்கு நேரத்தைக் கொடுங்கள். நீங்கள் விரும்பினால், திரைப்படம் அல்லது இரவு உணவிற்கு வெளியே செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வையுங்கள். இன்று மற்ற வேலைகளிலும் பெரிதாக பிரச்சனை எதுவும் இருக்காது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை
கும்பம் - இன்று உங்கள் நிதானத்தை இழக்க நேரிடும். இன்று எந்த விதமான விவாதத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் பேச்சை கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் உங்களுக்கு நெருக்கமான ஒருவரை காயப்படுத்த நேரிடலாம். உங்கள் அணுகுமுறையில் நீங்கள் நேர்மறையைக் கொண்டுவர வேண்டும். சிறிய விஷயங்களில் கோபப்படும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்களே உங்களைச் சுற்றி நல்ல நேர்மறையான ஆற்றலைக் கொண்டு வர முடியும். இன்று உங்கள் பழைய தடைப்பட்ட வேலைகளில் சிலவற்றை முடிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை
மீனம் - இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று நீங்கள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். இன்று உங்கள் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல பேச்சுத்திறன் உள்ளவர்களான உங்களது திறமையால் முன்னேற்றம் சாத்தியமாகும். இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இந்த நாளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், முன்கூட்டியே திட்டமிட்டு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 8:30 மணி வரை