இன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கவனமா இருங்க... விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கவனமா இருங்க... விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு!

இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். வியாழக்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று அலுவலகத்தில் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பதோடு, செயலில் கவனம் செலுத்துங்கள். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உங்களது உறவை மேம்படுத்த முயற்சி செய்யவும். வணிகர்கள் ஒரு பெரிய முதலீடு செய்ய நினைத்தால், இன்று அதற்கான ஒரு நல்ல வாய்ப்பைப் பெறலாம். உங்களது வீண் கோபத்தால் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட ஏற்படக்கூடும். உங்கள் சொற்களை கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. பொருளாதார முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். பண பரிவர்த்தனை செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், இன்று தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 10:10 மணி வரை

ரிஷபம் - நீங்கள் உங்களது தந்தையின் வியாபாரத்துடன் தொடர்புடையவராக இருந்தால், வணிக விஷயங்களில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, உங்கள் தந்தையின் ஆலோசனையைப் பெறுங்கள். இதனால் நல்ல பலன்களைப் பெற்றிடலாம். குறிப்பாக உங்கள் வணிகத்தை அதிகரிக்க நினைத்தால், அதில் நிச்சயம் வெற்றியைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்க முடியும். மறுபுறம், வேலையில்லாமல் வேலை தேடுகிறீர்கள் என்றால், இன்று சில நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மாலையில் வீட்டிற்கு விருந்தினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

மிதுனம் - மன ரீதியாக, இன்று நீங்கள் பலவீனமாக உணருவீர்கள். சிறிய விஷயங்கள் கூட உங்கள் இதயத்தை புண்படுத்தும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே இதுபோன்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது. கடினமாக உழைத்து முன்னேறுங்கள். உங்களது தற்போதைய வேலையில் திருப்தி அடையவில்லை என்றால், வேறொரு வேலைக்கு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம். அதே நேரத்தில், வணிகர்கள் இன்று பெரும் லாபத்தைப் பெறலாம். உங்கள் பணம் நீண்ட காலமாக எங்காவது சிக்கிக்கொண்டிருந்தால், இன்று அதைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் கலக்கப்படும். அலட்சியம் அசௌகரியத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் பிற்பகல் 2:25 மணி வரை

கடகம் - பொருளாதார முன்னணியில், இந்த நாள் சிறப்பாக இருக்கும். நீங்கள் சில காலமாக பணத்தைப் பற்றி கவலைப்பட்டிருந்தால், இன்று நீங்கள் கொஞ்சம் நிவாரணம் பெறலாம். சம்பளம் உயர்விற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களும் இன்று நல்ல பலனைப் பெறலாம். உங்கள் எதிரிகளுக்கு நீங்கள் கடுமையான போட்டியைக் கொடுக்கலாம். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். உடல்நலம் காரணமாக உங்கள் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. நீங்கள் உங்களை கவனித்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 முதல் 9:00 மணி வரை

சிம்மம் - மாணவர்கள், தங்களது கல்வியில் இருந்துவந்த தடைகளை, நண்பர்கள் மற்றும ஆசிரியர்களின் உதவியுடன் சமாளிக்க முடியும். விடாமுயற்சியுடன் படிக்க வேண்டிய காலமிது. இன்று வேலை முன்னணியினல் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது பணி மிகவும் பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவர். நீங்கள் தொழில் தொடங்க விரும்பினால், இன்று உங்களது திட்டத்தில் முன்னேற்றம் காணப்படும். நிதி சிக்கல்களை தீரும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

கன்னி - கன்னி ராசிக்காரர்களே, இன்று அதிகாலை 04.32 மணி முதல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. எனவே, கவனமும் நிதானமும் தேவை. பொறுமை மிக மிக அவசியம். இன்றைய தினம் முதலீடுகளை தவிர்க்கவும். வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம். மேலும், அலுவலகத்தில் இன்று சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும். பணிச்சுமையால் அதிக மன அழுத்தத்தை உணருவீர்கள். அதே நேரத்தில், வணிகர்கள் அவசரமாக பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திடீரென்று சில பெரிய செலவுகள் வரக்கூடும். உங்கள் வரவு செலவு திட்டத்தை முன்கூட்டியே தயாரிப்பது நல்லது. வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், உடல் சோர்வு இன்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

துலாம் - பணத்தின் அடிப்படையில் நல்ல பலனைப் பெறலாம். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய கடனால் சிக்கி இருந்தால், விரைவில் நீங்கள் இந்த சிக்கலில் இருந்து விடுபடலாம். வீட்டின் சூழலில் சில மாற்றங்கள் இருக்கலாம். மூத்த சகோதரர் அல்லது தந்தையுடனான உங்கள் உறவு சரியாக நடக்கவில்லை என்றால், இன்று அனைத்து தவறையும் சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். அதில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் இன்று சில நல்ல தகவல்களைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் சில கருத்து வேறுபாடுகளும், உறவினிடையே கசப்புகளும் அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 5:30 மணி வரை

விருச்சிகம் - முடிக்கப்பட வேண்டிய வேலைகளை காலம் கடத்தாமல், உடனே முடிக்க முயற்சிக்கவும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். அதனால், திடீர் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பண பிரச்சனைகளில் சரியான முடிவெடுக்கவும். திருமணமானவர்கள், ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவது உங்களது உறவை பலப்படுத்தும். இதனால், நீண்ட கால பிரச்சனைகளுக்கு முடிவு காணலாம். வீட்டில் அமைதி நிலவும், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வும் வீட்டு உறுப்பினர்களிடையே அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான விஷயங்கள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

தனுசு - சோம்பலைத் தவிர்த்து, உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் இன்று பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று பெரிய செலவு செய்ய வேண்டியிருக்கும்.. இன்று அலவலகத்தில் உங்களது வேலையில் பல தடைகள் இருக்கலாம். ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. பொறுமையாக இருப்பதன் மூலம் விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வியாபாரிகள், தங்களது வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது சொற்களைப் பார்த்து பயன்படுத்துங்கள். இல்லையெனில் மோசமான இழப்புக்கு அது காரணமகிவிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மகரம் - அலுவலகத்தில் சகஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றினால் உங்களுக்கு நல்லது. மோதலைத் தவிர்க்கவும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், இன்று உங்களது வேலை பலவீனமான மாறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வீட்டு செலவுகள் ஓரளவு அதிகரித்தாலும், உங்கள் மனைவியின் வார்த்தைகளை புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை

கும்பம் - இன்று உங்களது தன்மையை மாற்ற வேண்டும். உங்களது பிடிவாதமான தன்மையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். பேசும்போது உங்கள் வார்த்தைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அலுவலக வேலைகளை விரைந்து செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில் இன்று உங்கள் பணிகள் கெட்டுப்போகக்கூடும். மேலும், உங்கள் உயர் அதிகாரிகளின் பேச்சைப் புறக்கணிப்பதில் தவறு செய்யாதீர்கள். உங்களது அலுவலக பதற்றத்தை வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். அது உங்கள் வீட்டுச் சூழலைக் கெடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், இந்த நேரத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

மீனம் - அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். வணிகர்களுக்கு இன்றைய தினம் மிகவும் நன்றாக இருக்கும். பெரிய நிதி நன்மையைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இன்று பெற்றோர் உங்களுடன் ஒரு முக்கியமான முடிவை எடுக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவு இருக்கும். குழந்தைகள் தொடர்பான எந்தவொரு கவலையையும் சமாளிக்க முடியும். உடல்நலம் பற்றிப் பேசினால், இன்று உடல் வலியால் கலங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

like

dislike

love

funny

angry

sad

wow