வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன?

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது.

வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன?

பொதுவாக நம் நாட்டில் நடக்கும் முக்கியமான அனைத்து நிகழ்வுகளையும் வெற்றிலையையானது அலங்கரிக்கும்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது.

அந்த அளவிற்கு வெற்றிலையானது புராணம் காலங்களை எல்லாம் தாண்டி தற்போதும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு புனிதப் பொருளாக கருதப்படுகின்றது.

இப்படிப்பட்ட ஒரு தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபமேற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும் என சொல்லப்படுகின்றது.

வெற்றிலை உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும்.

அந்தவகையில் தற்போது வெற்றிலையை வைத்து எப்படி தீபம் ஏற்றாலம் என இங்கு பார்ப்போம்.

முதலில் சேதாரம் இல்லாத, நுனிப்பகுதி உள்ள 6 வெற்றிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு வைக்கவும்.

அதன்பின், கிழித்து வைத்த 6 வெற்றிலை காம்புகளையும் நல்லெண்ணெய்குள் போட்டுவிட்டு, தீபத்தை ஏற்றவும்.

தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் இருந்தும் நல்ல நறுமணம் வீசும்.

இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு, உங்கள் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதில் நினைத்துக்கொண்டு, ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து பிரார்த்தனை செய்தால் போதும்.
இப்படி செய்வதனால் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்து நன்மைகயை உண்டாக்கும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0