இந்த 5 ராசிக்காரங்கள அவ்வளவு சோம்பேறியா இருப்பாங்களாம்..

சில நேரங்களில், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் எவ்வாறு கையாள்வோம் என்பதை முன்கூட்டியே ஒருவர் அறிந்தால், முடிவுகளை எடுக்க எளிதாக இருக்கும்.

இந்த 5 ராசிக்காரங்கள அவ்வளவு சோம்பேறியா இருப்பாங்களாம்..

வேத ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். எனவே ஒருவரது ராசியை வைத்தே அவர்களது குணங்கள் மற்றும் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்ள முடியும். 

சில நேரங்களில், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் எவ்வாறு கையாள்வோம் என்பதை முன்கூட்டியே ஒருவர் அறிந்தால், முடிவுகளை எடுக்க எளிதாக இருக்கும்.

12 ராசிகளில் சிலர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள், இன்னும் சிலர் மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள். இப்போது நாம் காணப்போவது அதிக சோம்பேறித்தனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் பற்றி தான். 
அதற்காக இந்த சோம்பேறித்தனமான ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு சரியான மற்றும் உடனடி முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் எடுக்கும் முடிவுகளை சற்று தாமதமாக எடுப்பார்கள். இப்போது அத்தகைய ராசிக்காரர்கள் யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் விஷயங்கரள எளிதாக எடுத்துக் கொள்ள விரும்புவார்கள். எந்தவிதமான கடின உழைப்பு அல்லது கூடுதல் முயற்சியும் இல்லாமல் ஆடம்பரத்தை அனுபவிக்கும் எளிய வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் அதிகம் உழைக்காமல் சிறந்தது வேண்டுமென விரும்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் நினைத்ததை எளிதில் பெறுவார்கள். ஆனால் அதன் பின்னர் வருத்தப்படுவார்கள்.

மீனம் - மீன ராசிக்காரர்கள் பொதுவாக சோம்பேறித்தனமான நடத்தையைக் கொண்டவர்கள். எப்போதும் தங்கள் கற்பனை உலகில் வாழ்பவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள் அல்ல மற்றும் எதிலும் கூடுதல் முயற்சி எடுக்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதற்கும் அதிகம் முயற்சி செய்யமாட்டார்கள். இவர்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்து, அதை உடனே கட்டாயம் முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், அவர்கள் சிறிதும் டென்சனாக மாட்டார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு வேலையையும் மனதார விரும்பி செய்யமாட்டார்கள், கட்டாயத்தின் பேரிலேயே பெரும்பாலும் செய்வார்கள்.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களில் மிகவும் சோம்பேறிகளாக இருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் அவ்வளவு திறம்பட எடுக்கமாட்டார்கள் மற்றும் இதை ஒரு தொந்தரவாகவே நினைப்பார்கள். இவர்களின் சோம்பேறித்தனம் தான் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல வாய்ப்புக்களை இழக்க வழிவகுக்கும் ஒரே காரணம்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு சோம்பேறி மூட்டைகள். எந்த ஒரு வேலையையும் இவர்கள் செய்யாமல், மற்றவர்களிடம் வேலையை வாங்குவார்கள். உட்கார்ந்த இடத்திலேயே தனக்கு வேண்டிய அனைத்தும் நடக்க வேண்டுமென நினைக்கும் ஒரு சோம்பேறிகள். இவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு நிலையான வளர்ச்சியை காண விரும்பினால், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருப்பார்கள். அதுவும் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிருக்கும் போது அல்லது வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டியிருக்கும் போது மிகவும் சோம்பேறிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு வெளியே வேலை இருக்கும் போது அதை ஆற்றலுடன் செய்வார்கள். ஆனால் வீட்டில் இருந்தால், சரியான சோம்பேறிகளாக இருப்பார்கள். வெளி வேலை மட்டும் முக்கியம் அல்ல, வீட்டு வேலைகளை கவனிப்பதும் முக்கியம் என்பதை இந்த ராசிக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

like
0
dislike
1
love
0
funny
0
angry
0
sad
0
wow
0