உங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வருமாம் தெரியுமா?

வாஸ்து தோஷத்திற்கும், உங்களின் நீங்காத துரதிர்ஷ்டத்திற்கும் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் கூட காரணமாக இருக்கலாம்.

உங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வருமாம் தெரியுமா?

அதிர்ஷ்டம் என்பது அனைவரும் தங்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் ஒன்றாகும். ஆனால் அனைவருக்கும் வாழ்க்கையில் அது கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். 

அதற்கு காரணம் உங்களுடைய வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமாக கூட இருக்கலாம். வாஸ்து தோஷம் உங்கள் வீட்டின் வாஸ்து கோளாறுகளால் மட்டும் ஏற்படுவதில்லை.

வாஸ்து தோஷத்திற்கும், உங்களின் நீங்காத துரதிர்ஷ்டத்திற்கும் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் கூட காரணமாக இருக்கலாம். உண்மைதான், உங்கள் வீட்டிலிருக்கும் சில பொருட்கள் உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை அழைத்து வரும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உடைந்த வீட்டுப் பொருட்கள்

உங்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய உடைந்த பொருட்கள் நிறைய இருந்தாலும், உடைந்த கடிகாரம் நீங்கள் தூக்கி எறிய வேண்டிய முக்கிய பொருளாகும். இதேபோல், உடைந்த அல்லது துண்டாக்கப்பட்ட சமையலறை பொருட்கள் தூக்கி எறியப்பட வேண்டும் (தட்டுகள், கிண்ணங்கள், குவளைகள் போன்றவை) இந்த பொருட்கள் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனையும் தோல்வியும் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருப்பு கதவு 

வண்ண கதவுகள் உங்கள் அறைக்கு அழகிய தோற்றத்தைக் கொடுத்தாலும், நீங்கள் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கருப்பு நிறத்தை தவிர்க்க வேண்டும். ஃபெங் சுய் கொள்கைகளின் படி இது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை அழைக்கும்.

வாசலை நோக்கிய படுக்கை

உங்கள் படுக்கையின் பாதத்தை வாசலில் இருந்து விலக்கி வைக்கவும். ஃபெங் சுய்யில் இது சவப்பெட்டி நிலை என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இறந்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து திறந்த கதவுகள் வழியாக எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதற்கு இது அடையாளமாகும். இந்த நிலை உங்கள் தூக்கத்தில் உங்களுக்கு மரணத்தை அழைக்கும் என்று கூறப்படுகிறது.

கண்ணாடிகள்

சில கலாசாரங்கள் கண்ணாடிகள் உங்கள் ஆன்மாவைக் கைப்பற்றி திருடலாம் என்று நம்புகின்றன. இதனால்தான் விக்டோரியர்கள் வீட்டில் யாராவது இறக்கும் போது கண்ணாடியை மறைக்கிறார்கள், அதனால் அவர்களின் ஆவிகள் உள்ளே சிக்கிக்கொள்ளாது. ஆனால் கண்ணாடி இல்லாத வீடை நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. எனவே விரிசல் இல்லாத கண்ணாடிகள் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தனித்தனி கதவுகள் 

உங்கள் வீட்டில் ஒரு வழியில் நுழைந்து வேறு வழியில் வெளியேறுவது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே ஒரு கதவைத் தேர்ந்தெடுத்து அதனை மட்டும் பயன்படுத்தவும். ஃபெங் சுய் படி இது நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிலிருந்து நேராக வெளியேற்ற அனுமதிக்கிறது என்பதால், முன் மற்றும் பின் தனித்தனி கதவுகள் இருப்பது துரதிர்ஷ்டம்.

காலியான ராக்கிங் நாற்காலி

காலியான ராக்கிங் நாற்காலி இருண்ட சக்திகளை அதில் வந்து உட்கார அழைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாற்காலி இருக்கும் போது தொடர்ந்து கெட்ட செய்திகள் உங்களைத் தேடிவரும். இது மரணம் மற்றும் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று அர்த்தம்.

குடை 

அனைவரின் இல்லத்திலும் குடைகள் இருக்கும். ஆனால் வீட்டிற்குள் இருக்கும்போது குடையை திறப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது வீட்டிற்கும் இருக்கும் பாதுகாவலர்களை அவமதிக்கும் செயல் என்று கூறப்படுகிறது.

புதிய வீட்டை பழைய துடைப்பம் கொண்டு பெருக்குவது

நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குச் செல்லும்போது, ஒரு புதிய துடைப்பத்தை வாங்கி செல்லுங்கள். உங்கள் பழைய துடைப்பத்தை அப்படியே விட்டு விடுங்கள். ஒரு பழைய துடைப்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய வீட்டை பெருக்குவது உங்கள் பழைய வீட்டிலிருந்து எந்த எதிர்மறையையும் கொண்டு வரவும் மற்றும் புதிய இடத்திலிருக்கும் அதிர்ஷ்டத்தையும் துரத்தும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0