இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்…

இன்று கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 13 சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - இன்று சில சந்தர்ப்பங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். சில சந்தர்ப்பங்களில், ஏமாற்றமடைவீர்கள். இன்று நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தேவையற்ற குழப்பத்தில் சிக்கி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும். பணத்தின் நிலைமை மேம்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். இன்று அலுவலகத்தில் திடீர் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். முதலாளி உங்களுடன் மிகவும் கண்டிப்பாக நடக்கலாம். இன்று, சிறு பணிகளை கூட கவனமாக செய்யுங்கள். வணிகர்கள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் காரமான உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7:00 மணி வரை

ரிஷபம் - வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று எந்தவொரு சுப நிகழ்ச்சியையும் வீட்டில் ஏற்பாடு செய்யலாம். குடும்பத்துடன் ஒரு சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். பதவி உயர்விற்காக காத்திருக்கும் உத்தியோகஸ்தர்கள், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். நேரம் வரும்போது உங்கள் கடின உழைப்பின் நல்ல பலனை நிச்சயமாகப் பெறுவீர்கள். வணிகர்கள் இன்று பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணத்தின் நிலை திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை குறையக்கூடும். நீங்கள் அவர்களை அதிகம் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம் - இன்று வேலை முன்னணியில் சில நிவாரணங்களை பெறலாம். நிலுவையில் உள்ள பணிகள் இன்று நிறைவடையும். இதனால் முதலாளியும் திருப்தி அடைவார். வணிகர்களுக்கு லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வணிகத் திட்டங்களை மாற்ற விரும்பினால், இன்று அதற்கு உகந்த நாள். பண நிலைமை வலுவாக இருக்கும். நிதி ரீதியாக, நீங்கள் ஒருவருக்கு உதவலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடன்பிறப்புடன் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உங்களின் தவறான எண்ணங்களை நீக்க முயற்சிக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:20 மணி முதல் மாலை 6:30 மணி வரை

கடகம் - பொருளாதார முன்னணியில், இன்று நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். திடீரென்று பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் உங்கள் தந்தையின் வியாபாரத்துடன் தொடர்புடையவராக இருந்தால், இன்று அவருடைய ஆலோசனையின் மூலமாக நிதி ரீதியாக பயனடையலாம். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இருப்பினும் கோபம், பிடிவாதம் போன்ற உணர்வுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வீட்டின் சூழ்நிலை இன்று சரியாக இருக்காது. சிறிய விஷயங்களுக்காக குடும்ப உறுப்பினர்களிடையே விவாதம் ஏற்படலாம். உடல்நிலை சரியாக இல்லை என்றால், நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம் - இன்று உங்கள் கோபத்தையும் தவறான வார்த்தைகளையும் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். வீட்டிலும் வெளியிலும் யாருடனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் வணிக முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். எந்த வேலையும் தொடங்குவதற்கு முன், சில அனுபவமுள்ளவர்களை அணுக வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கன்னி  - அலுவலக வேலைகளில் இன்று கொஞ்சம் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில், உங்கள் முதலாளி இன்று உங்களிடம் மிகவும் கோபப்படலாம். நேரத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்கள் முதலீடு செய்ய ஒரு நல்ல வாய்ப்பைப் பெறலாம். இன்று உங்கள் வணிகத்தில் வளர்ச்சியை காணலாம். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இணக்கமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கலாம். ஆனால் மாலைக்குள் எல்லாம் சரியாகிவிடும். உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு நுரையீரல் அல்லது இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், இன்று எச்சரிக்கையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்  - இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் நாளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. திட்டமிடாமல் இன்று எந்த வேலையும் செய்யாதிருப்பது நல்லது. அலுவலகத்தில் முக்கியமான வேலையில் திடீர் தடங்கல்கள் இருக்கலாம். இருப்பினும், உயர் அதிகாரிகளின் உதவியுடன், உங்கள் பணி சரியான நேரத்தில் முடிக்கப்படும். வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். கூட்டு வியாபாரிகள், இன்று எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். வீட்டு இளைய உறுப்பினர்களுடனான உறவு மோசமடையக்கூடும். வாழ்க்கைத் துணையின் மனநிலை இன்று சரியாக இருக்காது. உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் போதுமான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 முதல் இரவு 7:20 மணி வரை

விருச்சிகம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறலாம். உயர்கல்வியைப் பெறுவதற்கான உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பணத்தைப் பொறுத்தவரை, கண் மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். வீட்டின் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சில காலமாக சரியில்லாமல் இருந்த தாயின் உடல்நிலை, இன்று மேம்படும். இருப்பினும், நீங்கள் அவ்வப்போது மருத்துவரை அணுக வேண்டும். மாலையில், நீங்கள் திடீரென்று ஒரு பழைய நண்பரை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 மணி முதல் மாலை 5:30 மணி வரை

தனுசு - இன்று உங்கள் மனம் திசைதிருப்பப்படும். வேலையில் அதிக கவனம் செலுத்த முடியாது. தவறான வழியில் சிந்திப்பதன் மூலம் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. பணத்தின் சூழ்நிலையில் இன்று ஒரு பெரிய முன்னேற்றம் காண முடியும். உங்கள் நீண்டகால நிதி முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான சச்சரவுகளும் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வாழ்க்கைத் துணையிடம் கடுமையான தன்மை இருக்கும். உங்களிடையே ஒரு பெரிய சண்டையும் ஏற்படலாம். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படவில்லை என்றால், உங்களுக்கிடையேயான கசப்பு அதிகரிக்கும். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக உணர மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 10:20 மணி வரை

மகரம் - இன்று அன்புக்குரியவர்களின் ஆதரவுடன், எந்த பிரச்சனையும் முடிவடையும். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் மன அமைதியை உணருவீர்கள். அன்புக்குரியவர்கள் மீதான நம்பிக்கை பலப்படும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று வர்த்தகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. சில நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் பழக்கம் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இன்று வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று மிகவும் நேர்மறையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 8:15 மணி வரை

கும்பம்  - இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் நன்றாக இருக்காது. உங்கள் உடல்நிலை வெகுவாகக் குறையக்கூடும். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், கவனக்குறைவாக இருக்கக்கூடாது. இன்று வேலை முன்னணியில் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வேலையில் முன்னேற நல்ல வாய்ப்பு கிடைக்கும். வர்த்தகர்களின் பொருளாதார நிலை மேம்படும். இன்று நீங்கள் சில பெரிய மற்றும் முக்கியமான வணிக முடிவுகளை எடுக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், திருமண வாழ்க்கையில் சில காலமாக இருந்த மன அழுத்தம் நீங்க, மனம் திறந்த பேச வேண்டும். இதனால், உங்களுக்கிடையே இருந்த கசப்பைக் குறைக்க முடியும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று ஒரு கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் 12:45 மணி வரை

மீனம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். விலைமதிப்பற்ற பொருளை வாங்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமானது. தடைப்பட்ட வணிக திட்டத்தை வணிகர்கள் மீண்டும் தொடங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு இன்று ஒரு புதிய வேலை கிடைக்கும். மாற்று வேலை பற்றி சிந்திப்பவர்கள், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் முடிவை சிந்தனையுடன் செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:20 மணி முதல் மாலை 4:00 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0