இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 15 வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று நீங்கள் மன அமைதியை உணர்வீர்கள். வேலை முன்னணியில், இன்று நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். வேலை அல்லது வணிகத்தில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். இன்று அன்புக்குரியவரின் உதவியுடன் ஒரு முக்கியமான பணியை முடிக்க முடியும். தந்தையின் உடல்நிலை குறித்து சில காலமாக இருந்துவந்த கவலைகள் அகலும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் அவர்களை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பொருளாதார முன்னணியில், இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். திடீரென்று ஒரு பெரிய செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை

ரிஷபம் - வர்த்தகர்கள் லாப நோக்கத்தில் அதிகப் பொருட்களை வாங்கி குவிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக இழப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள், இன்று அலுவலக வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எதிர்மறை எண்ணங்களை விலக்கி, நேர்மறையாக இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆசீர்வாதத்தால் தைரியம் அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று மிகவும் சோர்வாகவும் சிக்கலாகவும் உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 முதல் இரவு 10:10 மணி வரை

மிதுனம் - தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், இன்று பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். எனவே, உங்கள் நாளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வணிகர்களின் ஏற்ற இறக்கமான நிலை மாறி, லாபம் ஈட்ட முடியும். அலுவலகத்தில் நிலுவையிலுள்ள வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தாருடன் முறையான நடந்து கொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கைத் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்காலம் குறித்து கலந்துரையாடலாம். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று கால் வலி, சோர்வு, பலவீனம் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம் - உங்கள் எல்லா கவலைகளையும் மறந்து, நாளை முழுமையாக அனுபவிக்கவும். தேவையற்ற விஷயங்களை யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள். நிதி நிலைமையை மேம்படுத்த முடியும். பாதியில் சிக்கித் தவிக்கும் பணியிலிருந்து நிவாரணம் பெறலாம். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். சமீபத்தில் புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், உங்கள் வேலையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று வாழ்க்கைத் துணையின் வழக்கத்தில் சில சாதகமான மாற்றங்களைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான முடிவுகளைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

சிம்மம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, தேவையற்ற மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும். பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். முடிக்கப்படாத எந்தவொரு வேலையையும் முடிப்பதன் மூலம் நிதி ரீதியாக பயனடையலாம். இன்று வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டால், உங்கள் பக்கத்தை பொறுமையாக புரிய வைக்க முயற்சிக்கவும். குடும்ப வாழ்க்கையில் சச்சரவுகள் அதிகரிக்கும். வேலை முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். இன்று, உங்கள் வேலைகள் அனைத்தையும் எவ்வித இடையூறும் இல்லாமல் முடிக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி - இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், இன்று தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் கடின உழைப்பால், உயர் அதிகாரிகளின் இதயங்களை வெல்வீர்கள். நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபர் என்றால், ஊழியர்களுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சிக்கவும். லேசான அலட்சியம் கூட பெரிய இழப்பை ஏற்படுத்தும். பணத்தின் அடிப்படையில் நாள் நன்றாக இருக்கும். சிந்தனையுடன் செலவிடுங்கள். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் சுப நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நிம்மதியாக நாளை அனுபவிப்பீர்கள். இருவரிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம் - வேலை முன்னணியில் சில பதற்றங்களுக்கு சாத்தியமாகும். சில்லறை வர்த்தகர்கள் இன்று நிதி இழப்பை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்பின் நல்ல பலன்களைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. இன்று அலுவலகத்தில், சில முக்கியமான பணிகள் சரியான நேரத்தில் முடிக்கப்படும். இதனால் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். பணம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். பாதகமான சூழ்நிலையில் அன்புக்குரியவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசினால், இன்று கழுத்தில் பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம் - இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நல்ல வெற்றியைப் பெறலாம். சில சந்தர்ப்பங்களில் ஏமாற்றமடைவீர்கள். அலுவலகத்தில் அதிக பணிச்சுமையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள். உங்கள் சிறு தவறுக்கு கூட உயர் அதிகாரிகள் கோபப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களை அமைதியாக வைத்துக் கொண்டால், தொல்லைகளைத் தவிர்க்கலாம். வணிகர்களுக்கு இன்று பெரிய நன்மை எதுவும் கிடைக்காது. குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே, கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

தனுசு - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். வெளிநாடு சென்று உயர் கல்வி பெறக்கூடிய உங்களது விருப்பத்தில் இருந்தவந்த பிரச்சனையை தீர்க்க வலுவான வாய்ப்புள்ளது. வேலை முன்னணியில் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். ஆன்லைனில் வணிகம் செய்வோர் பெரிதும் பயனடைவார்கள். வேலை தொடர்பாக திடீரென பயணம் செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்பட வாய்ப்புள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் மீது கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

மகரம் - வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். பேச்சு திறமையால் பெரிய லாபம் ஈட்டலாம். ரியல் எஸ்டேட் செய்வோர் பெரிய பிரச்சனையிலிருந்து விடுபடலாம். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு, இன்று உங்களது பணியில் சிறந்ததை கொடுக்க முடியும். உயர் அதிகாரிகள் உங்களது கடின உழைப்பை கவனிக்கலாம். பணத்தில் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும். பெரிய செலவு செய்யும் மனநிலையில் இருந்தால், அதைத் தவிர்த்திடவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம் - உடல்நலம் பற்றி பேசினால் இன்று சாதாரணமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் தினமும் லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்று குடும்ப முன்னணியில் நல்ல நாள். திடீரென்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். இது வீட்டின் சூழலை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். வீட்டு பொறுப்புகளில் கவனம் செலுத்தி வந்த உங்கள் வாழ்க்கைத் துணையுடன், இன்றைய தினம் மிகவும் சிறந்த நாளாக இருக்கும். அன்புக்குரியவரிடமிருந்து ஓர் ஆச்சரியத்தை பெற முடியும். பொருளாதார நிலையில் சிறு முன்னேற்றம் காணலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மீனம் - இன்று திடீரென்று சில கடினமான சூழலை சந்திக்க நேரிடலாம். இருப்பினும், நேர்மறையான சிந்தனையின் அடிப்படையில், சூழலை எளிதாக சமாளிக்க முடியும். நீங்கள் சற்று மனச்சோர்வில் இருந்தால், வெளியே சென்று நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். அவர்களை புரிந்துகொள்வதன் மூலம் வீட்டின் சிக்கலை தீர்க்க முடியும். பணத்தின் அடிப்படையில் இன்று விலையுயர்ந்த நாளாக இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்ற நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டில் மூத்தவர்களின் உதவியுடன் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0