இன்று இந்த ராசிக்காரரின் காதல் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட போகுது

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரரின் காதல் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட போகுது

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 10புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று கோபத்தை தவிர்க்காவிட்டால், பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீக்க இன்று சிறந்த நாள். காதல் வாழ்க்கையில் இன்று இனிமை இருக்கும். உறவுகளுக்கிடையே நம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். யோசித்து செலவுகளை செய்வதை நல்லது. உடல்நிலைமைப் பொறுத்தவரை, இன்று முதுகு தொடர்பானப் பிரச்சனை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 10 மணி வரை

ரிஷபம் - நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், உங்கள் வணிக முடிவுகளை சிந்தனையுடன் எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள், இன்று வாழ்வில் முன்னேற ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். உயர் அதிகாரிகள் உங்களுக்கு சில பெரிய மற்றும் முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கலாம். பண வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாட்டால் விரக்தியடையக்கூடும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், இந்த பிரச்சனைகள் மேற்கொண்டு வளராது. இது தவிர, உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மூன்றாம் நபர் தலையிட அனுமதிக்காவிட்டால் நல்லது. காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் அன்புக்குரியவரிடமிருந்து ஒரு அழகான பரிசைப் பெறலாம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம் - குடும்ப முன்னணியில், இன்று மிகவும் நல்ல நாள். குடும்பத்துடன் நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது தவிர, வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களையும் இன்று வாங்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், உங்கள் அனைத்து வேலைகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவடையும். இன்று நீங்கள் உங்கள் இலக்கை சரியான நேரத்தில் முடிக்க முடியும். சில்லறை வர்த்தகர்கள் நல்ல பொருளாதார நன்மை பெற முடியும். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார்கள். இன்று கண்கள் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம் - வீட்டில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குறிப்பாக வீட்டு பெரியவர்களை அன்போடும் மரியாதையோடும் நடத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று மர வியாபாரிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். நிதி ரீதியாக பெரிதும் பயனடையலாம். மறுபுறம், இன்று அரசாங்க வேலைகளில் பணிபுரிவோருக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கப்போகிறது. இன்று உங்கள் பணிச்சுமை அதிகரித்திருக்கலாம். உங்கள் எல்லா வேலைகளையும் முழு மனதுடன் முடிக்க முயற்சித்தால் நல்லது. உங்கள் கடின உழைப்பின் பலன் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறுவீர்கள். இன்று பொருளாதார முன்னணியில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். வரவை விட அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம் - நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல முடிவுகள் கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள், தங்கள் கடின உழைப்பிற்கான சிறந்த பலனைப் பெற்றிடலாம். அலுவலகத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற்றிடலாம். நிதி நிலைமை திருப்தியளிக்கும். தந்தையின் உடல்நிலை குறித்த உங்கள் அக்கறை இன்று அதிகரிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. காதல் வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று உங்கள் வாழ்க்கைத் துணை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:35 மணி முதல் மதியம் 1 மணி வரை

கன்னி  - எல்லா கவலைகளையும் மறந்து, இன்று வேடிக்கையான நாளாக அனுபவிக்க முடியும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட முயற்சிப்பது நல்லது. வலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். இன்று முக்கியமான பணியை சரியான நேரத்தில் முடிக்க முடியும். உங்கள் சிறந்த பணிக்காக முதலாளியிடமிருந்து நிறைய பாராட்டுகளையும் பெறுவீர்கள். கூட்டு தொழில் செய்வோர் நிதி ரீதியாக பயனடையலாம். சட்ட விஷங்யத்தில் இருந்துவந்த சங்கடங்கள் சற்று அகலும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வரவிற்கேற்ப செலவிடுவீர்கள். பெற்றோருடனான உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்  - இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படுத்த முடியும். சிந்தனையுடன் நிதி முடிவுகளை எடுத்தால், நிதி சிக்கல்கள் அனைத்தும் முடிவிற்கு வரும். வியாபாரிகள் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடினமாக உழைப்பதோடு, கவனமாகவும் இருக்க வேண்டும். இன்று வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நாளாக இருக்கும். காதல் அதிகரிக்கும். உடல்நலம் குறித்த விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். இன்று வயிறு தொடர்பான அசௌகரியம் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம் - நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், இன்று உங்கள் முயற்சியை அதிகரிக்க வேண்டும். முழு நேர்மறையான எண்ணத்துடன் முன்னேறுங்கள். விரைவில் வெற்றியைப் பெறுவீர்கள். வணிகர்கள் நீண்ட கால சிக்கல்கள் இன்று முடிவிற்கு வரும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் திடீர் பண வரவிற்கு வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்பத்தாருடன் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடமிருந்து சில நற்செய்திகளைப் பெறலாம். காதல் விஷயத்தில் இன்று சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

தனுசு - நீங்கள் போட்டி தேர்விற்கு தயாராகி வரும் மாணவராக இருந்தால், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வணிகர்கள், நிதிப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில வேலைகளுக்காக வங்கியில் கடன் வாங்க நினைத்தால், இன்று நீங்கள் ஏமாற்றத்தை அடையலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதலைத் தவிர்க்கவும். தேவையற்ற உற்சாகத்தால் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும். எதிரிகள் பாதகமான சூழ்நிலைகளில் உங்களை சிக்க வைப்பார்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை சளி, கபம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம் - ரியல் எஸ்டேட்டில் பணிபுரிவோருக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாள். நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். இது தவிர, இன்று சில புதிய வணிகத் திட்டங்களையும் உருவாக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கத்தை விட சிறப்பான நாளாக இருக்கும். இன்று எந்த அழுத்தமும் இல்லாமல் எல்லா வேலைகளையும் முடிப்பீர்கள். பண வரவு நல்ல நிலையில் இருக்கும். இன்று உங்கள் பழைய கடனை திருப்பிச் செலுத்த முடியும். பெற்றோருடன் அதிக நேரம் செலவிட வேண்டும். தாயிடமிருந்து ஒரு நல்ல பரிசையும் பெறலாம். திருமண வாழ்க்கையில் உங்கள் ஆர்வத்தையும் அன்பையும் உற்சாகத்தையும் பராமரிக்க, வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும். அவர்களை மதிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம்  - இன்று பண விஷயத்தில் ஒருவருடன் தகராறு ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவிட்டால், நிலைமை மோசமாகும். உத்தியோகஸ்தர்கள் இன்று புதிய யோசனைகளைப் பயன்படுத்த வேண்டும். இதனால் உங்கள் முன்னேற்ற கனவு விரைவில் நிறைவேறும். அலுவலகத்தில் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். வர்த்தகர்கள் இன்று பெரிய வணிகத்தில் பேரம் பேசுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். மேலும், அவர்களிடம் பொய் சொல்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லையென்றால், மோதல் சாத்தியமாகும். உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம்  - நீங்கள் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்தால், கவனமாக சிந்தித்து சொந்த முடிவை எடுப்பது நல்லது. மற்றவர்களின் வார்த்தைகளை கேட்டு அவசரப்பட வேண்டாம். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்ற, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். மேலும் உங்களுக்கிடையேயான தூரத்தையும் இது குறைக்கும். காதல் வாழ்க்கையில் ஒரு அழகான திருப்பம் ஏற்படும். உங்கள் துணை திருமணத்திற்கு முன்மொழியலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் கடினமாக உழைத்தால் தான் வெற்றியை பெற முடியும். இதன் மூலம், உயர் அதிகாரிகளின் மனதையும் வெல்லலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0