இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது நல்லது…
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 25 செவ்வாய்க்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் இன்று முடிக்க முயற்சிக்கவும். உங்கள் கடின உழைப்பின் நேர்மையான முடிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய மாற்றத்தைத் திட்டமிடுகிறீர்களானால், உங்கள் முடிவை கவனமாக எடுக்கவும். நல்ல முடிவுகளை காண உங்களுக்கு ஒரு சிறந்த திட்டம் தேவை. உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மேலும், சிந்தனையுடன் செலவிட அறிவுறுத்தப்படுகிறீர்கள். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எலும்புகள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
ரிஷபம் - உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிறரது விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வணிகர்கள் இன்று நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சிறு மாற்றம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு சர்ச்சைக்குரிய பிரச்சனையைப் பற்றியும் விவாதிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் ஒரு சிறிய விஷயத்திற்காக உங்களுக்கிடையே சண்டை ஏற்படக்கூடும். நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும். உடல்நலம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மிதுனம் - உங்கள் வீட்டின் சூழல் இன்று மிகவும் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்துடன் ஒரு ஆனந்தமான நாளாக இருக்கும். திருமணத்திற்கு தகுதியாக இருக்கும் உடன்பிறப்பிற்கு இன்று நல்ல திருமண திட்டம் கைக்கூடும். பொருளாதார கண்ணோட்டத்தில் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வணிகர்கள் இன்று எந்த ஆபத்தான முடிவும் எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் செய்யும் எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்கக்கூடாது. இல்லையெனில், உங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். தற்போதைய உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நீங்கள் இன்னும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
கடகம் - இன்று உங்கள் உடல்நலம் நன்றாக இருக்காது. குறிப்பாக உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், திடீரென்று உடல்நலம் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் கவனமாக இருங்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் மீது பொறுப்புகளின் சுமையை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் எந்த வேலையும் அவசரமாக செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் நீங்கள் ஒரு பெரிய தவறு செய்யக்கூடும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் வணிகம் இன்று துரிதப்படுத்தப்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும். இன்று பொருளாதார முன்னணியில் கலவையான முடிவுகள் இருக்கும். வருமானம் அதிகரித்தாலும் அதிகரிக்கும் செலவுகளால் மனஅழுத்தம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10:00 மணி வரை
சிம்மம் - இன்று நீங்கள் பேசும் போது வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எந்தவொரு பிரச்சனையிலும் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். வேலை முன்னணியில், இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். முன்னேற்றத்திற்காக அறிகுறிகள் தென்படும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோருக்கு இன்று நல்ல செய்தியைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பெரிய வணிகர்கள் நிதி விஷயத்தில் இன்று கவனமாக இருக்க வேண்டும். இன்று ஏதேனும் பெரிய நிதி பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், முழு எச்சரிக்கையுடன் இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, நேரத்திற்கு சாப்பிட பழகுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 முதல் மதியம் 2:00 மணி வரை
கன்னி - வேலை முன்னணியில், நீங்கள் கலக்க வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், நிச்சயமாக அதை புறக்கணிக்காதீர்கள். இன்று சிறு வணிகர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கப்போகிறது. எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் ஒரு புதிய பணியைத் தொடங்க விரும்பினால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் எழக்கூடும். குடும்பத்தின் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் சாத்தியமாகும். நீங்கள் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இருப்பினும், இந்த தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தூய்மையில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
துலாம் - வியாபாரிகள், இன்று தங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறலாம். விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். உங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டின் பெரியவர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சிக்கவும். உங்கள் தவறான அணுகுமுறை அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் நம்பிக்கை வலுப்பெறும். இன்று ஆரோக்கியத்தின் அடிப்பயில் இன்று ஒரு நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
விருச்சிகம் - உத்தியோகஸ்தர்கள் இன்று சிறந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவடையும். மேலும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்களின் ஒரு பெரிய பிரச்சனை தீரும். வணிகர்களுக்கு கலவையான முடிவுகள் கிடைக்கும். உங்களுக்கு நல்ல நிதி நன்மை கிடைக்கவில்லை என்றால் பொறுமையுடன் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை பாதிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு சில கருத்து வேறுபாடு இருக்கலாம். நிதி விஷயத்தில், இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். பழைய கடனை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9:00 மணி வரை
தனுசு - அலுவலக சூழல் இன்று மிகவும் நன்றாக இருக்கும். இன்று உங்கள் பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். முதலாளி உங்கள் செயல்திறனில் மிகவும் திருப்தி அடைவார். இன்று உங்கள் முன்னேற்றத்தின் அறிகுறிகளையும் பெறலாம். வியாபாரிகள் ஏதேனும் மாற்றத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்றால், இன்று அதற்கு சாதகமான நாள். அனுபவம் வாய்ந்த சிலரை கலந்தாலோசித்தால் உங்களுக்கு நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினரின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை மேம்படுத்த முடியும். பணப் பற்றாக்குறை காரணமாக, தடைப்பட்ட சில வேலைகளை முடிக்க முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
மகரம் - தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். உடன்பிறப்புகளுடன் இன்று சிறப்பாக நேரத்தை செலவிடலாம். குடும்ப உறுப்பினர் மூலம் சில நல்ல செய்திகளையும் நீங்கள் பெறலாம். வாழ்க்கைத் துணையின் உதவியுடன், நீங்கள் ஒரு முக்கியமான பணியை முடிக்க வாய்ப்புள்ளது. இன்று வேலை அல்லது வணிகம் பற்றி பேசும்போது, நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் முதலாளியின் மனநிலை மிகவும் கடுமையானதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். பொருளாதார முன்னணியில், இன்று நன்றாக இருக்கும். வருமானத்தை விட அதிகமாக செலவிட வேண்டாம். உங்களுக்கு இதய நோய் இருந்தால், இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
கும்பம் - உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மன அழுத்தம் கொஞ்சம் அதிகரிக்கக்கூடும், குறிப்பாக அலுவலகத்தில் போட்டிகள் அதிகரிக்கும். இன்று ஒரே நேரத்தில் பல பணிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொண்டால், அது உங்கள் வேலையிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வணிகர்கள் பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணப் பற்றாக்குறை உங்கள் கவலையை அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட முயற்சிக்கவும். உடல்நிலை பலவீனமாக இருக்கும். எனவே, ஓய்வெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மீனம் - அலுவலகத்தில் எந்தவொரு முக்கியமான பொறுப்பும் உங்களிடம் வழங்கப்படலாம். உங்கள் முதலாளி மற்றும் உயர் அதிகாரிகளை ஏமாற்றாமல் இருப்பது நல்லது. இந்த வேலையை நீங்கள் வெற்றிகரமாக முடிக்க முடிந்தால், நிச்சயமாக முன்னேறுவீர்கள். இன்று வணிகர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கப்போகிறது. இன்று நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். மொத்த விற்பனையாளர்கள் நன்றாக பயனடைய வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வாழ்க்கைத் துணையுடன் சற்று கடினமான சூழல் இருக்கும். கோபத்தில் தவறான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், வீட்டின் அமைதி கெடக்கூடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை