இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த லாபம் சுலபமாக கிடைக்கும்…

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 04 வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த லாபம் சுலபமாக கிடைக்கும்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் - பணத்தின் அடிப்படையில் இன்று முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக கடனை வாங்கியிருந்தால், விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சி செய்யவும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இருப்பினும், உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். அவர்களின் வேலையில் அதிகம் தலையிட வேண்டாம். வியாபாரிகள், இன்று பேரம் பேசுவதைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வேலையுடன் உங்கள் குடும்பத்திற்கும் சமமாக முக்கியத்தும் அளிக்கவும். அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்கினால் நல்லது. உங்கள் உடல்நலம் ஓரளவு பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம் - வேலை முன்னணியில், நீங்கள் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் எந்தவொரு பெரிய பிரச்சனையிலும் நீங்கள் நிவாரணம் பெறலாம். வணிகர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கவும். சிறிய விஷயங்களுக்கு விவாதிப்பதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் நல்ல முதலீடு செய்ய வாய்ப்பைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்காது. வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு சிறுநீரக தொடர்பான பிரச்சனை இருந்தால், இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம் - கூட்டு வியாபாரம் செய்வோருக்கு இன்று மிகுந்த பயனளிக்கும். நீங்கள் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். இருப்பினும், நிதி பரிவர்த்தனைகள் செய்யும் போது மிகவும் கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலையை விடாமுயற்சியுடன் முடிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறந்த நாளாக இருக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடப்படும். வாழ்க்கை துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி தொடர்பாக இன்று சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் 8:45 மணி வரை

கடகம் - வீட்டின் சூழல் இன்று மிகவும் பதற்றமாக இருக்கும். இன்று அலுவலகத்தில் முதலாளியின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சக ஊழியர்களுடனும் தகராறு ஏற்படலாம். எனவே, வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வர்த்தகர்கள் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று நீங்கள் பணம் தொடர்பான சில பெரிய வேலைகளைச் செய்ய நினைத்தால், அதற்கு இன்று சரியான நாள இல்லை. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் பெரியவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஒரு தகராறு இருந்தால், இன்று எல்லாம் அமைதியாக மாறும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கக்கூடும். ஏற்கனவே உங்கள் உடல்நிலை சரியாக இல்லை என்றால், மிகவும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: 23

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

சிம்மம் - வியாபாரிகள், சட்ட விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் இன்று நீங்கள் ஒரு பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் இன்று எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். அலுவலகத்தில் தடைப்பட்ட எந்த வேலையும் இன்று முடிக்கப்படலாம். முதலாளியும் உங்கள் செயல்திறனில் மிகவும் மகிழ்ச்சியடைவார். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் உங்கள் வரவை கெடுத்துவிடும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் சிறந்த நல்லிணக்கம் இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் வெளி உணவை தவிர்க்க வேண்டும். இது தவிர, யோகா மற்றும் தியானத்தை தவறாமல் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி - குடும்ப முன்னணியில் இன்று பதற்றம் சாத்தியமாகும். உங்கள் தந்தையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் தந்தையை அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு முக்கியமான வேலையையும் முடிக்க இன்று நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பணத்தைப் பற்றி பேசினால், இன்று ஒரு கலவையான நாளாக இருக்கும். இன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் முதலாளி அலுவலகத்தில் ஒரு பெரிய வேலையை உங்களிடம் ஒப்படைத்திருந்தால், அந்த வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சக ஊழியர்களை அதிகமாக நம்ப வேண்டாம். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் சிக்கலாம். இன்று வர்த்தகர்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் முதுகுவலியால் கலங்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் 9:45 மணி வரை

துலாம் - நிதி நிலைமை மேம்படக்கூடும். உங்களது நிதி முடிவின் நல்ல முடிவுகளையும் நீங்கள் பெறலாம். நிதி நெருக்கடி நீங்குவதன் மூலம் உங்கள் பெரிய கவலைகள் அகற்றப்படும். உத்தியோகஸ்தர்கள், கடினமாக உழைத்த போதிலும், இன்று ஏமாற்றமடைவீர்கள். உங்கள் கடின உழைப்பில் உங்கள் முதலாளி கவனம் செலுத்தவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். வேலையை மாற்றுவதை பற்றி பரிசீலிக்கலாம். இருப்பினும், அவசரப்பட வேண்டாம். வர்த்தகர்கள் இன்று நன்கு பயனடையலாம். உங்களது தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடங்குவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் 9:15 மணி வரை

விருச்சிகம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று அவ்வளவு நல்லதல்ல. பலவீனமான உடல்நலம் காரணமாக, உங்களது திட்டங்களில் தடை ஏற்படலாம். உங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணம் தொடர்பாக ஒருவரிடம் தகராறு ஏற்படலாம். எந்தவொரு சூழ்நிலையிலும் உங்கள் மனநிலையை இழப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். இன்று வேலை முன்னணியில் ஒரு கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது. வர்த்தகர்கள் இன்று பயணத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு - இன்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்திருங்கள். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், எதிர்மறை எண்ணத்திலிருந்து விலகி இருங்கள். வேலையைப் பற்றி பேசுகையில், அதிக நம்பிக்கையுடன் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக வியாபாரிகள் எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு முன்பு, நிச்சயமாக அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுங்கள். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பதற்றம் சாத்தியமாகும். உங்கள் கடுமையான அணுகுமுறை அன்புக்குரியவர்களை கோபப்படுத்தக்கூடும். குறிப்பாக வீட்டு பெரியவர்கள் உங்கள் இயல்பை விமர்சிக்கலாம். பணத்தின் அடிப்படையில் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 10:45 மணி வரை

மகரம் - மன அழுத்தம் குறைவதால் இன்று நீங்கள் நன்றாக உணருவீர்கள். இன்று சில முக்கியமான முடிவுகளையும் எடுக்கலாம். உத்தியோகஸ்தர்களின் வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்கப்படலாம். நிலுவையில் உள்ள எந்த வேலையையும் இன்று முடிக்க முடியும். கூட்டு வியாபாரம் செய்வோர் தங்கள் கூட்டாளருடன் நல்லுறவைப் பேணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் உங்களிடையே பிளவு ஏற்பட்டு, வணிகத்தில் இழப்பு ஏற்படக்கூடும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் உடல் ரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் 12:45 மணி வரை

கும்பம் - இன்று உங்கள் ஒவ்வொரு அடியையும் மிகவும் சிந்தனையுடனும் புத்திசாலித்தனமாகவும் எடுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பைப் பார்த்து, தங்கள் முதலாளி ஒரு பெரிய முடிவை எடுக்கலாம். உங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைப் பெறலாம். இன்று வர்த்தகர்களுக்கு நன்மை பயக்கும் நாளாக இருக்கும். நீங்கள் ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளைச் செய்தால், இன்று நீங்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமையில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்கள் அனைத்து நிதி முயற்சியும் வெற்றிகரமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருக்கலாம். வாழ்க்கைத் துணையின் இயல்பில் கடுமையான தன்மை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களை அமைதியாக வைத்திருக்காவிட்டால் அது பிரச்சனை ஏற்படலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், திடீரென்று உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சன ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

மீனம் - நீங்கள் இன்று மிகவும் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் வேகமாக முடிப்பீர்கள். உங்கள் சகாக்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் ஒரு சிறிய முதலீடு செய்ய இன்று வாய்ப்பைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், குடும்ப உறுப்பினர்கள் மீது உங்கள் கருத்தை சுமத்துவதைத் தவிர்க்கவும். அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைய உடன்பிறப்புகளுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கும். அதே நேரத்தில், காதல் வாழ்க்கையில் சில பதற்றம் சாத்தியமாகும். உங்கள் துணையின் நடத்தையில் சிறு வித்தியாசம் இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:45 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0