இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமா இருக்கணுமாம்

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமா இருக்கணுமாம்

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 5 வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - நீங்கள் இன்று மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள். ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுப்பீர்கள். நீங்கள் இன்று சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். அதே நேரத்தில், வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும். பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். இருப்பினும், வீட்டில் வயதானவர்களின் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை மேம்பட வாய்ப்புள்ளது. இன்று, திடீரென பண வரவு இருக்கலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு அமிலத்தன்மை, வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணைடனான உறவு நன்றாக இருக்கும். இன்று அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை

ரிஷபம் - நீண்ட காலம் தடைப்பட்ட வேலைகளை இன்று முடிக்க முடியும். இதனால், மன அமைதியைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் இன்று கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். முக்கிய சந்திப்பிற்கு அழைப்பு வரக்கூடும். வணிகர்னள் பொருளாதார நிலையை மேம்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில், வாழ்க்கைத்துடனான உறவில் ஆர்வம் அதிகரிக்கும். கோபத்தை அன்பால் வெல்ல முயற்சிக்கவும். அன்புக்குரியவரிடமிருந்து அழகான பரிசைப் பெறலாம். உடல்நலம் நன்றாக இருக்கும். மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மிதுனம் - உடல்நலம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். குறிப்பாக இரத்த அழுத்தம் இருந்தால், இன்று மன அழுத்தத்தையும் கோபத்தையும் தவிர்க்கவும். வணிகர்கள் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், பெரும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். அரசு பணியில் இருப்போர், சில நற்செய்திகளைப் பெறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையை அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மாலையில் நண்பர்களுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கடகம் - வீட்டின் அமைதியை பராமரிக்க விரும்பினால், உங்கள் வழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் இன்று வீட்டில் அர்த்தமற்ற தகராறு ஏற்படலாம். வேலை முன்னணியில், இன்று கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். நல்ல நிதி லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் பெரிய தடைகள் இருக்கலாம். எனவே,உங்கள் சிறந்ததைக் கொடுக்க முயற்சி செய்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று உங்கள் துணையின் இயல்பில் சில மாற்றங்களைக் காணலாம். நிதி விஷயத்தில், இந்த நாள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:25 மணி வரை

சிம்மம் - சமூக பணிகளில் இன்று உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். இன்று ஏழை எளியோருக்கு நிதி ரீதியாக உதவலாம். அலுவலக வேலையை கடின உழைப்பு மற்றும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். உயர்ட அதிகாரிகள் உங்கள் செயல்திறனைப் பாராட்டுவார்கள். வியாபாரிகள், இன்று ஒரு பெரிய வாடிக்கையாளரின் உதவியுடன் நன்றாக பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். தந்தையின் ஆலோசனையால் நீங்கள் நன்றாக பயனடையலாம். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள். காதல் திருமணம் செய்ய விரும்புவோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கன்னி - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். சகா ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடனும் நல்லுறவு இருக்கும். போக்குவரத்து தொடர்பான வணிகம் செய்வோருக்கு இன்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பெற்றோருடனான உறவில் கசப்பு இருக்கலாம். வாழ்க்கைத் துணைடன் தேவையற்ற சண்டையைத் தவிர்க்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 39

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

துலாம் - வேலையைப் பற்றி பேசுகையில், கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் இன்று நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். அலுவலகத்தில், நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்வது நல்லது. குறிப்பாக உங்கள் உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். தேவையற்ற விவாதங்களால் சிக்கலில் சிக்கக்கூடும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அன்புக்குரியவர் இன்று உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பலாம். மனக்கசப்பு அனைத்தையும் நீக்கி, அவர்களை அன்போடு நடத்துவது நல்லது. காதல் வாழ்க்கையில் சில மன அழுத்தம் சாத்தியமாகும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம் - பிறர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், இன்று பெரும் அவமானத்தை சந்திக்க நேரிடும். பேச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். முக்கிய பணிகளை அலுவலகத்தில் கவனமாக முடிக்க முயற்சி செய்யவும். வணிகர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். சிறு தொழிலதிபராக இருந்தால், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் உங்கள் துணையுடன் சிறந்த நேரத்தைப் பெறுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

தனுசு - இன்று உங்கள் மனதில் இனம் புரியாத பயம் இருக்கும். மேலும், பல கவலைகளால் சூழப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி நேர்மறை எண்ணங்களுடன் முன்னேறுங்கள். அலுவலகத்தில் உங்களால் முடிந்த அளவு சிறந்ததை வழங்க முயற்சிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள். வணிகர்கள் தங்கள் பெரிய வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வைத்திருக்க வேண்டும். துணி வியாபாரிகள், நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று உங்கள் உடன்பிறப்புகளுடன் நல்லுறவை வைத்திருக்க முடியும். பேசும் போது வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்துங்கள். வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையிலும் நிலைமைகள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மகரம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்கவும். எந்த வேலையையும் நாளை என்று ஒத்திவைக்க வேண்டாம். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். வணிகர்களுக்கு இன்று பெரிய நிதி நன்மை கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது. பழைய கடனை திருப்பிச் செலுத்துவதில் இன்று நீங்கள் வெற்றி காண முடியும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கையில் சில மன அழுத்தங்கள் சாத்தியமாகும். கருத்து வேறுபாடு இருக்கலாம். உடல்நலம் பற்றி பேசினால், குளிர்ந்த பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை

கும்பம் - இன்று குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் எல்லா பொறுப்புகளையும் எளிதாக நிறைவேற்ற முடியும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். அன்பு அதிகரிக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புவோர், குடும்பத்தாரின் ஒப்புதலை பெற வலுவான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். பொருளாதார முன்னணியில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. வேலையாக இருந்தாலும், வணிகமாக இருந்தாலும் இன்று எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

மீனம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். உங்களது நீண்ட கால பிரச்சனை இன்று முடிவுக்கு வரக்கூடும். அலுவலகத்தில், உங்களது பொறுப்பை நேர்மையுடனும், வெளிப்படைத்தன்டையுடனும் நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பங்குச் சந்தையில் பணி புரிவோருக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள். பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோரிடமிருந்து விலையுயர்ந்த பரிசு ஒன்றைப் பெறலாம். உடன்பிறப்புகளின் திருமண திட்டங்களில் முன்னேற்றம் காணப்படும். இன்று வாகனம் ஓட்டும் போது அவசரப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் 11:30 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0