இன்று இந்த ராசிக்காரர்களின் கவலை நீங்கி மகிழ்ச்சிகூடும்…

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 23 ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்களின் கவலை நீங்கி மகிழ்ச்சிகூடும்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதகமான மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். இருப்பினும், இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். திடீரென்று பணிச்சுமை கணிசமாக அதிகரிக்கும். வணிகர்கள் நன்கு பயனடையலாம். இருப்பினும், நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, வீட்டில் இருந்துவரும் கருத்து வேறுபாடு இன்று அமைதியாகும். உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். அதனால் உங்கள் பெரிய கவலை நீங்கும். பண விஷயத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் இன்று பெரிய செலவையும் செய்ய நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மாலை 3 மணி வரை

ரிஷபம் - இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் நிறைய இயக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் பணி சீராக நிறைவடையும். இன்று வர்த்தகர்களுக்கு நன்கு பயனளிக்கும் நாளாக அமையும். இன்று ஒரு பெரிய ஒப்பந்தத்தில் இணைய முடியும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் நீங்கள் நன்றாக உணருவீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் சளி, இருமல் அல்லது காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம் - உத்தியோகஸ்தர்கள், இன்று சிறிய வேலையைக் கூட கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், உங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படலாம். வர்த்தகர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிறைய போராட்டங்களுக்குப் பிறகு தகுந்த பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், வீட்டில் ஒரு பெரிய தகராறு ஏற்படலாம். கோபத்தில் எந்த தவறான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நல்லது. பண நிலைமை வலுவாக இருக்கும். புதிய வாகனம் அல்லது வேறு ஏதேனும் விலையுயர்ந்தப் பொருளை வாங்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமான நாள். ஆரோக்கியமாக இருக்க உங்கள் வழக்கத்தை மாற்ற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

கடகம் - இன்று நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று முக்கியமான சில பணிகள் முழுமையடையாது. அதிகப்படியான சோம்பேறி தனத்தால் நீங்கள் சிக்கலில் சிக்கலாம். இந்த விஷயத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், உங்கள் முயற்சியைத் துரிதப்படுத்த வேண்டும். வணிகர்கள் இன்று சில ஏமாற்றத்தை உணரலாம். உங்கள் பணி நிதி தொடர்பானது என்றால், உங்கள் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வாழ்க்கைத் துணையுடன் உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் தனிமையில் இருக்கும் நிலை ஏற்படலாம். பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று சிறிய பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்  - இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலை உணருவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களின் மீது உயர் அதிகாரிகளின் கருணை பார்வை இருக்கும். கூட்டு வர்த்தகம் செய்வோருக்கு இன்று லாபகரமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படைத்தன்மையை வைத்திருங்கள். பணம் நல்ல நிலையில் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும். உங்கள் மீது அதிக வேலை அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி  - பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் வரும் நாட்களில் சிக்கலில் சிக்கக்கூடும். வணிகர்கள் புதிய அல்லது பெரிய செயலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நிதி சிக்கல்கள் அதிகரிக்கலாம். ஊழியர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிடுவீர்கள். பெற்றோரின் பாசமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். இன்று உடன்பிறப்பிடமிருந்து பயனடைய முடியும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையுடன் விவாதத்தைத் தவிர்க்கவும். தினசரி கருத்து வேறுபாட்டால் உங்கள் உறவு பலவீனமடையும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்  - நீங்கள் சமீபத்தில் பெரிய இழப்பை சந்தித்த தொழிலதிபராக இருந்தால் கவலைப்பட தேவையில்லை. பொறுமையாக செயல்பட்டால் விரைவில் இழப்பை ஈடுசெய்ய முடியும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு கலவையான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இன்று வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தை விட நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் உறவு இணக்கமாக இருக்கும். மேலும், அவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று வயிற்று பிரச்சனை எதாவது இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

விருச்சிகம் - உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சிறு வணிகர்களுக்கு லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வாழ்க்கைத் துணையின் இயல்பில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், பேசி அவர்களின் மனதை அறிய முயற்சிக்க வேண்டும். பண வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆனால் வீண் செலவுகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். எனவே சிந்தனையுடன் செலவு செய்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று கால்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:25 மணி முதல் இரவு 7 மணி வரை

தனுசு - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்லதாக இருக்காது. ஏற்கனவே ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், திருமண வாழ்க்கையில் நிலைமைகள் மோசமாக இருக்கும். உங்கள் துணையை தேவையின்றி சந்தேகிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் தவறான நடத்தை அன்புக்குரியவரின் உணர்வுகளை புண்படுத்தும். பொருளாதார முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறலாம். பணம் தொடர்பான கவலையிலிருந்து நீங்கள் விடுபடலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான எந்தவொரு நன்மையையும் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வேலை முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

மகரம்  - பணி சுமை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். எனவே, நீங்கள் உங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிக மன அழுத்தத்தால் உங்கள் உடல்நலம் மோசமடையக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வாய்ப்பளிக்காதது நல்லது. அலுவலகத்தில் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும். வர்த்தகர்கள் இன்று நன்றாக பயனடையலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, கலவையான முடிவுகளைப் பெறலாம். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்  - இன்று வணிகர்களுக்கு மிகவும் நல்ல நாள். உங்கள் வணிகம் புதிய திசையில் நகர வாய்ப்பைப் பெறலாம். சமீபத்தில் ஒரு பெரிய முதலீடு செய்திருந்தால், நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். வேலை தேடுபவர்கள் விரும்பும் எந்த இடமாற்றத்தையும் பெறலாம். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று குடும்பத்துடன் குறுகிய பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், இந்த பரவலான தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பண நிலைமை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் விலையுயர்ந்த ஒன்றைப் பெறலாம். தேவையற்ற கவலைகளை நீக்குவதன் மூலம் மன ரீதியாக வலுவாக இருக்கலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம் - உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முயற்சிப்பது நல்லது. வாழ்க்கைத் துணை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணத்தின் சூழ்நிலையில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் முதலாளியுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். மேலும், உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். இன்று, தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோர் ஒரு பாதகமாக சூழலை சந்திக்கக்கூடும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் குறித்த கவலை தேவையில்லை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0