இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 25 வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் கோபப்படுவதைத் தவிர்க்கவும். வர்த்தகர்களுக்கு இயல்பை விட சிறப்பாக இருக்கும். தானியங்கள், எண்ணெய், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றுடன் தொடர்புடைய பணி செய்தால், இன்று நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் தந்தை உங்களிடம் கோபப்படலாம். அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்த வேலையும் நீங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. தாயின் உடல்நிலை குறைய வாய்ப்புள்ளது. பணத்தின் அடிப்படையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பேச்சை கேட்டு அதிகம் செலவு செய்ய வேண்டாம். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு சளி, இருமல் அல்லது காய்ச்சல் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம் - உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்த உங்கள் முயற்சிகளை துரிதப்படுத்தவும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் விரைவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்வீர்கள். சொந்தமாக சிறு தொழில் தொடங்க திட்டமிட்டால், அனுபவம் வாய்ந்த ஒருவரிடமிருந்து சரியான ஆலோசனையுடன் முன்னேறலாம். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பெற்றோரிடமிருந்து ஒரு நல்ல பரிசைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையை அதிகரிக்கும். ஆரோக்கியத்தின் பார்வையில் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்  - தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். வேலையுடன், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தை நீங்கள் தொடர்ந்து புறக்கணித்தால், உங்கள் உறவில் தூரம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனை ஆழமடைந்து வருவதாக தெரிகிறது. நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். சக ஊழியர்களை விமர்சிப்பதைத் தவிர்த்திடவும். வர்த்தகர்கள் இன்று திடீரென பயணிக்க வேண்டியிருக்கும். மேலும் நீங்கள் நிதி ரீதியாகவும் பயனடையலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

கடகம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விரைவில் பணம் தொடர்பான அனைத்து சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். புதிதாக தொழில் தொடங்கியவர்கள், மிகப்பெரிய லாபம் ஈட்டலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தாருடன் வேடிக்கையாக நேரத்தை செலவிடலாம். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேசினால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மாலை 3 மணி வரை

சிம்மம் - எதிர்காலத்தைப் பற்றிய கவலை இன்று உங்களை ஆட்கொள்ளக்கூடும். கவலைப்படுவதால் ஒன்றையும் சாதிக்க முடியாது. வெற்றி அடைய வேண்டுமெனில் கடுமையாக உழைக்க வேண்டும். எடுத்த முடிவில் சந்தேகம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். மின்னணு ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் முன்னேற ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம். இன்றைய நாள் உணவகங்களில் பணிபுரிவோருக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சிறு வணிகர்கள் அரசாங்கத்தின் விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான மோதலால் வீட்டில் பதற்றமான சூழ்நிலை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி  - இன்று உங்களுக்கு மிகுந்த நிம்மதியான நாளாக இருக்கும். நிதி சிக்கலால் பாதியில் நின்ற உங்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் முன்னேற்றம் காணலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண நிலைமை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல பரிசை வழங்குவதற்கு ஏற்ற நாள். உடல்நிலையைப் பொறுத்தவரை, தொடர்ந்து உட்கார்ந்தபடியே வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை

துலாம்  - இன்று நீங்கள் ஒரு பெரிய மற்றும் முக்கியமான முடிவை எடுத்தால், கவனமாக இருங்கள். மன ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். இன்று அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் அனைத்து வேலைகளையும் முழு உற்சாகத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்து முடிப்பீர்கள். தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோருக்கு இன்று நன்மை பயக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். குறிப்பாக, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலம் பற்றி பேசினால், உங்களுக்கு தொற்றுநோய் எதாவது ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 10 மணி வரை

விருச்சிகம் - வேலை முன்னணியில், இன்றைய தினம் நன்றாக இருக்கும். அலுவலக வேலைகளில் அவசரப்பட வேண்டாம். இன்று நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், அதன் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பெரிய பொருளாதார பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்க வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் கூட்டாளருடன் எந்தவொரு விவாதத்தையும் தவிர்க்கவும். வீட்டுச் சூழல் பதற்றமாக இருக்கும். வீட்டின் சில உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தை இன்று கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். பணம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உடல்நிலை மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு - சுகாதார விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களுக்கு நுரையீரலில் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மிகவும் திருப்தி அடைவார். சக ஊழியர்களிடையே உங்கள் மரியாதை அதிகரிக்கும். வர்த்தகர்கள் இன்று பணத்தை இழக்க நேரிடும். நிதி விஷயங்களில் கவனமாக இருங்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உடன்பிறப்புகளுக்கு நல்ல வரன் தேடிவரும். பெற்றோரின் ஆசீர்வாதமும், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவும் கிடைக்கும். இன்று அதிகப்படியான செலவுகளை கட்டுப்டுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

மகரம்  - அதிகரிக்கும் உடல் சோர்வால் இன்று சில சிக்கல்கள் ஏற்படலாம். நீங்கள் போதுமான ஓய்வு எடுப்பது நல்லது. நிலுவையில் உள்ள உங்கள் பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். இன்று உயர் அதிகாரிகள் உங்கள் பணிகளை மதிப்பாய்வு செய்யலாம். வணிகர்களின் நீண்ட கால தொந்தரவுகள் இன்று நீங்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர இணைப்பு அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் வலுவாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். சில பெரிய செலவுகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம் - நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகளை முடிக்க வேண்டுமெனில், துர்கா தேவியை வழிப்பட்ட பின்பு பணியைத் தொடங்குங்கள். உங்கள் பணிகள் எந்த இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். மேலும், மன அமைதியைப் பெறுவீர்கள். அலுவலக சூழல் நன்றாக இருக்கும். பணியிடத்தில் யாருடனும் வாதங்களையும், மோதல்களையும் தவிர்க்கவும். வியாபாரிகள் இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். அவரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் மிகவும் நன்றாக உணருவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

மீனம் - அதிகரிக்கும் மன கவலைகளால் நீங்கள் இன்று நன்றாக உணர மாட்டீர்கள். எனவே, எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்கவும். இல்லையெனில், தொல்லைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஆமை வேகத்தில் பணிகளை செய்தால் சிக்கல்களை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். வர்த்தகர்களுக்கு இன்று கலவையான தினமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் கோபமான அணுகுமுறை, தொந்தரவாக இருப்பதோடு, வீட்டின் அமைதியையும் குலைக்கும். இன்று நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக உணர மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0