இந்த ராசிக்காரங்க கோபத்தைக் கட்டுப்படுத்தலன்னா, வேலை போகவும் வாய்ப்பிருக்காம்!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ராசிக்காரங்க கோபத்தைக் கட்டுப்படுத்தலன்னா, வேலை போகவும் வாய்ப்பிருக்காம்!

இன்று மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 12வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - உங்கள் கோபத்தையும், ஆவேச பேச்சையும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இன்று சில பெரிய சிக்கல்களில் சிக்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களிடம் கோபப்பட நேர்ந்தால், பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது. வணிகர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். பொருளாதார முன்னணியில் இன்று நல்ல நாள். அதிகரித்து வரும் சேமிப்பால், நல்ல பலன் அடையலாம். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்பத்துடனான உறவு வலுப்பெறும். குழந்தைகள் மூலம் சில நற்செய்திகளைப் பெற்றிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

ரிஷபம் - நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று மன அமைதியை உணருவீர்கள். இன்று அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்கு செல்லலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்தியல் வேறுபாடுகளுக்கு சாத்தியமாகும். இருப்பினும், புரிதலுடன் விஷயத்தைக் கையாள்வீர்கள். வியாபாரிகள் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். அதனால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலை இன்று எளிதாக முடிக்கப்படும். மேலும், இன்று நிலுவையில் உள்ள வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். பணத்தின் அடிப்படையில் எந்த பெரிய வெற்றிகளையும் பெறலாம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மிதுனம் - இன்று நீங்கள் மகிழ்ச்சியாக பொழுதை போக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். இன்று பண வரவை பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்துடன் நாளை நன்றாக அனுபவிப்பீர்கள். வாழ்க்கை துணையிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். காதல் வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். உத்தியோகஸ்தர்கள், கடினமான பணிகள் கூட இன்று எளிதாக முடித்திடலாம். உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவு நன்றாக இருக்கும். நீண்ட காலமாக காத்திருந்த உங்கள் திறமையைக் வெளிக்காட்ட உங்களுக்கு சில வாய்ப்புகள் வழங்கப்படலாம். எனவே கடினமாக உழைக்கவும். மொத்த வர்த்தகர்கள் நன்றாக பயனடைவார்கள். உடல்நலம் மேம்படுவதால், மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம் - நீங்கள் சீரான முறையில் நடந்து கொள்ளாவிட்டால், இன்று உங்கள் வார்த்தைகளால் பிறரைக் காயப்படுத்த நேரிடலாம். வேலை முன்னணியில் நல்ல நாளாக இருக்கும். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். கடின உழைப்பால் உயர் அதிகாரிகள் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். வணிகர்கள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்த்திடவும். இன்று உடல்நலம் குறையக்கூடும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பயணம் மேற்கொள்ள ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் மாலை 3:40 மணி வரை

சிம்மம் - இன்று உங்களுக்கு நிறைய மகிழ்ச்சிகள் தேடி வரும். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் மன அழுத்தமில்லாமலும் சிறந்த மனநிலையிலும் இருப்பீர்கள். உங்கள் நிதி நிலை பலப்படுத்தப்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை காரணமாக உங்கள் வாழ்க்கையில் எந்த சாதகமான மாற்றமும் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில், விஷயங்கள் சாதகமாக மாறக்கூடும். அலுவலகத்தில், உங்கள் பணியில் முழு கவனம் செலுத்தவும். மேலும், உங்கள் எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். வணிகர்கள் தங்கள் முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி - இன்று உங்களுக்கு ஒரு கலவையான முடிவாக இருக்கும். அதிக வேலை அல்லது வணிக பணிச்சுமை காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இன்று, வணிகத்துடன் தொடர்புடையவர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பெரிய திட்டங்களை மீண்டும் சரிபார்ப்ப வேண்டும். உத்தியோகஸ்தர்கள் இன்று வேலைக்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும். பொருளாதார முன்னணியில், நாள் நன்றாக இல்லை. பொழுதுபோக்கு ஓய்வுக்காக நேரத்தை செலவிட திட்டமிட்டால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வயிறு தொடர்பான எந்த நோயும் உங்களைத் தொந்தரவு செய்யும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை

துலாம் - இன்று சில சந்தர்ப்பங்களில் உங்கள் முக்கிய முடிவை எடுக்கலாம். இன்று சில காரணங்களால் வர வேண்டிய பணம் எங்காவது சிக்கிக்கொள்ளக்கூடும். எந்தவொரு நிதி சார்ந்த முடிவையும் அவசரமாகவோ அல்லது சிந்தனையின்றியோ எடுக்காதீர்கள். இல்லையெனில், இது தவறான முடிவுகளை ஏற்படுத்தக்கூடும். திருமண வாழ்க்கையில் குறைந்து வரும் ஆர்வத்தால் வாழ்க்கைத் துணையிடமிருந்து விலக நேரிடலாம். பொறுப்புகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களுடன் நேரம் செலவிடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள், இன்று சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இதனால், சில பணிகள் முடிவடையாமலும் போலாம். வணிகர்கள் பெரிய முதலீடுகளை இன்று தவிர்த்திடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

விருச்சிகம் - இன்று உங்கள் எல்லா வேலைகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்க முடியும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களிடம் சில பெரிய மற்றும் புதிய வேலைகளை ஒப்படைக்க முடியும். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். வணிகர்கள் பெரிய முதலீட்டின் மூலம் பயனடையலாம். அலுவலகத்தில் அனைவருக்கும் மத்தியில் உங்கள் நல்ல நடத்தை மற்றும் சீரான பேச்சும் பெரிதும் பாராட்டப்படும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் ஒரு நல்ல நாளாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் இன்று மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை

தனுசு - காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகத்தின் அடிப்படையில் எந்தவிதமான கருத்துகளை தெரிவிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உறவில் ஆழமான பிளவு ஏற்படக்கூடும். இன்று வாழ்க்கைத் துணையுடன் மிக முக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் எல்லா வேலைகளிலும் அதிக கவனம் செலுத்துங்கள். இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியுடன், பாதியில் சிக்கிக்கொண்ட எந்த வேலையும் முடிவடையும். வணிகர்கள் இன்று எந்த பெரிய ஒப்பந்தத்தையும் செய்யலாம். வீட்டின் சூழல் மிகவும் மகிழ்ச்சியாக மாறும். இன்று உற்சாகமாகவும் சிறப்பாகவும் உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மகரம் - உத்தியோகஸ்தர்கள், கடின உழைப்பை வழங்கியபோதிலும் நல்ல பலன் கிடைக்காமல் போகலாம். உங்கள் வேலையில் உயர் அதிகாரிகள் பல குறைபாடுகளைக் காணலாம். தொழிலதிபர்கள் செய்யும் எந்த வேலையும் கெடுக்கப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டில் நிலவும் பதற்றத்தை சரிசெய்ய உங்களால் முடிந்தவரை முயற்சிப்பீர்கள். இன்று மிகவும் காதல் நிறைந்த நாளாக மாறும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். நிதி ரீதியாக வலுவாக இருக்க விரும்பினால், உங்கள் முடிவுகளை பணத்தின் அடிப்படையில் கவனியுங்கள். ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

கும்பம் - இன்று உங்களுக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும். திட்டத்தின் படி உங்கள் பணிகள் எதுவும் செய்ய முடியாது. இது உங்களுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். இன்று உங்கள் இயல்பில் அதிகப்படியான கோபம் இருக்கும். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தாயின் உடல்நிலை குறையக்கூடும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். அவர்களை அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். வர்த்தகர்கள், இன்று எந்த ஆபத்தான முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்கவும். பொருளாதார முன்னணியில், நாள் சாதாரணமாக இருக்கும். இன்று, ஒரு சிறிய விஷயத்தில், வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் இன்று மிகவும் பலவீனமாக இருப்பீர்கள். சாப்பிடுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மீனம் - வேலை முன்னணியில், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கலாம். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தினால், முன்னேற்றத்திற்கான புதிய வழி திறக்கப்பட வாய்ப்புள்ளது. பணத்தின் அடிப்படையில் இன்று கலக்கப்படும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இன்று சில பெரிய செலவுகளும் சாத்தியமாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். குடும்பத்தாருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டை, பொறுமையாக எடுத்துரைக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையை மரியாதையுடன் நடத்த வேண்டும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று கல்வித்துறையில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், அதிக மன அழுத்தத்தை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0