இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தால் பெரும் இழப்பை சந்திக்கலாம்...

இன்று மீன மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தால் பெரும் இழப்பை சந்திக்கலாம்...

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்

இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். அலுவலகத்தில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் எல்லா வேலைகளையும் முடிக்க முடியும். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவார்கள். வியாபாரிகளுக்கு இன்று வியாபாரத்தில் சாதகமான மாற்றம் ஏற்படலாம். இன்றைய நாள் உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் உகந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய பண வரவைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், குடும்ப பிரச்சனையை மாதானப்படுத்தலாம் மற்றும் இதனால் வீட்டின் சூழலில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மன அழுத்தமில்லாமல் இருப்பீர்கள். நீங்கள் உடல் ரீதியாக மிகவும் ஆற்றல் மிக்கவராக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:50 மணி வரை

ரிஷபம்

வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்ளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களின் கடினமான பணிகள் எதுவும் தடையின்றி நிறைவடையும். அரசு ஊழியர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பும் இடமாற்றத்தைப் பெறலாம். வியாபாரிகள் இன்று எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலை வலுவடையும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தாயிடமிருந்து நல்ல லாபம் சாத்தியமாகும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், கண்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, கவனக்குறைவாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை

மிதுனம்

குடும்பத்தில் இன்று மிக நல்ல நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் பொறுப்புகளை சிறப்பான முறையில் நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் உணர்ச்சி ரீதியான இணைப்பு அதிகரிக்கும். இன்று நீங்கள் ஏதேனும் முக்கியமான முடிவை எடுத்தால், அன்புக்குரியவரின் ஆதரவைப் பெறுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு வலுவான வாய்ப்புள்ளது. புதிதாக கூட்டு வியாபாரத்தைத் தொடங்க விரும்பினால், அவசரப்பட்டு எந்த முடிவு எடுப்பதையும் தவிர்க்கவிம். நிதி ரீதியாக நன்றாக இருக்க, உங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்து, சேமிப்பில் கவனம் செலுத்தினால், விரைவில் உங்கள் நிதிப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிகம் வறுத்த, காரசாரமான உணவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கடகம்

இன்று உங்கள் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இன்று உங்கள் முக்கியமான வேலையில் கவனம் செலுத்த முடியும். அலுவலகத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று முதலாளி உங்கள் செயல்திறனில் மிகவும் மகிழ்ச்சி அடைவார். மேலும் உங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளும் தென்படலாம். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் இன்று நல்ல வெற்றியைப் பெற முடியும். நீங்கள் பதவி உயர்வு பெற வலுவான வாய்ப்புள்ளது. வணிகர்கள் முக்கிய ஆவணங்களை மிகவும் கவனமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரம் பெரும் இழப்பை ஏற்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அனைத்து தவறான புரிதல்களையும் அகற்ற முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கையில் முரண்பாடு அதிகரிக்கும். இன்று பொருளாதார முன்னணியில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

சிம்மம்

இன்று நீங்கள் பல கவலைகளால் சூழப்பட்டிருப்பீர்கள். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், நீங்கள் மிகுந்த அழுத்தத்தை உணர்வீர்கள். வேலை மற்றும் பணிச்சுமை அதிகமாக இருந்தால், உங்கள் எல்லா வேலைகளையும் அமைதியான மனதுடன் முடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அவசரம் அல்லது மன அழுத்தம் உங்கள் செயல்திறனில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும், இது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வணிகர்களுக்கு இன்று ஒரு புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு இருக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்களைக் காணலாம். அன்புக்குரியவர்கள் உங்களை புறக்கணிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

கன்னி

இன்று கன்னி ராசி கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக படிக்கட்டுகளில் ஏறும் போதும் இறங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்தினால், நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வணிகர்கள் இன்று நிறைய ஓட வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பால் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். மறுபுறம், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் எந்த விதமான வாக்குவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை

துலாம்

இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் நினைக்கும் அனைத்து வேலைகளும் தடையின்றி நிறைவடையும். பண பற்றிய எந்த கவலையில் இருந்தும் விடுபடலாம். தடைப்பட்ட பண வரவை மீட்க முடியும். இருப்பினும், உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை முன்னேற்ற வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 9:20 மணி வரை

விருச்சிகம்

கிரகங்களின் இயக்கம் இன்று உங்களுக்கு நல்ல அறிகுறிகளைக் கொடுக்கும். இன்று நீங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறலாம். இன்று நீங்கள் அலுவலகத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு வலுவான வாய்ப்புள்ளது. நிதி தொடர்பான வேலை செய்யவோருக்கு இன்றைய மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய லாபம் சம்பாதிக்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்களுக்கு திருமண வயதில் இளைய சகோதரர் அல்லது சகோதரி இருந்தால், இன்று அவர்களுக்கு ஒரு நல்ல வரன் தேடி வரலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் எந்த பழைய நல்ல நினைவும் மீண்டும் புதுப்பிக்கப்படும். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், மனரீதியாக நீங்கள் நன்றாக உணருவீர்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை

தனுசு

அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியலை வளர விடாதீர்கள். இல்லையெனில் இன்று நீங்கள் முதலாளியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பொறாமை கொண்ட சக ஊழியர்கள் உங்கள் முக்கியமான வேலைகளில் தடைகளை ஏற்படுத்தலாம். வணிகர்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இந்த தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, வீ்ட்டிற்கு வெளியே செல்லும் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:40 மணி வரை

மகரம்

எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி உங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். முக்கியமான பொறுப்புகளை ஒப்படைக்கும்போது, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். வணிகர்களின் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். இன்று நீங்கள் சட்ட விவகாரத்தில் சிக்கிக்கொள்ளலாம். இவை அனைத்தும் உங்கள் தவறான முடிவுகளின் விளைவாகும். உங்கள் வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க, அன்புக்குரியவர்களுடன் உங்கள் நடத்தையை சரியாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். கோபம் மற்றும் சச்சரவுகளிலிருந்து விலகி இருங்கள். உங்கள் நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுவது, அதிக மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:40 மணி வரை

கும்பம்

இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இது மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். இன்று நண்பர்களின் உதவியால் நல்ல வெற்றியைப் பெற முடியும். அலுவலகத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் மிக வேகமாக முடிப்பீர்கள். மேலும், நிலுவையில் உள்ள சில வேலைகளையும் இன்றே முடிக்க முடியும். இன்று வியாபாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சிலர் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம். இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை, நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு சிறப்பு என்பதை உணர வைக்க முடியும். உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து சிறப்பு பரிசையும் பெறலாம். இன்று நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மீனம்

இன்று நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் சோகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். இது உங்களை நன்றாக உணர வைக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வேலையில் சில நேர்மறையான மாற்றங்கள் சாத்தியமாகும். நீங்கள் முன்னேற ஒரு நல்ல வாய்ப்பைப் பெறலாம். பணத்தைப் பற்றி பேசினால், நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் சேமிப்பும் கணிசமாக அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல், நீங்கள் எந்த பழைய குடும்பக் கடனையும் அடைப்பதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்காது. நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். உணவில் கவனக்குறைவு காரணமாக, உங்கள் ஆரோக்கியமும் மோசமடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0