இந்த ராசிக்காரர்கள் இன்றைய தினம் பெரிய இழப்பை சந்திக்க வாய்ப்பிருக்காம்!
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், துக்கம் என அனைத்தை பற்றியும் அறியலாம். இன்றைய தினம் உங்கள் ராசிக்கான பலன் எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டமம். எனவே, மற்ற நாட்களை காட்டிலும் இன்று சற்று உஷாராக செயல்பட வேண்டும். இருந்தாலும், இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் வந்து உங்களது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருந்தாலும், இந்த கடின உழைப்பிற்கான பலனை விரைவில் பெற்றிடுவீர். வணிகர்களுக்கு இன்று கலவையான நாள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம் - ரிஷப ராசி நேயர்களுக்கு, இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களது எதிரிகள் இன்று மிகவும் சுறுசுறுபபாக இருப்பார்கன் என்பதால், சில தடைகளை சந்திக்கலாம். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. பெரிய திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில்லறை வர்த்தகர்கள் இன்று பயனடையலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் சட்ட விவகாரங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இன்று சூழ்நிலை நன்றாக இருக்காது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் உருவாகலாம். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஆரோக்கியம் பற்றி பேசினால், நீரிழிவு நோயாளிகள் இன்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் 6 மணி வரை
மிதுனம் - இன்று நீங்கள் எடுக்கும் சில முக்கிய முடிவுகளால், பயனடைய வாய்ப்புள்ளது. பண வரவு திருப்தியளிக்கும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்கலாம். பெற்றோருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். தந்தையிடமிருந்து சில ஆலோசனைகளை பெறலாம். வணிகர்களும், புதிதாக தொழில் தொடங்குவோரும் இன்று நிறைய உழைக்க வேண்டியிருக்கும். மாலையில் ஆலய வழிபாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். கடவுளிடம் பிரார்த்திப்பதன் மூலம் மன அமைதியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம் - இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையப்போகிறது. இத்தனை நாளாக வாழ்வில் இருந்துவந்த ஏற்ற இறக்கங்கள் மறைய போகின்றன. இருப்பினும், சில முக்கிய தருணங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலக பணிகளை விரைந்து முடிக்க முயற்சியுங்கள். உயர் அதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் பணிவான அணுகுமுறையை கையாளுவது சிறப்பு. வணிகர்கள். எந்தவொரு விவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. முடிவுகள் எதையும் அவசரமாக எடுக்க வேண்டாம். பரபரப்பாக வேலை சூழலிலும், குடும்பத்தாரோடு நேரம் ஒதுக்க முயற்சிக்கவும். வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த மோதல் மறையும். உடல்நிலை பற்றிய கவலை கொள்ள தேவையில்லை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் இன்றைக்கு பெரிய இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்களது விலையுயர்ந்த பொருட்களை பத்திரமாக எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் பாதகமான சூழல்களை சந்திக்கக்கூடும். அதுபோன்ற, தருணங்களில் உங்களது கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வணிகர்கள், பொருளாதார விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பண வரவு மகிழ்ச்சியை தரும். உங்களது வாழ்க்கை துணை உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே, அவருடன் நேரம் செலவிட முயற்சிக்கவும். உடல்நலம் பற்றி பேசும்போது, வெளியே சாப்பிடுவதை தவிர்த்திடவும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:35 மணி முதல் மதியம் 1 மணி வரை
கன்னி - கன்னி ராசிக்காரர்கள் சந்தித்து வந்த சில பெரிய பிரச்சனைகள் ஏதேனும் இன்று தீர்க்கப்படலாம். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு, சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பண வரவு திருப்தியளிக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு பிரிந்து வசிப்பவர்களுக்கு, குடும்பத்தாரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலை சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அதிகப்படியான மன அழுத்தத்தால் உடல்நலம் பாதிக்கக்கூடும். வீண் ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடிக்கு ஆளாகலாம். நிதி சார்ந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஏதேனும் ஒரு வேலையை உங்களிடம் ஒப்படைத்தால், நீங்கள் அதிகப்படியான ஆட்சேபனைக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். வணிகர்களுக்கு இன்று அவ்வளவு நன்றாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 முதல் 9 மணி வரை
விருச்சிகம் - அலுவலகத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தியை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்பிற்கான பலனை பெறப் போகிறீர்கள். அது பதவி உயர்வாகவோ அல்லது ஊதிய உயர்வாகவோ இருக்கலாம். பெரிய வர்த்தவர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். அதுதவிர, சில முக்கிய மற்றும் பெரிய வாடிக்கையாளர்களுடன் இணைய முடியும். உங்களது வாழ்க்கை துணையுடனான உறவில் கசப்பு அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற சூழலில், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை
தனுசு - இன்றைய தொடக்கம் அவ்வளவு சரியாக இருக்காது. உடல்நலம் பலவீனமடையக்கூடும். அதனால், எந்தவொரு வேலையிலும் முழு ஈடுபாட்டை காட்ட முடியாமல் போகலாம். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லிணக்கம் உருவாகும். பெற்றோரின் ஆதரவுடன் நிதி நிலைமை வலுப்பெறும். உணவகங்களில் பணி புரிபவர்கள் இன்று நல்ல பலனை பெறலாம். மாணவர்கள், தங்களது படிப்பில் பெரிய தடை உருவாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மாலை 3 மணி வரை
மகரம் - இன்றைய தினம் மகர ராசிக்காரர்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவர். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், அதிக பொறுப்புகளை பெறக்கூடும். அலுவலகத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். நிலுவையில் உள்ள பணிகளை அதிக கவனம் செலுத்துங்கள். வணிகர்கள் இன்றைய தினம் பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். வாழ்க்கை துணையில் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை
கும்பம் - வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குறிப்பாக, உடன்பிறப்புகளோடு வேடிக்கையான பொழுதை கழிப்பீர்கள். தந்தை தொடர்பான விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். வாழ்க்கை துணையுடனான இணக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள், சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைய முயற்சிக்கவும். உங்களது கால தாமதம் உயர் அதிகாரியின் மனநிலையை கெடுக்கக்கூடும். வணிகர்கள், தங்களது முன்னேற்றம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். புதிய தொழில் தொடக்கம் செய்ய முதலீட்டிற்கான சரியான நேரம் இது கிடையாது. உடல்நலம் பற்றி கவலை கொள்ள தேவையில்லை.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் 10 மணி வரை
மீனம் - வீட்டில் மங்களகரமான விஷேசம் நடைபெற வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். பரவி வரும் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் உங்களிடம் வழங்கப்பட்ட புதிய, பெரிய திட்டங்களை பொறுப்புடன், கடினமாக உழைத்து, விடாமுயற்சியுடன் பணியாற்ற வேண்டும். நேரத்தையும் கவனத்தில் கொண்டு பணியாற்ற மறவாதீர்கள். வியாபாரிகள், தேவையற்ற பேச்சால் இழப்பை சந்திக்க நேரிடும். வாடிக்கையாளர்களுடன் பேசும் போது சொற்களை பார்த்து பயன்படுத்தவும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை