இந்த 2 ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும்!
அலுவலக பணியால் சிறிது மன அழுத்தம் உருவாகலாம். வணிகர்கள் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடனான உறவு வலுப்பெறும்.
வேலையில் இருந்து திருமணம் வரை அனைத்தை பற்றியும் ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், இன்றைய தினம் உங்களது கிரக நிலைகளின் அடிப்படையில், உங்கள் ராசிக்கான பலனை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - அலுவலகத்தில் உங்களது செயல்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதனால், உங்களது முயற்சியும், மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் புரிவோருக்கு இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உங்களது உணர்வுகளை வாழ்க்கை துணை முன்பு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும். பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பண வரவு திருப்தி அளிக்கும். வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பை பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
ரிஷபம் - நீங்கள் சிறிது விட்டுக்கொடுத்து சென்றால், வாழ்க்கை துணையுடனான கருத்து வேறுபாட்டை தீர்க்க முடியும். பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி பிறக்கும். புதிய வருமானத்திற்கு ஆதாரத்தை கண்டறிவீர்கள். அலுவலகத்தில் சாதகமான நிலை இருக்கும். உங்களது கடின உழைப்பிற்கான சரியான பலனை பெறுவீர்கள். இரும்பு தொடர்பான வணிகம் மேற்கொள்பவர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாள். சிக்கல்கள் தீரும். நாளின் பிற்பகுதியில் நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலை பற்றி பேசும்போது, குளிர்ந்த உணவுகள் அல்லது பானங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
மிதுனம் - உத்தியோகத்தில் பதவி உயர்வோடு கூடிய ஊதிய உயர்வை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். தொட்ட அனைத்து காரியத்திலும் வெற்றி காண்பீர்கள். சரியான புரிதலோடு செயல்களை செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மிகவும் பரபரப்புடன் காணப்பட்டாலும், ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களது புத்துணர்ச்சியால் இன்றைய தினம் மிகவும் ஆனந்தாமாக இருக்கப்போகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
கடகம் - இன்றைய தினம் உத்தியோகம் தொடர்பான பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், முக்கிய ஆவணங்களை கவனமாக உடன் எடுத்து செல்ல மறவாதீர்கள். மறதிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அலுவலக பணியால் சிறிது மன அழுத்தம் உருவாகலாம். வணிகர்கள் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடனான உறவு வலுப்பெறும். இன்று உடன்பிறப்புகளால் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடுகள் உருவாகக்கூடும். ஆரோக்கியம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
சிம்மம் - தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். இதனால், பணத்தை பற்றி கவலை மேலோங்கும். மேலும், சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். முடங்கிய பண வரவினால் பிரச்சனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. உங்களது அதிகப்படியான கோபம், வாழ்க்கை துணையுடனான மோதலை அதிகரிக்கும். பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை. இதனால், திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம். அலுவலக வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்கள் குறித்த தேவையற்ற விமர்சனங்கள் கூறுவதை தவிர்த்திடவும். இல்லயென்றால், அலுவலகத்தில் உங்களது பெயருக்கும், வேலைக்குமே பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை
கன்னி - பண வரவு திருப்தி அளிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நிதி சார்ந்த முடிவுகளை மகிழ்ச்சியான மனநிலையில் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் உருவாகக்கூடும். அலுவலக பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிறப்பாக வேலையை செய்து முடிப்பதன் மூலம், புதிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். வாழ்க்கை துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தை பற்றி பேசுகையில், இரவில் நேரம் கழித்து தூங்கும் பழக்கத்தை தவிர்த்திடவும். உண்ணும் உணவில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11:05 மணி வரை
துலாம் - உங்களது அலட்சியப்போக்கு காரணமாக, உடல்நிலை குறித்து வருத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும். மது பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றை விட்டுவிடுவது நல்லது. குறிப்பாக, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்திடவும். உத்தியோகம் பற்றி பேசினால், உயர் அதிகாரிகளிடம் ஏதாவது பேச நினைத்தால், அதற்கு இன்று சிறப்பான நாள். நிதானம் தேவைப்படும் நாள். வணிகர்களுக்கு இன்று நல்ல நாள். குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். உங்களது பேச்சையும், நடத்தையையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:15 மணி வரை
விருச்சிகம் - இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சிறிய விஷயங்கள் கூட இன்று உங்களை மிகுந்த ஆனந்தத்தில்ஆழ்த்தும். நீங்கள் வியாபாரம் செய்தால், சமீபத்தில் பெரிய இழப்பை ஏதேனும் சந்தித்திருந்தால், அந்த இழப்பை ஈடுசெய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில், திடீர் இடமாற்றம் பற்றிய செய்தி வரலாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இளைய உடன்பிறப்புகளுடன் நல்ல உறவு இருக்கும். அவர்களின் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்களுக்கு வழிகாட்ட வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையைப் பற்றிய கவலை எதுவும் தேவையில்லை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:50 மணி முதல் மதியம் 12:05 மணி வரை
தனுசு - இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். வேலை தொடர்பான பெரிய பிரச்சனை ஒன்று, இன்று தீர்க்கப்படலாம். இன்று வணிகர்கள் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் இருந்தவந்த இடையூறுகள் அகலும். காதல் கைகூடுவதற்கு சாதகமான சூழல் உருவாகும். திருமணமானவர்கள், தங்களது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து முக்கிய முடிவு ஒன்றை எடுக்கலாம். அந்த முடிவு குழந்தைகள் பற்றியதாக கூட இருக்கலாம். இன்றைய தினம் சோம்பலாக உணர்வீர்கள். நேரத்தின் மதிப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். பொருளாதாரம் வலு பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் 3:40 மணி வரை
மகரம் - உத்தியோகஸ்தர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். அத்தகைய சூழலில், நிதானத்தை கையாள வேண்டும். இல்லையெனில், பெரும் சிக்கலில் சிக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து வந்த நீண்ட கால பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரலாம். பெரியவர்கள் வழங்கும் சில அறிவுரைகளால் நன்மை பயக்கும். உடன்பிறப்புகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பண வரவு திருப்தி அளிக்கும். பெரிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. இன்றைய தினம் சோர்வாக உணர்வீர்கள். ஓய்வெடுப்பதன் மூலம் உடல்நலம் பலவீனமாகாமல் தடுக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை
கும்பம் - பொருளாதார முன்னணியில், உங்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். பண வரவு திருப்தி அளிக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு சாதகமான நாள். அலுவலகத்தில் உங்களது கடின உழைப்பிற்கான பாராட்டும், பலனும் வந்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நேரத்தை மனதில் கொண்டு செயல்படவும். இல்லையெனில், சந்தையில் உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுங்கள். உடல்நிலையில் கவலை கொள்ள தேவையில்லை.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மீனம் - பணத்தை பொறுத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாள். இத்தனை நாளாக இருந்துவந்த நிதி பிரச்சனைகள் அனைத்தும் தீரப்போகிறது. பழைய கடன்கள் அனைத்தும் அடைத்து முடிக்க போகிறீர்கள். உங்களது முடிவுகளுக்கு தந்தை ஆதரவு தெரிவிக்க மாட்டார். இருப்பினும், உங்களது கருத்தை சரியான முறையில் எடுத்துரைக்க முயற்சிக்கவும். திருமண வாழ்க்கையில், மன அழுத்தம் உருவாகக்கூடும். வாழ்க்கை துணையுடனான கருத்து வேறுபாட்டை முடிவிற்கு கொண்டுவர முயற்சிக்கவும். காதல் விவகாரத்தில் வெளிப்படை தன்மையுடனும், நேர்மையாகவும் இருங்கள். வணிகர்கள், பயணம் மூலமாக பயனடைவர். ஆலய வழிபாட்டிற்காக நேரம் ஒதுக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 6:00 மணி வரை