2022 ஜனவரி 04 வரை இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமான காலம்...

விருச்சிக ராசியில் கேது மற்றும் செவ்வாய் ஒன்றாக இணைந்து இருப்பதால், இது நிச்சயம் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

2022 ஜனவரி 04 வரை இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமான காலம்...

நவகிரகங்களின் அதிபதியான செவ்வாய் துலாம் ராசியில்ல் இருந்து தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி இடம் பெயர்ந்தார். 

இந்த விருச்சிக ராசியில் செவ்வாய் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வரை இருந்து, பின் தனுசு ராசிக்கு செல்லவிருக்கிறார். ஏற்கனவே விருச்சிக ராசியில் கேது பகவான் அமர்ந்துள்ளார். 

இப்படி விருச்சிக ராசியில் கேது மற்றும் செவ்வாய் ஒன்றாக இணைந்து இருப்பதால், இது நிச்சயம் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக இந்த கேது மற்றும் செவ்வாய் சேர்க்கை விருச்சிக ராசியில் ஏற்பட்டுள்ளதால், பின்வரும் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். 

அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எந்த மாதிரியான அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம் - மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி தான் செவ்வாய். இந்த காரணத்தினால், இந்த கேது-செவ்வாய் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அதே வேளையில் பல பெரிய மற்றும் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். தொழிலில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஆனால் பண விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு கேது-செவ்வாய் சேர்க்கை காலம் வெற்றினைத் தரப்போகிறது. நீங்கள் ஏதேனும் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமான பலனைப் பெறுவீர்கள். இக்காலத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம் - கேது-செவ்வாய் சேர்க்கை காலமானது சிம்ம ராசிக்காரர்கள் பணத்தை முதலீடு செய்ய சிறந்த காலமாகும். ஆனால் சொத்து சம்பந்தமான விஷயத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் பொறுமையாக இருந்து சில வேலையை செய்தால், சரியான முடிவுகளை எடுக்க முடியும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். நீங்கள் ஏதேனும் சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், அந்த வேலையில் வெற்றி பெறுவீர்கள். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். கடினமான காலங்களில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு கேது-செவ்வாய் சேர்க்கை காலம் தொழிலுக்கு சாதகமானதாக இருக்கும். குடும்பதினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். திருமணத்திற்கான மற்றும் பயணத்திற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கை இக்காலத்தில் மிகவும் பிஸியாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அதே வேளையில், ராஜதந்திர விளையாட்டுக்களை விளையாடாதீர்கள். இல்லாவிட்டால் சிரமம் அதிகரிக்கக்கூடும். உங்களின் தெளிவான எண்ணம் உங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற உதவும்.

கும்பம் - கேது-செவ்வாய் சேர்க்கையால் கும்ப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வேலை மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. உங்களின் வருமானம் விரைவில் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறுவீர்கள். மொத்தத்தில், இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

like
0
dislike
0
love
0
funny
1
angry
0
sad
0
wow
0