இந்த 4 ராசிக்காரர்களின் அனைத்து முயற்சிகளும் இந்த வாரம் வெற்றியில் தான் முடியுமாம்!
அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
இந்த வாரம், அதாவது ஜனவரி 03, 2021 முதல் ஜனவரி 09, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
மேஷம் - வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு சற்று பரபரப்பாக இருக்கும். இந்த வாரம் உங்கள் மீதான பணிச்சுமை கணிசமாக அதிகரிக்கக்கூடும். மேலும், உயர் அதிகாரிகளின் அணுகுமுறை அவ்வளவு சரியாக இருக்காது. உங்கள் மீது புகார் அளிக்க எந்தவொரு வாய்ப்பையும் வழங்காமல் இருப்பது நல்லது. இந்த வாரம் வணிகர்கள் சிறந்த பொருளாதார நன்மைகளைப் பெறலாம். பெரிய லாபம் ஈட்ட விரும்பினால், உங்கள் வணிக முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு வலுப்பெறும். பண வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் சிந்தனையுடன் செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்காக அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே, உடல்நலம் குறித்த விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
ரிஷபம் - வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறந்ததாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களின் கடின உழைப்பிற்கான சரியான பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில், உயர் அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைக் கவனிக்கக்கூடும். தேவைப்பட்டால் அவர்களின் முழு ஆதரவையும் கூட பெறுவீர்கள். மறுபுறம், வணிகர்கள் இந்த காலகட்டத்தில் நீண்ட நாள் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். அதனால் தடைப்பட்ட உங்களது வணிகம், மீண்டும் வேகமாக வளரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வாழ்க்கைத் துணையுடனான உறவில் பதற்றம் இருக்கும். சிறிய விஷயங்களுக்காக வாழ்க்கைத் துணையுடன் வாதிடும் பழக்கத்தால், திருமண வாழ்க்கையில் முரண்பாட்டை அதிகரிக்கக்கூடும். எனவே இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. பணத்தின் அடிப்படையில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பொருளாதார முன்னணியில் பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. உங்கள் உடல்நிலையைப் பற்றிப் பேசினால், பணிச்சுமையால் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த போதுமான நேரம் கிடைக்காது. இதன் காரணமாக, உங்கள் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மிதுனம் - பணத்தின் அடிப்படையில் இந்த வாரத்திற்கு உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களது நீண்டகால நிதி முயற்சிகளில் வெற்றி காண முடியும். உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயங்களுக்கு நீங்கள் நிறைய பணம் செலவிடலாம். வேலை பற்றி பேசுகையில், இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். இந்த நேரத்தில், உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனில் திருப்தி அடைய மாட்டார். இதன் காரணமாக, வழங்கப்பட்ட முக்கியமான பொறுப்புகள் கூட திரும்பப் பெறப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், தன்னம்பிக்கை குறையக்கூடும். இருப்பினும், அனைத்து எதிர்மறை எண்ணங்களை புறம் தள்ளி, முழு முயற்சியுடன் முன்னேற வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் நல்ல உறவு இருக்கும். மேலும், வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இந்த காலகட்டத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இருப்பினும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: புதன்
கடகம் - வேலை முன்னணியில், இந்த வாரம் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் இந்த வாரம் மிகப்பெரிய பொருளாதார லாபத்தை ஈட்ட முடியும். அதுமட்டுமின்றி, வணிகத்தை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் சாதகமாக அமையும். இந்த காலகட்டமானது, பணிபுரிவோருக்கும் செயல்திறனை நிரூபிக்க ஏற்ற காலமாக அமையும். மேலும் உங்களது கடின உழைப்பின் பலனாக, புதியதோர் உயரத்தைத் தொட முடியும். பொருளாதார முன்னணியில், இந்த வாரம் திருப்திகரமாக இருக்கும். தந்தையின் உடல்நிலை குறித்து கவலைப்படுபவர்கள், இந்த வாரத்தில் அவருடைய ஆரோக்கிய முன்னேற்றத்தால் மகிழ்ச்சி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு சுமுகமாக இருப்பதோடு, அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உண்ணும் உணவில் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த வாரத்தில், உங்களுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
சிம்மம் - மாற்று வேலை குறித்து யோசிப்பவர்களுக்கு, இந்த வாரம் சிறந்த சலுகைகள் கிடைக்கக்கூடும். வேலை தேடுபவர்கள், தங்களது கடும் முயற்சியின் பலனாக, தங்களது திறமைக்கு ஏற்ற பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள விரும்பும் வேலையைக் கூட பெறலாம். வியாபாரிகள், நீண்ட காலமாக சிக்கித் தவித்த பணிகளை மீண்டும் தொடங்கிடலாம். ஆனால், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும். உங்களது வணிகத் திட்டங்களில் ஒரு சில மாற்றங்களையும் செய்ய வேண்டி வரலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இந்த வாரம் குடும்பத்தாரோடு நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறந்த புரிதல் உண்டாகும். அன்புக்குரியவருடன் சிறு பயணம் மேற்கொள்ளலாம். இந்த வாரம் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் பற்றி பேசினால், அதிகப்படியான மன அழுத்தத்தை தவிர்த்திடவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கன்னி - பொருளாதார முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். பண விவகாரங்களில் கவனக்குறைவாக இருப்பது நல்லதல்ல. இந்த காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகள் செய்தால், மிகவும் கவனமாக செய்யுங்கள். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் பணிகள் அனைத்தும் சீராக முடிவடையும். உயர் அதிகாரிகளும் உங்கள் வேலையில் மிகவும் மகிழ்ச்சியடைவர். மறுபுறம், வணிகர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பணி இறக்குமதி ஏற்றுமதியுடன் தொடர்புடையது என்றால், இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் இருக்கலாம். அன்புக்குரியவர்களுடனான பிரச்சனையை தீர்க்க வேண்டுமெனில், அவர்களுடன் வெளிப்படையாக பேச வேண்டும். உடல்நலம் அடிப்படையில் இந்த நேரம் உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
துலாம் - இந்த வாரம், வேலை முன்னணியில் சரியான முடிவுகளைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களது அலட்சிய போக்கால், பிரகாசமான எதிர்காலம் குறித்த கனவு முழுமையடையாமல் போகலாம். கூட்டு தொழில் புரிவோர் இந்த காலகட்டத்தில் எந்தவொரு புதிய வேலையை தொடங்குவதையும் தவிர்க்கவும். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக இழப்பு ஏற்படலாம். பண நிலைமை நன்றாக இருந்தாலும் கூட, சிந்தனையுடன் செலவுகளை செய்தால் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. மறுபுறம், உங்கள் வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை இயல்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சில காலமாக சரியாக நடக்கவில்லை என்றால், நெருக்கம் அதிகரிக்க உங்கள் உணர்வுகளை விளக்க முயற்சிக்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இந்த நேரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். உண்ணும் உணவில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை
விருச்சிகம் - இந்த காலகட்டத்தில் உங்கள் முடிவுகளை நன்கு யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறிய முடிவுகளை எடுப்பதில் கூட, எந்த அவசரமும் வேண்டாம். வியாபாரிகள், ஏதாவது ஒரு புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், முழு நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். அவற்றில் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், பணிபுரிவோர், அலுவலகத்தில் தங்கள் முதலாளியிடம் நற்பெயரைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கியமான பணியை சரியான நேரத்தில் முடித்து காட்ட முடியும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. திடீர் பெரிய செலவுகள் ஏற்படலாம். இது உங்கள் நிதி நிலைமையில் சில தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் வார வரவு செலவுத் திட்டத்தை முன்கூட்டியே தயாரிப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் சில சிக்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
தனுசு - பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. வருமானத்தை அதிகரிக்க மிகவும் கடினமாக போராட வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வாரத்தின் நடுப்பகுதியில் முயற்சிகள் வெற்றி பெறலாம். இருப்பினும், செலவுகளை யோசித்து செய்வது நல்லது. பணிபுரிவோருக்கு, இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெரிய திட்டங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். மேலும், உங்கள் செயல்திறனுக்கான பாராட்டையும் பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. வணிகர்கள், தங்களின் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அவர்கள், உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகளை உருவாக்க முயற்சிக்கலாம். குடும்பத்துடன் நேரம் செலவிட பொன்னான வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைப் பெற்றிடுவீர்கள். உடல்நலம் பற்றி பேசினால், மிகவும் சோர்வாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை
மகரம் - இந்த காலகட்டத்தில் நீங்கள் மன ரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் சில பெரிய மற்றும் முக்கியமான முடிவையகளை எடுக்கலாம். அதன் நேர்மறையான பலன்களை வரும் நாட்களில் பெற வாய்ப்புள்ளது. கொடுத்தப் பணம் வசூலாகும். நீண்ட கால நிதி முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையக்கூடும். இந்த வாரம் சொத்து தொடர்பான பிரச்சனைகளால், வீட்டில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை முன்னணியில், இந்த வாரம் பாதகமான சூழல்களை எதிர்கொள்ளக்கூடும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை உற்சாகத்துடன், தைரியத்துடன் செய்து முடிக்க முயற்சிக்கவும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்த ரகசியங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். இல்லையெனில், சிக்கலில் சிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
கும்பம் - இந்த வாரம் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும். அன்பும் ஒற்றுமையும் குடும்பத்தில் நிலைத்திருக்கும். பாதகமான சூழ்நிலைகளின் போது, குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பெற்றோர் உறுதுணையாக இருப்பர். உடன்பிறப்புகள் தொடர்பான கவலையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அவர்களது திருமணத்தில் இருந்து வரும் எந்த தடைகளையும் இந்த காலகட்டத்தில் சமாளிக்க முடியும். பணத்தைப் பற்றி பேசினால், இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். இருப்பினும், நிதி நிலைமை நன்றாக இருப்பதால் அனைத்தையும் சமாளிக்க முடியும். கூட்டு வியாபாரம் செய்வோர் நல்ல லாபம் ஈட்ட முடியும். மறுபுறம், பணிபுரிவோருக்கும் இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மீனம் - பொருளாதார முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், கொடுத்த பணம் திரும்ப கிடைக்காததால் கவலை அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில், பணத்தின் அடிப்படையில் யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். பண விவகாரத்தில் யாருக்கும் உத்தரவாதம் அளிக்காதீர்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், எந்தவொரு செயலையும் மிகவும் கவனமாக செய்யுங்கள். இல்லையெனில் உங்களது சிறு கவனக்குறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். வேலையைப் பற்றி பேசுகையில், சிறிது காலமாக உங்கள் பணியால் திருப்தி அடையாத உயர் அதிகாரிகள், இந்த வாரம் மகிழ்ச்சி அடைவர். உங்கள் கடின உழைப்பால், அவர்கள் ஈர்க்கப்படுவர். மேலும் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நாள்: புதன்