இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் பண விவகாரங்களில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்!

தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். டிசம்பர் 27, 2020 முதல் ஜனவரி 02, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலனை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் பண விவகாரங்களில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்!

இந்த வாரமானது 2020 ஆம் ஆண்டின் கடைசி வாரம் மற்றும் வரவிருக்கும் புதிய ஆண்டான 2021 ஆம் ஆண்டின் தொடக்கமும் ஆகும்.  நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேஷம் - இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில், உங்கள் குடும்பத்தாருடன் உங்களுக்கு நல்லுறவு இருக்கும். அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். இந்த வாரம் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியும். வேலை தேடுபவர்கள் தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நீங்கள் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தால், இந்த நேரத்தில் நீங்கள் பெரும் முன்னேற்றம் அடையலாம். வியாபாரிகள், தங்கள் வணிகத்தை மேம்படுத்துவது குறித்து யோசித்து வந்தால், இந்த வாரம் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். வார இறுதியில் சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். எந்தவிதமான கவனக்குறைவும் இல்லாமல் கவனித்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

ரிஷபம் - திருமண வாழ்க்கையில் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால், அதனை மேற்கொண்டு வளர விடாதீர்கள். ஆனால் வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் அது கடினமாக ஒன்றாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், வாழ்க்கைத் துணையின் உடல்நிலை ஓரளவு பலவீனமாகக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் அவர்களை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும். வேலையைப் பற்றிப் பேசினால், இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை சுமை இருக்கும். உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் முடிக்க முயற்சிக்கிறீர்கள். வணிகம் தொடர்பான நபர்களுக்கு, இந்த வாரம் சற்று மந்தமாக இருக்கும். ஆனால், வார இறுதியில் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். மின்னணு வணிகர்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரத்தில் உங்களது முடிவுகளை கவனமாக எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக கடன் வாங்க நினைத்தால், எந்த அவசரமும் காட்ட வேண்டாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மிதுனம் - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த காலகட்டத்தில், மன பதற்றம் அதிகரிக்கக்கூடும். இந்த வாரம் உழைக்கும் மக்களுக்கு மிகவும் நன்றாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. முதலாளியின் உறவைப் பெறுவீர்கள். இது தவிர, உங்களது பணிகள் அனைத்தும் சீராக முடிவடையும். மறுபுறம், வணிகர்கள் தங்கள் பெரிய வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மிகச் சிறிய கவனக்குறைவு கூட உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். பெற்றோருடனான உறவு வலுவாக இருக்கும். மேலும், உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் வரவிற்கேற்ப செலவு செய்தால் பெரிய பணப் பிரச்சனை எதுவும் இருக்காது. இந்த வாரம் நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ஏழு நாட்களும், ஆரோக்கியத்தின் அடிப்படையில் சிறிது பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

கடகம் - பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. மேலும், இந்த காலகட்டத்தில் சில பெரிய செலவுகள் ஏற்படலாம். இதனால் பெரிய பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உங்களது முழு வாரத்தையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. இது தவிர, எந்தவொரு பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளையும் செய்ய இந்த வாரம் உகந்ததல்ல. வேலை முன்னணியில், இந்த வாரம் நீங்கள் கலக்கப்படுவீர்கள். மேலும், உங்களது வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனை வழங்கினால், அதைப் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில், அதனால் உங்களுக்கு நன்மை பயக்கும். இந்த வாரத்தின் நடுப்பகுதியில் வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். மறுபுறம், மிகப் பெரிய வாய்ப்பு கிட்டுவதற்கான வலுவான வாய்ப்பும் உள்ளது. உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கம் அதிகரிக்கும். இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இந்த காலகட்டத்தில் கை, கால்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம் - பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்த்தே ஆக வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில், உங்களுடைய எந்தவொரு நிதி முயற்சியும் தோல்வியடையக்கூடும். இது மிகவும் ஏமாற்றமடையச் செய்யும். இருப்பினும், உங்கள் தைரியத்தை இழக்க தேவையில்லை. நேரம் வரும்போது நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். வேலை பற்றி பேசுகையில், இந்த வாரம் எல்லாம் நல்லதாகவே நடக்கும். உங்கள் பணிக்கு அலுவலகத்தில் பாராட்டு கிட்டும். இந்த நேரம் வணிகர்களுக்கு நல்லதாக இருக்காது. இந்த காலகட்டத்தில், நீங்கள் செய்யும் எந்த வேலையும் மோசமடையக்கூடும். இதனால் கொஞ்சம் இழப்பைச் சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, குடும்பத்தில் சில உறுப்பினர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், பழைய சொத்து தொடர்பான பிரச்சனையால் வீட்டின் சூழ்நிலை சற்று பதற்றமாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த வாரத்தில் உங்களுக்கு சிறுநீர் தொடர்பான ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி - இந்த வாரம் உங்கள் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். முறையற்ற வார்த்தைகள் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் சிறப்பாக முடிக்க முடியும். மேலும், இந்த காலகட்டத்தில் அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம். அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் பணிபுரிந்தால், எல்லா பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இந்த காலகட்டத்தில் சக ஊழியர்களுடனான மோதலைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடும். இந்த வாரம் வணிகர்களுக்கு நன்றாக இருக்காது. பல முயற்சிகளுக்குப் பிறகும் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள். நீங்கள் கணக்கில்லாமல் செலவிட்டால் இந்த வாரம் சற்று கடினமாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசினால், இந்த வாரம் குடும்பத்தாரோடு நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, அதிகரிக்கும் மன அழுத்தத்தால் உங்களது ஆரோக்கியம் பாதிக்கலாம். எனவே, அதிகப்படியான மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

துலாம் - இந்த வாரம், வேலை முன்னணியில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். குறிப்பாக வேலை தேடுபவர்களுக்கு, இந்த நேரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது இடமாற்றம் குறித்த உங்களது நீண்ட காலமாக கனவு நனவாகும். மறுபுறம், இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்களும் பெருமளவில் பயனடையலாம். உங்களது வணிகம் உடைகள், இரும்பு, மரம், மின்னணுவியல், ஒப்பனை, போக்குவரத்து போன்றவற்றுடன் தொடர்புடையது என்றால், இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு நிறையவுள்ளது. உங்களது தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் சிறு பயணத்தையும் மேற்கொள்ளலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில், வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உடல்நிலையைப் பொறுத்தவரை, தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்த்து, போதுமான அளவு ஓய்வெடுக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்சிகம் - இந்த வாரம் பணி முன்னணியில் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும். எனவே, உங்களது மிகச்சிறிய வேலையையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். மறுபுறம், அரசாங்க வேலைக்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் உங்களது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். வணிகர்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். நீங்கள் புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், உங்களது முடிவை கவனமாக எடுக்க வேண்டும். ஏனென்றால், இந்த காலகட்டத்தில் நிதி சிக்கல்களில் சிக்க வாய்ப்புள்ளது. உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். குடும்ப பெரியவர்களுடன் கருத்தியல் வேறுபாடுகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்காது. உடற்சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: புதன்

தனுசு - வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் உற்சாகமாகத்துடன் இருப்பீர்கள். வாரத்தின் நடுவில், கொஞ்சம் சோம்பலை உணரலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குறிப்பாக உங்கள் பணி மார்க்கெட்டிங் தொடர்பானது என்றால், உங்களது இலக்கை அடைய மிக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வணிகர்கள், இந்த வாரம் எந்தவொரு பெரிய மற்றும் முக்கியமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த நேரத்தில் எந்த ஆபத்தையும் கையில் எடுக்காவிட்டால் நல்லது. கூட்டு வியாபாரிகள், விவாதத்தைத் தவிர்த்திட வேண்டும். இல்லையெனில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். தந்தை மற்றும் உடன்பிறப்புகளுடனான உறவை வலுவாக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் நேரத்தை சிந்தனையுடன் செலவிடுவது நல்லது. உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 43

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

மகரம் - வேலை முன்னணியில், இந்த வாரம் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். கடந்த வாரத்தில் செய்த கடின உழைப்பின் பலனை தற்போது பெறலாம். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் பெரிய தொழிலதிபராக இருந்தால், பெரிய நிவாரணத்தைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடனும் நேரம் செலவிடப்படும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நற்செய்திகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில், பெரிய நிதி தொடர்பான வேலைகளை செய்யலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கும்பம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், எந்தவொரு போட்டித் தேர்வுக்கும் தயாராகி வருகிறீர்கள் என்றால், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். இந்த நேரத்தில், படிப்பில் காட்டும் சிறு கவனக்குறைவு கூட உங்களுக்கு பெரிய சிரமங்களை உருவாக்கும். இந்த காலகட்டத்தில், வணிகர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். குறிப்பாக ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், உங்களது தந்தையின் உதவியுடன் முன்னேற்றத்தை காணலாம். வாரத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். ஆனால் நடுவில் சற்று பணிச்சுமை அதிகரித்து, சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வாழ்க்கையில் அதிகரித்துவரும் முரண்பாடுகளால் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பெரிய செலவுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் சிறிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

மீனம் - உங்கள் நிதி பிரச்சனை இந்த வாரம் திடீரென தீர்க்கப்படும். அதனால் மன நிம்மதியை பெறுவீர்கள். இவை அனைத்தும் உங்களது கடின உழைப்பின் விளைவாகும். குடும்ப முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் புனிதமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களது வீட்டில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட வேண்டும். வீட்டில் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலையைப் பற்றி பேசினால், நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க நேரிடலாம். சொந்த தொழில் தொடங்க விரும்பினால், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு நல்ல வணிக சலுகையைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் உங்கள் முடிவை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0