இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனத்தை மெதுவா ஓட்டணும்…

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 17  செவ்வாய்க்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனத்தை மெதுவா ஓட்டணும்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. சுப காரிய தடைகள் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இரவு நேரங்களில் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

ரிஷபம் - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெற்றிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.

மிதுனம் - சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினைகள் நீங்கும்.
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

கடகம் - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

சிம்மம் - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம் - சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று திடீர் பணவரவு உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரியின் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம் - சந்திரன் உங்கள் ராசியில் கேது உடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று இல்லம் தேடி நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்களுக்கு இன்று நல்ல நாள். ஆடை ஆபரணம் சேரும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

தனுசு - சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வரவுக்கு ஏற்ற செலவுகள் தேடி வரும்.
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் தேடி வரும்.

கும்பம் - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மீனம் - சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும். மேலதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0