இன்று இந்த 3 ராசிக்காரர்களும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்!
புதிதாக தொடங்கும் ஒவ்வொரு நாளும் நமக்கு எப்படியிருக்கும் என்பதை தான் ராசிப்பலன்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. கிரகநிலைகளை ஆராய்ந்து தான் ஒவ்வொரு ராசிக்கான பலனும் கணிக்கப்படுகிறது.

ஒரு நாளை தொடங்குவதற்கு முன்பு ராசிப்பலனை பார்த்துவிட்டு, தொடங்கினால் அந்த நாளை சிறப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதே பெரும்பாலோரின் நம்பிக்கை. இன்றைக்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், செய்யும் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். தேவையில்ல விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தால், வேலை தேக்கமடையாது. மேலும், உங்களது கவனமின்மை உயர் அதிகாரிகளின் கோபத்தை உண்டாக்கக்கூடும். வணிகர்கள், தொழில் முன்னேற்றம் குறித்த எந்தவொரு திட்டத்தை இன்று தீட்ட வேண்டாம். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாட்டை முடிவிற்கு கொண்டு வர, தங்களது கோபத்தை குறைப்பது ஒன்றே வழி. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நீரிழிவு நோயாளிகள் உண்ணும் உணவில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட மதிப்பெண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
ரிஷபம் - பங்குச் சந்தை தொடர்பான உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று மிகப்பெரிய நன்மை ஏற்படப்போகிறது. உத்தியோகஸ்தர்கள் வேலைமாற்றம் குறித்த எவ்வித சிந்தனையையும் தவிர்க்க வேண்டும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமை மேம்படும். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நிதி சார்ந்த முடிவு ஒன்றின் மூலம் தற்போது நியாயமான முடிவை பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே ஒற்றுமையும், அன்பும் மேலோங்கும். ஆரோக்கியம் பற்றி பேசினால், மாறிவரும் பருவநிலை காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை
மிதுனம் - இன்று மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். சமீபத்தில் நீங்கள் தேர்வு எழுதியிருந்தால், கடின உழைப்பின் பலனாக சிறந்த முடிவுகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உயர்கல்வி பயில முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். பெற்றோருடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தால், வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிடுவதன் மூலம் அதனை சரிசெய்திடலாம். பண வரவு உண்டு. பெற்ற கடனை திரும்ப செலுத்துவதில் சற்று அழுத்தத்தை உணர்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
கடகம் - அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிவேருக்கும் இன்று சிறப்பான நாளாக இருக்கும். மர வியாபாரிகளுக்கு இன்று மிகப்பெரிய பொருளாதார நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் அமைதியாக காணப்படும். வீட்டில் சுப நிகழ்வுகள நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. சிறிது காலமாக உடல்நலம் பாதித்து காணப்பட்ட தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு திருப்தி அளிக்கும். நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் 2: 25 மணி வரை
சிம்மம் - திருமண வாழ்க்கையில் முரண்பாடுகள் அதிகரித்து காணப்படும். உங்களது கோபத்தையும், விவாதத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் மீண்டும் அமைதியை கொண்டு வரலாம். பண வரவு உண்டு. சில முக்கிய செலவுகளை செய்வதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், தேவையற்ற செலவுகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களுடன் நல்ல ஒத்துழைப்பை பெற முயற்சிக்கவும். அலுவலகத்தில் தேவையற்ற விவாதத்தில் இடம் பெறாமல் இருந்தால், உங்களது பெயரை காப்பாற்றிக் கொள்ளலாம். நீங்கள் இலக்கு அடிப்படையிலான வேலையைச் செய்தால், இன்று உங்கள் இலக்கை அடைய நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வர்த்தகர்களுக்கு இன்று சிறப்பான நாள். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று பற்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை
கன்னி - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நன்றாக இருக்காது. மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் உணருவீர்கள். உங்களை உற்சாகமாக வைத்திருக்க உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். வியாபாரிகள், பொருளாதார முன்னேற்றம் குறித்த முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். இல்லையேல், நஷ்டத்தை சந்திக்கக்கூடும். பெற்றோரின் ஆதரவும், ஆசீர்வாதமும் கிடைக்கப்பெறுவீர்கள். உடற்பிறப்புகள் உதவிகரம் நீட்டுவர். தேவையற்ற செலவுகளால் சிக்கல்களில் சிக்கக்கூடும். இந்த நேரத்தில் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மண முதல் இரவ 11 மணி வரை
துலாம் - இன்று நீங்கள் என்ன செய்தாலும், அதனை மிகவும் கவனத்துடன் செய்யுங்கள். அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வேலையை மிகுந்த நேர்மையுடனும் கவனத்துடனும் முடிக்க முயற்சிக்க வேண்டும். சிறு தவறு கூட உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கிவிடும். துலாம் ராசி பெண்கள், இன்று தங்களது கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் வீட்டில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். இன்று திடீரென்று ஒரு பெரிய செலவை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்காது. வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 9:15 மணி வரை
விருச்சிகம் - வியாபாரிகள் இன்றைய தினம் எடுக்கக்கூடிய சில முடிவுகள் ஆபத்தில் சென்று முடியலாம். சிறு வணிகர்ளுக்கு இன்று சிறப்பான நாள். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் சற்று பரபரப்பாக காணப்படுவார்கள். பல வேலைகளை ஒரே சமயத்தில் கையாளலாம். அதுபோன்ற சமயத்தில், அவசத்தையும், பயத்தையும் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெரியவர்களில ஆசீர்வாதமும், பாசமும் கிடைக்கப்பெறுவீர்கள். உடன்பிறப்புகளுக்கு திருமணம் செய்ய நல்ல முடிவெடுக்கப்படும். சிறு கடனை இன்று செலுத்தி முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
தனுசு - அலுவலகத்தில் உங்களது பணி திறனால் உயர் அதிகாரிகளை பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள். அரசு பணியில் உள்ளவர்கள் இன்று பரபரப்பாக காணப்படுவர். வேலை சார்ந்த பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தாரோடு கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். கோபத்தையும், விவாதத்தையும் தவிர்கக அறிவுறுத்தப்படுகிறீர்கள். பண வரவு உண்டு. பார்த்த செலவு செய்தால பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை, நாட்பட்ட நோய்களால் அவதிக்குள்ளாவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
மகரம் - இன்றைய தினம் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். உறவினர் வீட்டு விஷேசத்தில் குடும்பத்தாரோடு பங்கேற்கலாம். அலுவலகத்தில் உள்ள பணி சுமையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். வர்த்தகர்கள் இன்று பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். இன்றைய பயணம் வீண் இழப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். மனரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள். இன்று, வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 6:30 மணி வரை
கும்பம் - வேலை பார்ப்பவர்கள் இன்றைய தினம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது திறனை சோதிக்கும் விதமாக பெரிய வேலை ஒன்று ஒப்படைக்கப்படலாம். திட்டமிட்ட நேரத்தில் சரியான வேலையை முடிக்கும் பட்சத்தில், முன்னேற்றம் நிச்சயம். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. பொருளாதாக நிலை மேம்படும். வாழ்க்கை துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் யாருக்காவது நிதி சார்ந்த உதவி செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் இரவு 8:15 மணி வரை
மீனம் - வழக்குகள் சாதகமாக முடியும். ரியல் எஸ்டேட் தொடர்பான நீண்ட கால பிரச்சனைகள் முடிவிற்கு வரக்கூடும். நிதி ரீதியாக பயனடைவீர்கள். இன்று முதலீடு செய்ய விரும்பினால், சிறிய அளவில் செய்வதன் மூலம் பலனடையலாம். தந்தையின் வியாபாரத்தில் உதவுபவர்கள், புதிய திட்டம் ஏதேனும் தீட்டியிருந்தால், அதற்கு தந்தையின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெறுவர். முக்கியமாக வேலை ஒன்றை முடிக்க கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:15 மணி முதல் இரவு 8:45 மணி வரை






