மகரத்தில் குரு இருப்பதால் நவம்பர் வரை இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

அனைத்து கிரகங்களிலும் சிறந்த பலனைத் தருபவராக மற்றும் சுப கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இத்தகைய குரு பகவான் செப்டம்பர் மாதம் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.

மகரத்தில் குரு இருப்பதால் நவம்பர் வரை இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

அனைத்து கிரகங்களிலும் சிறந்த பலனைத் தருபவராக மற்றும் சுப கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இத்தகைய குரு பகவான் செப்டம்பர் மாதம் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதன் பிறகு அவர் கும்ப ராசியில் நுழைவார். குரு பகவான் தற்போது சனி பகவானின் ராசியான மகரத்தில் சனியுடன் சேர்ந்து இருக்கிறார்.

ஜோதிடத்தில் குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம், திருமணம், வளர்ச்சி, குழந்தைகள் போன்றவற்றைக் குறிக்கிறார். மேலும் இவர் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாவார். பொதுவாக குரு கடக ராசியில் வலிமையாகவும், மகர ராசியில் பலவீனமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது மகர ராசியில் குரு இருப்பதால், இது நிச்சயம் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் பின்வரும் 6 ராசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் யோகமான காலமாகும். அந்த ராசிகள் என்னவென்பதையும், எம்மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதையும் காண்போம்.

மேஷம்

இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குருவின் இந்த இட மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு பெயரையும், புகழையும் தரும். பணியிடத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு இது மிகச்சிறப்பான நேரம். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிறைய அதிர்ஷ்டம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குருவின் இந்த மாற்றம் பொருளாதார கண்ணோட்டத்தில் பயனளிக்கும். நீங்கள் புதிய வருமான ஆதாயங்களைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இக்காலத்தில் மத நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். சிறந்த வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். ஊதிய உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளது. வணிகர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம். கூட்டு வியாபாரம் செய்பவர்களின் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வணிகர்களுக்கு இது சிறந்த நேரம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தாயிடமிருந்து அன்பு கிடைக்கும். உங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அதிகரிக்கும். தொழிலில் நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருந்து சில நன்மைகளைப் பெறவீர்கள். தொழில் செய்வோர் தங்களின் வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நிதி ஆதாயத்திற்கான அனைத்து சாத்தியங்களும் உண்டு. வங்கி இருப்பு அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்கள் இருக்கும். தொழில் ரீதியாக, குரு மகரத்திற்கு செல்வது நன்மை பயக்கும். தொழில் வாழ்க்கையில் வளர்ச்சிக்கு அதிக சாத்தியம் உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களே, இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த காலம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஒரு பெரிய வேலையைத் தொடங்க அல்லது ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உங்கள் முயற்சிகளை விரைவுப்படுத்துங்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவாகும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0