இந்த ராசிக்காரர்கள் இன்றுகிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்கள் இன்றுகிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்!

இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். புதன்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம் - தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்காது. இதுபோன்ற சமயங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வணிகர்கள் இன்று பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசும்போது, அலட்சியப்போக்கால் உடல்நலம் வெகுவாகக் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 10 மணி வரை

ரிஷபம் - இன்று வர்த்தகர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். சிறந்த வணிக சலுகையைப் பெறலாம். வேலை செய்வோருக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், இந்த நேரத்தில் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் சற்று கடினமான காலங்களில் கூட நிதியை சரியாகப் பயன்படுத்தலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோர், சகோதர, சகோதரிகள் அனைவருடனும் உறவு வலுப்பெறும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று சில நற்செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நேரம் நன்றாக இருக்கிறது. மன அழுத்தம் குறைந்து நன்றாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை

மிதுனம் - இன்று சில சந்தர்ப்பங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். இன்றைய தினம் வியாபாரிகள் பெரிய லாபத்தை ஈட்ட முடியும். உங்கள் பணி வேகமாக நகரும். மேலும், உங்கள் எதிரிகளுக்கு நீங்கள் கடுமையான போட்டியை வழங்க முடியும். மறுபுறம், வேலையற்றவர்கள் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிக்க முடியும். அலுவலக வேலைகளில் தவறுகள் நடக்காமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும். பணத்தின் அடிப்படையில் இன்றைய தினம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி மேலோங்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நலம் குறித்து பேசினால், இன்று உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 10 மணி வரை

கடகம் - அரசு வேலைகளில் பணிபுரிவோருக்கு இன்று சிறப்பான நாள். உங்களுக்கு சில புதிய பொறுப்பு வழங்கப்படலாம். இது தவிர, பதவி உயர்வை பெறவும் வாய்ப்புள்ளது. உரத்தை வர்த்தகம் செய்வோர் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். நிதி ரீதியாக, இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் செலவுகள் குறைவாக இருக்கும். மேலும் உங்கள் சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் உருவாகலாம். வீட்டில் பெரியவர்களை மதித்து, அவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். திடீரென்று ஒரு ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம் - இன்று வேலை முன்னணியில் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கப் போகிறது. மேலும், உங்களது செயல்திறன் மேம்பட்டு, உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையைத் தரும் ஒரு நல்ல வாய்ப்பு தேடி வரும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் முறையாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. வர்த்தகர்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இன்று சாதகமான நாள். இருப்பினும், பெரிய கடன் எதுவும் வாங்கிட வேண்டாம். இல்லையெனில் வரும் காலங்களில் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி  - இன்று உங்களுக்கு சிறப்பான தொடக்கமாக இருக்கும். அதுமட்டுமின்றி, மனநிலையும் மிகவும் நன்றாக இருக்கும். அலுவலக வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி முடிக்க முடியும். வர்த்தகர்கள் இன்று நல்ல லாபத்தை பெற வலுவான வாய்ப்புள்ளது. உங்களது கடின உழைப்பிற்கான பலனை நிச்சயமாகப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வீட்டில் சற்று பதற்றம் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், வேலைக்கு போதுமான ஓய்வு கொடுங்கள். உங்கள் மன அமைதியைப் பராமரிக்க தினமும் தியானியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம் - வேலையில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க வேண்டுமெனில், பொறுமையை கையாள வேண்டியது அவசியம். உற்சாகத்தின் பேரில் தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. சிறு வணிகர்களுக்கு நிதி சார்ந்த கவலைகள் நீங்கும். உங்களது இயல்பில் சில மாற்றங்களை உணர்வீர்கள். சிறு விஷயங்களால் ஏற்படக்கூடிய கோபத்தால், தகராறுகள் உருவாகலாம். நீங்கள் ஒரு தொழில்நுட்ப துறையில் பயின்று வரும் மாணவராக இருந்தால், நல்ல பலன்களைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு, இன்று நல்ல வரன் தேடி வரக்கூடும். சுகாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கவலைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:35 மணி முதல் மதியம் 1 மணி வரை

விருச்சிகம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால், நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். முதலீடுகளை தவிர்க்கவும். இன்று மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்கலாம். நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, சில முக்கிய பணிகள் முழுமையடையாமல் போகலாம். வேலையாட்கள் தங்கள் மேலதிகாரிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடும். செய்யும் வேலையில் கவனக்குறைவாக இருப்பது நல்லதல்ல. இல்லையெனில், வேலையை இழக்க நேரிடும். வியாபாரிகள் இன்று முக்கியமான சில முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் ஒரு பெரிய சண்டை உருவாகலாம். உங்கள் கடுமையான வார்த்தைகள் அவர்களின் மனதை புண்படுத்தக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். சொந்த தொழில் தொடங்க விரும்புவோருக்கு, இன்று நேரம் சாதகமானது. பணம் தொடர்பாக ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், இன்று பிரச்சனைகள் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்தால், அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். உடல்நலம் பற்றிப் பேசும்போது, நீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம் - அலுவலகத்தில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சனைகளால், உங்களது பொறுமையை இழந்து விடாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் முடிக்க தீவிரமாக முயற்சிக்கவும். கடந்த காலத்தில் சந்தித்த இழப்புகளை ஈடுசெய்ய, கடுமையாக முயற்சிப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், உங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும். கூட்டு வியாபாரிகளுக்கு இன்று நிச்சயமாக லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிக்க, உங்களால் முடிந்தளவு முய்சிக்க வேண்டும். செலவுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம் - பேச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். இல்லையெனில், வீண் வார்த்தைகளால், பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். குறிப்பாக மற்றவர்களின், விவகாரங்களில் அதிகம் தலையிட வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையை விடுவதை பற்றி பரிசீலிக்கலாம். பிறர் வேலையில் தேவையில்லாமல் பொறுப்பேற்க வேண்டாம். வணிகர்கள், வேகமாக முன்னேறுவார்கள். பெரிய செலவுகளுக்கு வாய்ப்புள்ளது. மோசமடைந்து வரும் உடல்நிலையால், மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம் - இன்று அலுவலக வேலையால் மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். குறுகிய நேரத்தில், அதிகப்படியான வேலையை முடிக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழலில், வேலையை மிகவும் புத்திசாலித்தனமாகவும், அமைதியாகவும் செய்ய வேண்டும். தற்போதைய சூழலால், கவலைகள் அதிகரிக்கக்கூடும். நேரத்தை வீணடிக்காமல் இருக்கப் பாருங்கள். வர்த்தகர்களுக்கு, ஏற்றத்தாழ்வு நிறைந்த நாளாக இருக்கும். சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டின் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0