இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுத்தால் திரும்ப வரவே வராது…
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 14 வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்று உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கக்கூடும். உங்கள் இலக்கை அடைய நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து கடினமாக உழைத்தால் அதன் சரியான பலனை நிச்சயமாக பெறுவீர்கள். வணிகர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, சில தீவிரமான குடும்ப பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் தேவை. வாழ்க்கைத் துணை இன்று உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் சோம்பல், சோர்வாக உணரலாம். உங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க, அன்றாட வழக்கத்தில் தேவையான சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை
ரிஷபம் - பணத்தின் அடிப்படையில் இன்று அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சமீபத்தில் எடுத்த ஒரு முக்கியமான நிதி முடிவில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. இன்று வணிகர்களுக்கு நிறைய அவசரமும் சோர்வும் இருக்கும். இன்று சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு வீணாகாது. உத்தியோகஸ்தர்களின் பணி இன்று முடிவடைய வாய்ப்பு அதிகம். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். உயர் பதவியைப் பெறுவதால், சம்பளம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் சிறந்த தொடர்பு இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
மிதுனம் - தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணடனான உறவில் கசப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் வார்த்தைகளை கேட்டு உங்கள் துணையை சந்தேகிப்பதைத் தவிர்க்கவும். மனதில் ஏதேனும் இருந்தால், அதை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் இருக்கும். உங்கள் உற்சாகத்தை இது அதிகரிக்கும். வேலையில் மஏதேனும் சிக்கல் இருந்தால், உடனடியாக உயர் அதிகாரிகளுடன் பேச வேண்டும். இன்று நிதி அடிப்படையில் வணிகர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். தடைப்பட்ட லாபங்களைப் பெற முடியும். இன்று நீங்கள் ஒரு புதிய வணிகத் திட்டத்திற்கான பணியைத் தொடங்கலாம். உடல்நிலை வெகுவாகக் குறையக்கூடும். பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை
கடகம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். வியாபாரிகள் சிறந்த முதலீட்டு வாய்ப்பைப் பெறலாம். எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். நேர்மறையுடன் தொடர்ந்து செயல்படுங்கள். உங்கள் நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் நடந்து வரும் சர்ச்சை இன்று அமைதியாகிவிடும். இன்று உங்கள் வீட்டுச் சூழலில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். திருமணமானவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
சிம்மம் - அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் உங்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும். சிறிய விஷயங்களை புறக்கணித்து, உங்கள் வேலையில் கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். இன்று, வர்த்தகர்கள் எந்தவொரு புதிய ஒப்பந்தத்திலும் நுழைவதைத் தவிர்த்திடவும். பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். பொழுதுபோக்திற்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று கடன் வழங்குவதைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையெனில், உங்கள் பணம் நீண்ட காலத்திற்கு திரும்ப வராது. உங்கள் வீட்டின் சூழ்நிலை இன்று நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை சற்று மனச்சோர்வடைவார். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். இன்று வாகனத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
கன்னி - குழந்தைகள் தொடர்பான எந்தவொரு கவலையும் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம். அவர்களின் நடத்தையில் சில மாற்றங்களை கவனித்திருக்கலாம். சரியான நேரத்தில் நீங்கள் அவர்களை வழிநடத்துவது நல்லது. இல்லையெனில் அவர்கள் தவறான திசையில் செல்லலாம். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் இன்று சில நல்ல வாய்ப்பை பெற முடியும். இதனால் முன்னேற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்துவது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். தற்போதைய நிலைமையை மனதில் கொண்டு, பொருத்தமான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் துணையுடன் இன்று தகராறு ஏற்படலாம். ஆரோக்கியமாக இருக்க நீங்கள் சமூக விலகலை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை
துலாம் - வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இன்று மிகவும் அதிர்ஷ்டமாக உணரலாம். நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். எழுத்து மற்றும் கலை சம்பந்தப்பட்டோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் கடின உழைப்பு பலனளிப்பதாகத் தெரிகிறது. முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். வர்த்தகர்கள் தங்கள் பங்குகளை அதிகரிக்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமான நாள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சிந்தனையுடன் செலவிடுவது நல்லது. சேமிப்பதில் அதிக கவனம் செலுத்தினால் சீக்கிரம் கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வீட்டின் பெரியவர்களுடனான உறவு மோசமடையக்கூடும். உடல்நலம் பற்றி பேசினால், அலட்சியம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 11:00 மணி வரை
விருச்சிகம் - சில நாட்களாக உங்கள் உடல்நலம் சரியில்லை என்றால் தவறாமல் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, உங்கள் உணவு பழக்கத்தையும் மாற்ற வேண்டும். அலுவலகத்தில் போட்டி கணிசமாக அதிகரிக்கும். முதலாளி கொடுத்த மிகச்சிறிய பொறுப்பைக் கூட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும். வணிகர்கள் பயணத்தைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலை குறைய வாய்ப்புள்ளது. சிந்திக்காமல் எந்த பொருளாதார முடிவுகளை எடுத்தாலும், நீங்கள் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாள். வீட்டை விட்டு வெளியே சென்றால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை
தனுசு - இன்று வணிகர்களுக்கு சில பெரிய சவால்கள் தேடி வரக்கூடும். குறிப்பாக கூட்டு வியாபாரம் செய்வோருக்கு, கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்களுக்கிடையேயான கசப்பு உங்கள் வேலையிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இன்று அலுவலகத்தில், அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். விவாதம் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். பணம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு விலையுயர்ந்த பொருளை வாங்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணை மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று கண்கள் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மகரம் - வியாபாரிகள் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்தால், சரியான ஆலோசனையை பெற்று இறுதி முடிவை எடுக்கவும். அலுவலகத்தில் முதலாளியின் கோபத்தை இன்று எதிர்கொள்ளக்கூடும். நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கிறீர்கள் என்றால், தகவல்தொடர்பு இடைவெளி ஏற்பட வேண்டாம். அவ்வப்போது, உங்கள் வேலையை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும். இன்று பொருளாதார முன்னணியில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டாம். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் சரியாக இல்லை என்றால், இன்று அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீங்கள் சிகரெட் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கும்பம் - நீங்கள் இன்று உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணருவீர்கள். சில பழைய விஷயங்கள் உங்கள் மனம் அமைதியற்றதாக மாற்றும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட வேண்டும். மேலும், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் சிரமங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும். உங்கள் வணிகத்தைப் பற்றி நீங்கள் பேசினால், நீங்கள் வாடிக்கைகளின் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில், உத்தியோகஸ்தர்களும் பெரும் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வாங்க விரும்பினால், இன்று அதற்கு நல்ல நாள். உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க, நீங்கள் தியானத்தை மேற்கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை
மீனம் - இன்று, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு முன்னுரிமையாக இருக்கும். வீட்டின் சிறிய சிக்கல்களைத் தீர்க்கவும் கடுமையாக முயற்சிப்பீர்கள். முக்கிய முடிவுகளை குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்தையும் அறிந்த பிறகே எடுக்க வேண்டும். நிதி பற்றி பேசுகையில், இன்று நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நீங்கள் இழப்பைச் சுமக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையிலும் எளிதாக வேலையை செய்ய முடியும். சமீபத்தில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்கியவர்கள், இன்று நல்ல பலன்களைப் பெறலாம். பெரிய லாபங்களுக்காக கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று மிகச்சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை