இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்!
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 23 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் திருப்தி அடைவதோடு, அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். வணிகர்களுக்கும் இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரிடமிருந்து ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். அன்புக்குரியவருடன் மிகவும் அமைதியான ஒரு நாளைக் கழிப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:25 மணி வரை
ரிஷபம் - குடும்பத்தைப் பிரிந்து வெகு தொலைவில் வாழ்பவராக இருந்தால், இன்று அன்புக்குரியவரை இழக்க நேரிடும். அத்தகைய சூழலில், குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். அலுவலக வேலைகளில் கவனம் செலுத்த முயற்சிப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்படும் சில முக்கியப் பொறுப்புகளை சரியான நேரத்தில் முடிப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். வணிகர்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் சாதகமான நேரமிது. பொருளாதார நிலையில் நல்ல முடிவுகளை காணலாம். இன்று ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 9:15 மணி வரை
மிதுனம் - இன்று நீங்கள் யாரைச் சந்தித்தாலும் அவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் எந்தவிதமான வாக்குவாதமும் செய்வதைத் தவிர்க்கவும். நீங்கள் அமைதியாக இருந்தால், பெரிய சிக்கலைத் தவிர்க்கலாம். கூட்டு வியாபாரிகளுக்கு இன்று பெரிய லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் உங்கள் உறவு ஆழமடையும். காதல் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட ஒரு வாய்ப்பையும் பெறுவீர்கள். இன்று ஒரு சிறு கடனை திருப்பிச் செலுத்த முடியும். உடல்நலம் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை
கடகம் - அலுவலகத்தில் ஏற்படக்கூடிய சில திடீர் மாற்றங்களால் வருத்தப்படக்கூடும். அதை கண்டு பீதியடையத் தேவையில்லை. முழு நம்பிக்கையுடன் முன்னேற் வேண்டிய காலமிது. விரைவில் காலம் உங்களுக்கு ஆதரவாக மாறும். இன்று வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம். சிறு முதலீடுகளை செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதனால், வரும் காலத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியம் பற்றி பேசினால், சுவாசப் பிரச்சனைகள் இருப்போர் இன்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை
சிம்மம் - அதிக பணிச்சுமை காரணமாக இன்று நீங்கள் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருப்பீர்கள். அதனால் கோபமாக உணரலாம். பொறுமையுடன் பணிபுரிந்தால், அனைத்தும் உங்களுக்கு மிகவும் எளிதாகிவிடும். வேலை அல்லது தொழில் எதுவாக இருந்தாலும், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று, உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களை காயப்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், மனம் மிகவும் மனச்சோர்வடைந்துவிடும். உங்களை வலுவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். பணம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சில பெரிய செலவுகளை செய்யலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, பெற்றோரிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணை தொடர்பான எந்தவொரு கவலையும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இன்று உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
கன்னி - வேலை முன்னணியில் இன்று நல்ல நாள் இல்லை. உத்தியோகஸ்தர்கள், அலுவலக வேலைகளில் சில தவறுகளை செய்யக்கூடும். இதனால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். எனவே, இதுபோன்ற தவறுகளை தீண்டு செய்யாமல் இருக்க முயற்சிக்கவும். வணிகர்கள் இன்றைய தினம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், நிதி இழப்பை சந்திக்க நேரிடும். மேலும், வணிகம் சார்ந்த முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய நாள். குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 10:20 மணி வரை
துலாம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் திருமணத்தில் இருந்துவந்த தடைகள் விரைவில் அகலும். கூடியவிரைவில் நல்ல வரன் தேடி வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக நாளாக இருக்கும். வணிகர்கள், தங்களது தொழில் சம்பந்தப்பட்ட சில முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். கூட்டுத் தொழில் செய்வோர் நல்ல பலனைப் பெற்றிடலாம். பணப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நாளின் இரண்டாம் பகுதி மிகவும் வேடிக்கை நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நாள் இல்லை. உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
விருச்சிகம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். இன்று, நெருங்கிய நண்பரின் உதவியுடன், பெரிதும் பயனடையலாம். பொருளாதார முடிவுகளை நீங்களே எடுத்தால், விரைவில் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். தந்தையின் வியாபாரத்துடன் தொடர்புடையோருக்கும் இன்று தந்தையின் முழு ஆதரவும் உதவும். கடினமாக உழைத்தால், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று காதல் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை வலுப்பெறும். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை
தனுசு - காதல் வாழ்க்கையில் இன்று சில பிரச்சனைகள் வரக்கூடும். பல முயற்சிகளுக்குப் பிறகும், இணைய முடியாதது வருத்தத்தை அளிக்கும். அதே நேரத்தில், திருமணமானவர்களுக்கு இன்று மன அழுத்தமாக இருக்கும். வாழ்க்கைத் துணைடன் மோதல் சாத்தியமாகும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய சொத்தை வாங்க விரும்பினால், இன்று அதற்கு உகந்த நாள். தனிப்பட்ட வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று நீங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமான நாள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை
மகரம் - இன்று நீங்கள் பணத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்த, இந்த நாள் மிகவும் சாதகமானது. உங்கள் அன்பை வெளிப்படுத்தவும் வெளிப்படையாக பேசவும் தயங்க மாட்டீர்கள். அலுவலகத்தில் உங்கள் சிறந்த செயல்திறனால் உயர் அதிகாரிகளின் இதயங்களை வெல்வீர்கள். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உயர் அதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். வீட்டின் சூழ்நிலை இன்று சரியாக இருக்காது. பெற்றோர் இன்று உங்கள் மீது கோபப்படுவார்கள். அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம். உடல்நலம் குறித்து கவனக்குறைவாக இருக்காதீர்கள். குறிப்பாக நீங்கள் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவராக இருந்தால், அதிக மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 மணி முதல் 12:20 மணி வரை
கும்பம் - திருமண வாழ்க்கையில் சில தொந்தரவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் இன்று பெரிய சண்டை ஏற்படலாம். இன்று நீங்கள் மனரீதியாக அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது வேலையில் கவனம் செலுத்துவதற்காக உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை விரைவில் தீர்க்க முயற்சிப்பது நல்லது. இன்று, நெருங்கிய நண்பரின் உதவியுடன், ஒரு முக்கியமான பணியை முடிக்க முடியும். உங்கள் ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். நிதி ரீதியாக, சில மேம்பாடுகள் ஏற்படலாம். இருப்பினும், உங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பல வகையான சிக்கல்களைத் தவிர்க்கலாம். இன்று உடல்நலம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை
மீனம் - இன்று வேலை முன்னணியில் ஒரு நல்ல நாளாக இருக்கப்போகிறது. உங்கள் செயல்திறன் அதிகரிக்கும் மற்றும் எல்லா பணிகளையும் சிறப்பாக கையாள முடியும். மேலும் உயர் அதிகாரிகளின் உதவியுடன், ஒரு பெரிய நன்மையையும் பெறுவீர்கள். வணிகர்கள் இன்று நிதி ரீதியாக பயனடையலாம். உங்கள் வேலை உணவு மற்றும் பானத்துடன் தொடர்புடையது என்றால், இன்று நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல்நிலை நன்றாக இருப்பார். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இன்று உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். திடீரென்று சில நல்ல செய்திகள் வரக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை