இந்த 6 ராசிக்காரங்க பணத்தை தெண்டமா செலவு செஞ்சே அழிப்பாங்களாம்...

நீங்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது நொடியில் காலியாகிவிடும் என்று அர்த்தம். பணத்தை திறமையாக நிர்வகிக்கும் குணம் அனைவருக்கும் வந்துவிடாது. 

இந்த 6 ராசிக்காரங்க பணத்தை தெண்டமா செலவு செஞ்சே அழிப்பாங்களாம்...

வாழ்க்கையை நினைத்தபடி வாழ்வதற்கு பணம் என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அனைவராலும் நினைத்த வாழ்க்கையை வாழ முடிவதில்லை. 

அதற்கு காரணம் அவர்கள் பண விஷயத்தில் மோச, மாக இருப்பதுதான். பண விஷயத்தில் மோசமாக இருப்பது என்பதன் அர்த்தம் நீங்கள் பண விஷயத்தில் மோசமானவர் என்பதன் அர்த்தமல்ல.

நீங்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது நொடியில் காலியாகிவிடும் என்று அர்த்தம். பணத்தை திறமையாக நிர்வகிக்கும் குணம் அனைவருக்கும் வந்துவிடாது. 

நீங்கள் பிறந்த ராசி உங்களுக்கு செல்வத்தை சேமிக்கும் குணம் உள்ளதா என்பதை அறிய உதவும். அதன்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தை சேமிப்பதில் மிகவும் மோசமானவராக இருப்பார்கள். அவை என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு - தனுசு ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், எனவே பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு மிகவும் கடினம் அல்ல. அதில் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் பணத்தை செலவழிக்கும் வேகம்தான். வேடிக்கைக்காகவும், சாகசத்திற்காகவும் பணத்தை செலவழிக்க இவர்கள் யோசிக்கவே மாட்டார்கள். அவர்கள் அதிக பணத்தை விட சிறந்த அனுபவத்தை விரும்புபவர்கள்.

மீனம் - மீன ராசிக்காரர்கள் தங்கள் கையில் இருக்கும் கடைசி பணத்தைக் கூட ஏழைகளுக்கு உதவ செலவழிக்க நினைப்பார்கள், அதற்காக அவர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள். இவர்கள் தன்னலமற்றவர்கள், எப்போதும் மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள், அது பண விஷயத்தில் மட்டுமல்ல. இவர்கள் பணத்தை செலவழிக்க தேடும் சிறந்த வழி தானம் அளிப்பதுதான்.

கும்பம் - இவர்கள் எப்போதும் ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள். புதிய போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் இரவில் வரிசையில் முதல் ஆளாக காத்திருப்பார்கள். தங்களின் மொத்த பணமும் காலியானதை விட தங்களுக்கு புதிய பொருள் கிடைத்து விட்டதே என்று சந்தோஷப்படுகிறவர்கள் இவர்கள். நிதி விஷயத்தில் இவர்கள் மிகவும் அலட்சியமானவர்கள்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் செலவுகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க முயலுகிறார்கள், ஆனால் இறுதியில் எண்ணற்ற பரிசுகளை வாங்கி குவிப்பார்கள். அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறந்த பரிசுகளை வழங்க விரும்புகிறார்கள். அதிலும் சிம்ம ராசிக்காரர்கள் மலிவாக பொருட்களை வாங்க மாட்டார்கள், அவர்கள் எப்போதும் அதிக விலையிருக்கும் பொருட்களையே வாங்குவார்கள். அதுதான் இவர்களின் மிகப்பெரிய பலவீனம்.

துலாம் - துலாம் ராசிக்காரர்கள் மிகவும் தாராள மனப்பான்மை உடையவர்கள், ஆனால் அவர்களின் தாராள மனப்பான்மை மக்களால் விரும்பப்பட வேண்டும் என்பதற்காக வருகிறது. அவர்கள் தங்கள் பணத்தை எப்போதும் சேமிக்கத்தான் விரும்புகிறார்கள், ஆனால் பணத்தை செல்வழிப்பதற்கான காரணங்கள் இவர்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவர்கள் ஒருவருக்கு உதவும்போது அல்லது வேடிக்கைக்காக ஏதாவது செய்யும்போது அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அவர்கள் வெறும் கையோடுதான் இருப்பார்கள்.

கடகம் - கடக ராசிக்காரர்கள் பொதுவாக பணத்தை செலவழிப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். . பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் எதையாவது வாங்குவதற்கு முன்பு நீண்ட நேரம் யோசிப்பார்கள். ஆனால் அவர்களின் விருப்பம் அவர்களின் தர்க்கரீதியான சிந்தனையை பாதித்தால், அவர்கள் பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள். அவர்கள் மோசமான மனநிலையில் இருக்கும்போது அதனை சரிசெய்ய எதையும் செய்வார்கள்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0