இன்று இந்த ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லதாம்

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லதாம்

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 31 ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று பொருளாதார முன்னணியில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். திடீர் செலவுகளால் சிக்கல் அதிகரிக்கலாம். இன்று உங்கள் துறையில் சிறந்த முடிவுகளைப் பெற்றிடலாம். உங்களின் கடின உழைப்பின் முயற்சியால், விரைவில் முன்னேறலாம். வர்த்தகர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். சிறந்த புரிதலுடன், குடும்ப பிரச்சனைகள் தீர்க்க முடியும். திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இன்று அன்புக்குரியவரின் கோபத்திற்கு ஆளாகலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இதய நோய் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம் - இன்று உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இது தவிர, உங்கள் நிதித் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். புதிய தொழில் தொடங்கும் வர்த்தகர்களின் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று அதிக நன்மைகளைப் பெற முடியும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலனைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. இன்று வீட்டின் சூழ்நிலை அவ்வளவு சரியாக இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கக்கூடும். உடல்நலம் பற்றி பேசினால், மன அழுத்தம் காரணமாக உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:40 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம் - தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று சில சிக்கல்கள் ஏற்படலாம். குடும்ப விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கவும். வியாபாரிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. திடீர் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிக்கவும். பண நிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று சிந்தனையுடன் செலவிடுவது நல்லது. உடல்நலம் பற்றிப் பேசினால், இன்று நீங்கள் தலைவலியால் கலங்குவீர்கள். ஓய்வெடுப்பதில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

கடகம் - இன்று அலுவலகத்தில் பணிச்சுமை திடீரென அதிகரிக்கக்கூடும். சோம்பலைக் கைவிட்டு, எல்லா பணிகளையும் வேகமாக முடிக்க முயற்சிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எந்தவிதமான மோதலையும் விவாதத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகள் இன்றைய தினம் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கத்தை கொண்டுவ முயற்சிப்பது நல்லது. திடீர் செலவுகளால் சிக்கலை சந்திக்கக்கூடும். உடல்நிலையைப் பொறுத்தவரை, கால்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 10:10 மணி வரை

சிம்மம் - வேலையைப் பற்றி பேசுகையில், இன்றைய தினம் அலுவலகத்தில் உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். இருப்பினும், அனைத்து வேலைகளையும் கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்திறனில் உயர் அதிகாரிகளும் திருப்தி அடைவார்கள். சில்லறை வர்த்தகர்கள் இன்று நன்றாக பயனடையலாம். கூட்டு வியாபாரம் செய்வோர், கூட்டாளருடனான மோதலை தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவு ஆழமடையும். உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து நிதி நன்மை சாத்தியமாகும். மாலையில் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று, நீங்கள் மனரீதியாக மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி - உடல்நலம் பற்றி பேசினால், இன்று சாதாரணமாக இருக்கும். ஆனால் நல்ல உணவுடன், யோகாவை அன்றாட வழக்கத்தில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திடீரென்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். இது வீட்டின் சூழலை மேலும் இனிமையாக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிட உங்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார சூழ்நிலையில் சில முன்னேற்றத்திற்கு சாத்தியமாகும். சோம்பலை விடுத்து, முக்கிய பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மதியம் 12 மணி வரை

துலாம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சமீபத்தில் எழுதிய எந்தவொரு தேர்விலும் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள், தங்களின் உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். தேவையில்லாமல் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்தால், இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். நாளின் இரண்டாம் பாகத்தில், பணத்தால் சில சிக்கல் இருக்கலாம். பணம் பற்றாக்குறையால் சில முக்கியமான பணிகள் முழுமையடையாமல் போக வாய்ப்புள்ளது. உடல்நலம் பற்றிப் பேசினால், சுவாசப் பிரச்சனை இருப்போர், உங்களை நீங்களே அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். இது தவிர, அதிகமாக கோபப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

விருச்சிகம்  - இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். இருப்பினும், இந்த மாற்றம் உங்களுக்கு சாதகமான முடிவுகளையே தரும். வேலை பற்றி பேசுகையில், உங்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்கள் வேலையை முழு உற்சாகத்துடனும் விவேகத்துடனும் முடிக்க முயற்சிப்பது நல்லது. வணிகத்தை மேலும் மேம்படுத்த நினைத்தால், இன்று அதற்கான முயற்சிகளை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர், உடன்பிறப்புகளுடனான உறவு நன்றாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். சுகாதார விஷயங்கள் இன்று சரியாக இருக்காது. திடீரென ஆரோக்கியம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் மதியம் 1 மணி வரை

தனுசு - வேலை முன்னணியில், இன்று நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். இன்று உங்கள் திட்டத்தின் படி பணிகள் அனைத்தும் நிறைவடையும். உத்தியோகஸ்தர்கள் இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவர். வணிகர்கள் இன்று நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. உங்கள் பணி, பெட்ரோல்-டீசல், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி தொடர்புடையது என்றால், இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெற்றிடலாம். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலத்திற்கு பிறகு குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். பணம் வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 33

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் நிதானமாக செயல்படவும். நிறைவடையாத சில முக்கியமான பணிகள் இன்று நிறைவடைவதற்கான வாய்ப்பு அதிகம். பண வரவில் ஏற்றத்திற்கான அறிகுறிகள் இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். இருப்பினும், நிதி விஷயங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். சக ஊழியர்களுடன் ஆவேசமாக பேசுவதைத் தவிர்க்கவும். இன்று வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். சிறு வணிகர்கள் எந்தவொரு பெரிய நிவாரணத்தையும் பெறலாம். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சோர்வடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம் - இன்று நாளின் தொடக்கமாக சிறப்பாக இருக்காது. வாழ்க்கைத் துணையின் பேச்சில் சிறு வித்தியாசம் இருக்கலாம். அன்பிக்குரியவரின் தவறான வார்த்தைகள் உங்கள் உணர்வுகளை புண்படுத்தும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பண நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் கடன் வாங்குவதையும் கடன் கொடுப்பதையும் தவிர்த்திடவும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்கள் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடின உழைப்பு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். வணிகர்கள் இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். உங்களது சில வேலைகள் திடீரென்று தவறாகக்கூடும். இதனால் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:40 மணி முதல் மதியம் 12 மணி வரை

மீனம்  - வணிகர்கள், தங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களை செய்தால், எதிர்பார்த்த பெரிய லாபத்தைப் பெற்றிடலாம். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாள். உங்கள் அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். பொருளாதார நிலை சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நலத்தை பற்றி பேசினால், வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0