ஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

ஆகஸ்ட் மாதத்தில் நிகழ உள்ள நான்கு முக்கிய கிரக பெயர்ச்சியின் காரணமாக நான்கு ராசிகள் குறிப்பிடத்தகுந்த நற்பலன்களைப் பெற உள்ளன.

ஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

ஆண்டின் 8ம் மாதமாக வரும் ஆகஸ்ட் மாதம் ஆடி மற்றும் ஆவணி ஆகிய தமிழ் மாதங்கள் பாதி பாதி சேர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் நிகழ உள்ள நான்கு முக்கிய கிரக பெயர்ச்சியின் காரணமாக நான்கு ராசிகள் குறிப்பிடத்தகுந்த நற்பலன்களைப் பெற உள்ளன.
 
​ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சி :

ஆகஸ்ட் 9, 2021 இல் பகல் 01:23 மணிக்கு சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி

ஆகஸ்ட் 9, 2021 இல் சிம்ம ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை

ஆகஸ்ட் 11, 2021ல் காலை 11:20 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிர பெயர்ச்சி

ஆகஸ்ட் 17, 2021 ல் மதியம் 01:05 மணிக்கு சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி, ஆவணி மாதம் ஆரம்பம்

ஆகஸ்ட் 17, 2021ல் சிம்ம ராசியில் புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை

ஆகஸ்ட் 22, 2021 - பெளர்ணமி

ஆகஸ்ட் 26, 2021 காலை 11:08 மணிக்கு கன்னி ராசியில் புதன் பெயர்ச்சி

ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பான பலன் பெறும் ராசிகள்

​மேஷம்

இந்த கிரக பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்கு, அவர்கள் முன்னெடுக்கும் வேலையில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அது அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டாக இருந்தாலும் சரி. உங்கள் பணி எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்தேறும். அதே சமயம் உங்கள் வேலையின் காரணமாக ஓய்வற்ற நிலை இருக்கும். உங்கள் செயல்களில் புதிய உச்சம், வெற்றியை அடைய உதவியாக இருக்கும். இயந்திரத் துறையில் அல்லது கைவினை கலைஞர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி சிறப்பாக இருக்கும்.


மிதுனம்

ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சி நிகழ்வின் காரணமாக மிதுன ராசிக்கு சிறப்பான பலன்கள் தருவதாக இருக்கும். பணியிடத்தில், வேலையில் உங்கள் திறமைக்கு ஏற்ப நீங்கள் பாராட்டப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எதிரிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களைத் தொந்தரவு செய்யும் நபர்கள் தாங்களாகவே தோற்கடிக்கப்படுவார்கள். ஆன்மிக செயலில் ஆர்வம் கொள்வதும், இறை மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. மரியாதை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். ஆனால் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும்.


​சிம்மம்

சிம்ம ராசியில் ஆகஸ்ட் மாதத்தில் புதன், செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய 4 கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதன் மூலம் உங்கள் ராசிக்கு மகிழ்ச்சியும் நல்ல அதிர்ஷ்டங்களும் அதிகரிக்கும். உங்களின் ஆற்றல் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். எந்த ஒரு செயலிலும் ஒரு பெரிய முடிவு அல்லது செயலை முன்னெடுக்க தயங்க மாட்டீர்கள். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

​துலாம்​

ஆகஸ்ட மாத கிரக பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு நன்மைகள் சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கூட உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் அரவணைத்துச் செல்வார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும். உங்கள் வருமானம் சிறப்பாக அதிகரிக்கும். கலை, கலாச்சார விஷயங்கள் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் படைப்புகள், கருத்துக்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்களின் மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடமிருந்து சலுகைகள் மற்றும் வெகுமதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0