இன்றைய ராசிப்பலன் (03.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலம் குறித்த கவலை அதிகரிக்குமாம்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்றைய ராசிப்பலன் (03.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலம் குறித்த கவலை அதிகரிக்குமாம்…

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.  ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்றைய தினம் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். சில உறவுகளுக்குள் விரிசல் ஏற்படலாம். வேலை அல்லது வணிகம் பற்றி பேசினால், இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எவ்வளவு கடினமாக உழைக்கின்றீர்களோ, அதற்கான பலனை விரைவில் பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நாளின் பிற்பகுதியில், திடீர் விருந்தினர் வருகை இருக்கக்கூடும். அதனால், இன்றைய திட்டங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியம் பற்றி பேசினால், இன்று மனஅழுத்தம் அதிகரிக்கக்கூடும். எனவே, கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

ரிஷபம் - இன்று உங்களது திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழல் இருந்தாலும் கூட, அனைத்து பிரச்சினைகளையும் அமைதி மற்றும் புரிதலுடன் தீர்க்க முடியும். பேச்சைக் குறைத்துக் கொண்டால், சிரமங்களும் குறைந்திடும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். ஒரு முக்கியமான பணியை முடிக்க நீங்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் உதவியுடன், சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியும். இன்று வர்த்தகர்கள் மிகப்பெரிய பொருளாதார லாபத்தை ஈட்ட முடியும். உங்கள் பணி எழுதுபொருள், எலக்ட்ரானிக்ஸ், உடைகள் போன்றவற்றுடன் தொடர்புடையது என்றால், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை

மிதுனம் - இன்று உங்களது இயல்பில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பேச்சின் இனிமையால், அலுவலகத்தில், நீங்கள் பணிவுடன் நடத்தப்படுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை பொறுப்புகளை நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். அரசு பணியாற்றுவோர், தங்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறலாம். இந்த நேரத்தில் வணிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் சமீபத்தில் பெரிய நிதி இழப்பை சந்தித்திருந்தால், விரைவில் நிலைமையில் முன்னேற்றம் காணலாம். தேவையற்ற செலவுகளால் சிக்கலில் சிக்கக்கூடும். இதை மனதில் வைத்து செலவுகளை செய்வது நல்லது. உடல்நலம் பற்றிப் பேசும்போது, உங்களுக்கு கண்கள் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், அலட்சியமாக இருக்க வேண்டாம், மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:20 முதல் 5:15 வரை

கடகம் - இன்று பல சந்தர்ப்பங்களில் நீங்கள் யார் என்பதை நிரூபித்து காட்ட முடியும். இதனால், மனஅழுத்தம் குறைந்து நிம்மதியாக உணருவீர்கள். இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில், அனைத்து வேலைகளையும் நேரத்திற்கு முன்பாகவே முடிக்க முடியும். கூட்டு வியாபாரிகள், தங்களது கூட்டாளருடன் நல்லுறவை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மாணவர்கள் இன்று படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை தவறவிடுவது சரியல்ல. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தாருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் 9:15 மணி வரை

சிம்மம் - இன்று வணிகர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். ஆனால், அதனால் மனசோர்வடையாமல், நேர்மறை எண்ணத்துடன் முழு முயற்சியை அளிக்க வேண்டும். உங்கள் சிரமங்கள் அனைத்தும் விரைவில் மறையும். மறுபுறம், பணிபுரிவோர் சோம்பலைக் கைவிட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்கவும். சக ஊழியர்களுடன் கிசுகிசுப்பதைத் தவிர்க்கவும். புகழுக்கும் புகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இன்று யாராவது உங்களைப் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், வெளி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி - இன்று உங்கள் நிதி நிலைமை மேம்படும். சமீபத்தில் எடுத்த சரியான நிதி முடிவுகளிலிருந்து நல்ல பலனைப் பெறலாம். இன்று புதிய தொழில் ஏதாவது தொடங்குவதற்கான திட்டமிடலாம். அலுவலகத்தில், கடின உழைப்பை செலுத்திய போதும், விரக்தியே மிஞ்சும். உங்கள் கடின உழைப்பில் உங்கள் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். மாற்று வேலை குறித்த யோசனை மேலோங்கும். வணிகர்கள் இன்று நன்கு பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசினால், இன்று மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

துலாம் - இன்று உங்கள் உடல்நலம் குறித்து மிகவும் கவலைப்படுவீர்கள். மோசமான ஆரோக்கியம் காரணமாக, உங்கள் அன்றாட திட்டங்களுக்கும் பாதிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பண விவகாரத்தில் ஒருவரிடம் தகராறு செய்யலாம். எந்தவொரு சூழ்நிலையிலும் பொறுமையை இழக்க வேண்டாம். இல்லையெனில் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். இன்று வேலை முன்னணியில் கலவையான முடிவுகள் இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது. இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான பணி ஒதுக்கப்பட்டால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். தனிப்பட்ட வாழ்க்கை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 9:45 மணி வரை

விருச்சிகம் - வீண் விவாதங்களிலிருந்து விலகி, உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்திருங்கள். வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், எதிர்மறை எண்ணங்களை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். வேலையைப் பற்றி பேசினால், அதிகப்படியான நம்பிக்கையுடன் இன்று எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். வியாபாரிகள், எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு முன்பு, அனுபவமுள்ள சிலரின் ஆலோசனையை பெறவும். மறுபுறம், அலுவலகத்தில் இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று சில மன அழுத்தம் ஏற்படலாம். உங்களது கடுமையான அணுகுமுறை அன்புக்குரியவர்களை புண்படுத்தக்கூடும். வருமானத்தை அதிகரிக்க நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். உடல்நலம் பாதிக்கக்கூடும். எனவே, கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

தனுசு - இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள். மேலும் உங்கள் எல்லா வேலைகளையும் மிகுந்த உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள், இன்று சிறிய முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான எந்தவொரு பெரிய வேலையும் செய்ய இன்று உகந்ததல்ல. தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கும். உங்கள் கருத்தை குடும்பத்தார் மீது திணிப்பதைத் தவிர்க்கவும். அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் முழுமையாக புரிந்து செயல்பட வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் கடுமையான அணுகுமுறை உங்களை காயப்படுத்தக்கூடும். இருப்பினும், அதற்காக அதிகம் கவலைப்பட தேவையில்லை. மாலைக்குள் அனைத்து சங்கடங்களும் நீங்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று கண்கள் தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 10:45 மணி வரை

மகரம் -  இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால், கவனமும், நிதானமும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மிகவும் சிந்தனையுடனும் புத்திசாலித்தனமாகவும் எடுக்க வேண்டிய தினம். மற்றவர்களிடமிருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இதனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். இன்று, யாரோ ஒருவரால் நீங்கள் மனதளவில் காயப்படலாம். அலுவலகத்தில், உங்கள் கடின உழைப்பால் உயர் அதிகாரிகள் சில பெரிய முடிவுகளை எடுக்க முடியும். விரைவில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. இன்று வணிகர்களுக்கு மிகவும் நல்ல நாள். நீங்கள் ரியல்எஸ்டேட் தொடர்பான வேலைகளைச் செய்தால், இன்று நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களது நிதி முயற்சிகள் வெற்றி காணும். மேலும் நீங்கள் செல்வத்தைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் சில முரண்பாடுகள் ஏற்படலாம். உடல்நலம் பற்றி பேசினால், இன்று நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் 12:45 மணி வரை

கும்பம் - தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று சில சிக்கல்கள் உருவாகலாம். தந்தையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். உங்கள் பெரும்பாலான நேரம் மருத்துவமனையிலேயே செலவிடப்படும். இந்த நேரத்தில் தந்தையை அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையின் கடினமான அணுகுமுறையை புரிதலுடன் சரிசெய்ய முயற்சிப்பீர்கள். ஒரு முக்கியமான பணியைச் செய்வதில் இன்று உங்கள் நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், ஒரு பெரிய பணியை உங்களிடம் ஒப்படைக்கலாம். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவால் கிடைக்கும் வாய்ப்புகள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

மீனம் - இன்று அலுவலகத்தில் உங்கள் சிறந்த செயல்திறனுக்கான பெரிய மரியாதையை பெறலாம். உயர் அதிகாரிகள் உங்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். இன்று உடன்பிறப்புகளுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இன்று காதல் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரிவர் உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள். இன்று எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கலாம். வரவிற்கேற்ப செலவிடுவீர்கள். உடல்நலம் பற்றி பேசினால், இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

like

dislike

love

funny

angry

sad

wow