பிறந்த நாள் பலன்கள் 

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு நாளில் பிறந்தவர்களுக்கு என சில பிரத்தியே குணங்கள் இருக்கும் அவை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பிறந்த நாள் பலன்கள் 

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள்

இவர்கள் மிகவும் தைரியசாலிகள். இவர்களுக்கு சீக்கிரம் தலை வழுக்கை வரும். பிறருடன் வாதத்தில் வெல்பவர்கள். மாநிறம் கொண்டவர்களாக இருப்பாரகள்.  பித்தம் சம்பந்தமான கோளாறு இவர்களுக்கு இருக்கும். இவர்கள் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்கள். மற்றும் வாரி வழங்கும் வள்ளல்கள் என்று கூட இவர்களைக் கூறலாம்.

திங்கட்கிழமை பிறந்தவர்கள்

இவர்கள் இனிமையாக பேசுவார்கள். அழகாக இருப்பார்கள். உலகில் நடை முறை அறிந்து எதார்த்தமாக இருப்பார்கள். பல பேர் அரசாங்க வேலையில் இருப்பார்கள். இவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுவார்கள். 

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள்

இவர்கள் சிறிது கொடூர குணம்  படைத்தவர்கள். எப்பொழுதும் சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் மந்திரி போன்ற பதவிகளை வகிப்பார்கள். விவசாயம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். ராணுவம், தீயணைப்புத் துறை போன்ற துறைகளில் பணி புரிவார்கள்.

புதன்கிழமை பிறந்தவர்கள்

இவர்கள் அழகான தோற்றம் உள்ளவர்கள். இவர்கள் மென்மையானவர்கள். மிருதுவாகப் பேசுவார்கள். செல்வம் படைத்தவர்களாக இருப்பார்கள். கலைத் துறையில் இவர்கள் சிறந்த கலைஞர்களாக இருப்பார்கள். வியாபரம் மற்றும் வாணிபத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். 

வியாழக்கிழமை பிறந்தவர்கள்

வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் நன்கு கல்வி கற்றவர்கள். இவர்கள் பண்டிதர்களாக இருப்பார்கள். இவர்களிடம் நல்ல குணங்கள் நிறைந்து இருக்கும். மனதுக்கு இன்பம் அளிக்கும் குணங்கள் உடையவர்கள். மற்றவர்களால் விரும்பப்படுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். அரசாங்கத்தால் போற்றப்படுபவர்களாக இருப்பார்கள். 

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள்

சுருண்ட கேசங்களை உடையவர்கள். இவர்கள் சிறந்த ஆடைகள் மற்றும் வெண்மை நிற ஆடைகளை விரும்பி அணிவார்கள். ஆடை ஆபரணங்களில், வாசனைத் திரவியங்களில் விருப்பம் உள்ளவர்கள். எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பார்கள். நேர்மையானவர்கள்  நல்ல வழியில் செல்வார்கள்.

சனிக்கிழமை பிறந்தவர்கள்

இளமையிலேயே முதுமை தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்  வலிமையற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் பலம் மிக்கவர்கள் போல தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள் தாமச குணம் கொண்டவர்கள். நியாமாக நடந்து கொள்வார்கள். கொடூர குணம் கொண்டவர்கள்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0