பிறந்த தேதி பலன்கள் 

மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறக்கிறோம். எனவே தேதியில் இருக்கும் எண்களுக்கும் நமது எண்ணம் மற்றும் செயலுக்கும் சம்பந்தம் உண்டு 1 முதல் 9 வரை உள்ள எண்களுக்கு நவகிரகங்கள்  அதிபதிகளாக விளங்குகிறார்கள். 

பிறந்த தேதி பலன்கள் 

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கு என சில பிரத்தியே குணங்கள் இருக்கும் அவை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பிறந்த தேதி பலன்கள் 

மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறக்கிறோம். எனவே தேதியில் இருக்கும் எண்களுக்கும் நமது எண்ணம் மற்றும் செயலுக்கும் சம்பந்தம் உண்டு 1 முதல் 9 வரை உள்ள எண்களுக்கு நவகிரகங்கள்  அதிபதிகளாக விளங்குகிறார்கள். 

மனிதர்களாகிய நமது ஒவ்வொரு இயக்கமும் நவகிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டுத்தான் அமைகின்றது. நமது மகிழ்ச்சிக்கும் உயர்வுக்கும் உறுதுணை புரிவது  நவகிரகங்களே.

எண் 1 :

1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள். 

எண் 1 சூரியனின் ஆதிக்கத்தின் கீழ் வரும்.  சூரியனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் தமது சொந்த அறிவைக் கொண்டு செயல்படுவார்கள். மற்றவர்களது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். 

தனது அறிவாற்றலை யாராவது குறை கூறிவிட்டால் இவர்கள் கோபப்படுவார்கள். யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள். ஆராய்ச்சி குணம் மிக்கவர்கள். அறிவுப்பூர்வமானவர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசமாட்டார்கள். மற்றவர்களிடம் பேசும் போது தான் சொல்வதே சரி என்று வாதிடுவார்கள்.

தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பொதுவில் சுயநலம் மிக்கவர்கள் என்று கூறலாம். ஆனால் ஒழுக்கம் நிறைந்தவர்கள். அவ்வப்போது யோசனைகளில் ஆழ்ந்து  விடுவார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு முன் கோபம் வரும். 

பக்தி குணம் மிக்கவர் என்றாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். தன்னிஷ்டப்படி நடக்க வேண்டும் என்ற பிடிவாதம் மிக்கவர்கள். தனது ரகசியத்தை யாரிடத்தும் கூற மாட்டார்கள்.

பிறரிடம் நைசாகப் பேசி வேலை வாங்குவதில் வல்லவர்கள். இயற்கை அழகை ரசிப்பவர்கள். இவர்கள் தன்னம்பிக்கையுடன் உலகில் தலை நிமிர்ந்து நிற்பவர்கள். 

அதிர்ஷ்ட தேதிகள்:1, 10, 19,28, 3 , 12,21, 30, 4, 13,22,31,5,14

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, வியாழன், புதன்

அதிர்ஷ்ட மாதங்கள்:ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர், டிசம்பர்

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பழுப்பு, நீலம்

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ சூரிய பகவான், சூரியனார் கோவில், ஆடுதுறை

எண் 2 :

2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

எண் 2 சந்திரனின்  ஆதிக்கத்தின் கீழ் வரும்.  சந்திரனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள். அதிகமாக சிந்திப்பார்கள். எளிதாக முடிவுக்கு வர இயலாதவர்கள். எவரிடத்திலும் எளிதில்  பழக மாட்டார்கள். 

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவார்கள். பேச்சில் சாமார்த்தியம் இருக்கும். யாருக்கும் பிடி கொடுக்க மாட்டார்கள். இவர்கள் பிறர் உதவியை நாடுவதில் வல்லவர்கள். இவர்களுக்கு மனக் குழப்பம் இருக்கும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள்.
பழக்கத்துக்கு அடிமையாவர்கள். 

எளிதில் மனம் மயங்குவார்கள். இயற்கை காட்சி ஓவியம், சிற்பம், கை வேலைப்பாடமைந்த சாதனங்கள் ஆகியவற்றில் மனம் லயித்து விடுவார்கள். மனதில் உள்ளதை யாரிடத்தும் எளிதில் கூற மாட்டார்கள். சூதுவாது தெரியாதவர்கள். சந்தர்ப்ப சூழநிலைக்கேற்ப நடந்து கொள்வார்கள்.

கற்பனை வளம் மிக்கவர்கள். சிந்தனை சிறகடித்துப் பறப்பவர்கள். தன்னைத் தானே குழப்பிக் கொண்டு பிறரையும் குழப்புவார்கள். மனதைத் தன வசமாக்கிவிட்டால் கவிஞர்கள், கதாசிரியர்கள் என உருவாக முடியும். மனதை தளர விட்டால் எந்த நிலையிலும் உறுதியாக  நிலையான காரியங்களை சாதிப்பது கடினம். மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்ற முதுமொழியை வாழ்வில் கொண்டு முன்னேற நினைப்பவர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 2,11,20,29, 3,12,21, 30, 6, 15, 24, 7, 16, 25 

அதிர்ஷ்ட கிழமை: திங்கள்,  வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட மாதங்கள்: பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை ,நவம்பர், டிசம்பர்

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்,வெண்மை

அதிர்ஷ்ட தெய்வம்: திருப்பதி ஸ்ரீ வெங்கடசாலபதி

எண் 3:    

3,12,21,30  தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

எண் 3 குருவின்  ஆதிக்கத்தின் கீழ் வரும்.  குருவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்த இவர்கள் கட்டளையிட வல்லவர்கள். அடக்கி ஆள வல்லவர்கள். பேசும் திறம் மிக்கவர்கள். நல்ல சுபாவம். பிறரைக் கவர்ந்திழுக்கச் செய்யும் காந்த விழிகள் உடையவர்கள். பேச்சில் உறுதி கொண்டவர்கள். 

அடித்துப் பேசும் ஆற்றல் மிக்கவர்கள். தனது கட்சிக்கு உழைக்கவும்  வெற்றி தேடித் தரவும் வல்லவர்கள். எளிதில் யாரிடமும் ஏமாறாதவர்கள் சாஸ்திரத்தில் கவனம், தத்துவத்தில் நாட்டம்,  சட்டத்தில் தேர்ச்சி, அரசியலில் ஆர்வம், சமய ஈடுபாடும் ஆர்வமும் ஆராய்ச்சியும்  உடையவர்கள். 

அடிக்கடி பிரயாணம் செய்யும் இயல்பு உடையவர்கள். சுய கௌரவம் பார்ப்பதில் சூரர். மரியாதையைக் கேட்டு வாங்கிக் கொள்ள விரும்புபவர்.  வெளியில் உயர் பண்பு உடையவர் என்று பெயர் பெறுவார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்களிடம் மதிப்பு இருக்காது. ருமானத்தை விட புகழை அதிகமாக விரும்புவார்கள். பொது ஜன சேவை செய்ய விருப்பம் உடையவர்கள். 

குருவின் அருள் பெறுபவர்கள். படிப்படியாக வாழ்வில் உச்சிக்கு செல்வார்கள்.  வாழ்வில் பல துறைகளில் புகழ் பெரும் சக்தி படைத்தவர்கள். தன்னம்பிக்கையுடன் துணிவே துணை என்று எழுந்து நிற்பவர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்:3,12,21,30,9, 18,27, 2,11,20,29,7,16, 25

அதிர்ஷ்ட கிழமை: திங்கள்,  செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட மாதங்கள்:பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், டிசம்பர்
ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் : ரோஜா நிறம், தாமரை பூ நிறம், ஊதா நிறம், நீலம், மஞ்சள்

அதிர்ட்ஷ தெய்வம்: திருச்செந்தூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர்

எண் 4:    

4,13,22,31  தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

எண் 4 இராகுவின்   ஆதிக்கத்தின் கீழ் வரும். இராகுவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்கமாட்டர்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள். 

இவர்கள் உயர்வும் தாழ்வும் சகஜமானது என நினைப்பவர்கள். தன்மானமும் ரோஷமும்  இவர்களிடம் மிகுதியாக இருக்கும். யாரிடமும் வீண் சண்டைக்கு போக மாட்டார்கள்  ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் விடவே மாட்டார்கள். 

இவர்கள் மனதில் பயம் நிறைந்து இருக்கும். இவர்களுக்கு நீரில் கண்டம் உண்டு. எடுத்த காரியத்தை எந்தப் பாடுபட்டாவது சாதிக்க வல்லவர்கள். 

இவர்கள் சரியானதை சரி என்றும் தவறானதை தவறு என்றும் வெளிபட்டையாகக் கூறுவார்கள் . எந்த வித விஷயத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்வார்கள். சீக்கிரம் உணர்ச்சி வசப்படுபவர்கள். 

போர் வீரர்களைப் போல நடந்து கொள்வார்கள். பழக்க தோஷம் இவர்களை பாதிக்கும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் நல்ல நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் இவர்கள் குன்றின் மேல் இட்ட விளக்காகத் திகழ்வார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 1,10,19,28,5,14,23,6,15,24

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, புதன், வெள்ளி

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, ஜூன், ஜூலை, அக்டோபர்

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், நீலம், சாம்பல்

அதிர்ட்ஷ தெய்வம்: ஸ்ரீ காளஹஸ்தீச்வரர்

எண் 5:    

5,14,23   தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

எண் 5  புதனின்   ஆதிக்கத்தின் கீழ் வரும். புதனை அதிபதியாகக் கொண்ட எண்ணில் பிறந்த இவர்கள் நேர் வழியில் எதையும் சிந்திப்பார்கள். 

திட்டம் போட்டு அதன்படி நடப்பார்கள். ரகசியம் காப்பாற்றுவார்கள். இவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். அறிவு வழி நடப்பவர்கள்.

எதையும் எளிதில் முடிப்பவர். வேகமாக சிந்திப்பவர்கள். நிதானமாக செயல்படுவார்கள்.  இவர்களின் மூளை கம்ப்யூட்டர் போல செயல்படும். எல்லோரிடத்திலும் எளிதில் பழகுவார்கள். 

மனதில் நினைத்ததை எளிதாகக் கூறி விடுவார்கள். எதையும் மறைக்கத் தெரியாது. கௌரவமான போக்கு உடையவர்கள். கண்டிப்பான ஒழுக்கம் உடையவர்கள். 

கோபமாகப் பேசுவார்கள். புரியவில்லை என்று யாராவது சொன்னால் கோபப்படுவார்கள், எவ்வளவு கடினமான விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். 

பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாதவர்கள். மக்கள் தொடர்பு உள்ளவர்கள். சகஜமாகப் பழக வல்லவர்கள். சிறு வயதில் கஷ்டப்பட்டு பிறகு வாழ்வில் உயரும் தன்மை கொண்டவர்கள். அறிவாற்றல் உள்ளவர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 5,14,23,1,10,19,28,4,13,22,31,6,15,24

அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி, ஞாயிறு

அதிர்ஷ்ட மாதங்கள்: மே, ஜூன், அக்டோபர்

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் ,மஞ்சள்

அதிர்ட்ஷ தெய்வம்: மதுரை ஸ்ரீ சொக்கநாதர் 

எண் 6:    

6,15,24,   தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

எண் 6  புதனின்   ஆதிக்கத்தின் கீழ் வரும்.சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்த இவர்கள் எதையும் ரசிக்கத் தெரிந்தவர்கள். ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவார்கள். நிறைய நண்பர்களை சேர்த்துக்கொள்வார்கள். 

அன்புள்ளம் கொண்டவர்கள். ஆதரிக்கும் எண்ணம் உடையவர்கள். எது வந்தாலும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அழகைப் பராமரிபப்தில் ஆர்வம் மிக்கவர்கள்.

தனக்கு லாபம் அதறாத விஷயத்தில் இறங்கி நஷ்டப்பட மாட்டார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச தெரியாதவர்கள். செல்வாக்கு உடையவர்கள். எங்கும் எதிலும் சாதனை புரிந்து  புகழ் பெறுவார்கள். 

ஆனந்தமாக வழ வேண்டும். அதற்கு அற்புதமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். 

புகழ்ச்சியாகப் பேசினால் வசியமாகி விடுவது இவரது இயல்பு.  மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தினை உடையவர்கள். இவர்கள் செயலிலும் கவர்ச்சி இருக்கும். எதிலும் தீவிர அல்லோசனை, தீவிர விசாரணை மிக்கவர்கள். 

அழகு, தூய்மை, கவர்ச்சி ஆகியவற்றில் அதிக கவனம் உடையவர்கள். பக்தியில் திளைப்பதில் வல்லவர்கள். நட்பில் வல்லவர்கள். பண்பில் சிகரம். பாசத்தின் உறைவிடம், மனதுக்குப் பிடித்த மகத்தான வாழ்வை வாழ்பவர்க. எதையும்சாதிக்க வேண்டும் என்ற உறுதி மிக்கவர்கள். புகழுக்கு மயங்குவார்கள். 

அதிர்ஷ்ட தேதிகள்: 6,15,24,2,11,20,29,5,14,23,9,18.27

அதிர்ஷ்ட கிழமை:திங்கள்,  செவ்வாய், புதன்,  வெள்ளி

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜூன், பிப்ரவரி, மே, செப்டம்பர்

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் : நீலம், பச்சை 

அதிர்ட்ஷ தெய்வம்:  ஸ்ரீ ரங்கநாதர் 

எண்7:    

7,16,25 ,   தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

7  கேதுவின் புதனின்   ஆதிக்கத்தின் கீழ் வரும். கேதுவின் ஆதிக்கத்தின் கீழ் பிறந்த இவர்களுக்கு கடவுள் பக்தி அதிகம். அதனை பிரபலப் படுத்த மாட்டார்கள். 

ஆன்மீகச் செல்வர்கள். இரக்கமான குணமும் தெய்வ வழிபாட்டில் நாட்டமும் இரு கண்களாகக் கருதுவார்கள். மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதவர்கள்.  பிறர் படும் துன்பத்தை தான் படும் துன்பமாக நினைப்பார்கள். அதற்காக வருந்துவார்கள். 

கேள்வி  ஞானம் மிக்கவர்கள். பழமையும் புதுமையும் கலந்த வாழ்க்கை நடத்துவார்கள். எவ்வளவு பண வசதி இருபினும் எளிமையாக காணப்படுவார்கள். பல கலைகளிலும் ஆற்றல் உடையவர்கள். தூய்மையாகக் காட்சி அளிப்பார்கள். 

எக்காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு தீவிரமாக ஆலோசிப்பார்கள். முன் கோபம் தான் இவருக்கு எதிரி. நல்ல உழைப்பகிஜகுள். வேலையில் மூழ்கி விட்டால் பசி என்பதைக் கூட  மறந்து விடுவார்கள். இசையில் ஆர்வம் உள்ளவர்கள். 

உடல் பலத்தைவிட மனோ பலம் மிக்கவர். தியாக சீலர்கள். மனம் தளராதவர்கள். பெரிய குடும்பத்தை சுமப்பவர்கள். மந்திர  சித்தி பெற வல்லவர்கள். ரகசிய சாஸ்திரம் அனைத்தையும் அறியவல்லவர்கள். தவறு செய்தவர்களைக் கூட மன்னிக்கும் மனப் போக்கு உண்டு. மற்றவர்கள் சொத்தை அபகரிக்க மாட்டார்கள். 

இயற்கையிலேயே ஞானம் மிக்கவர்கள். முறையாகப் பயின்றால் சகல துறைகளிலும் முன்னேற வல்லவர்கள்.  இவர்கள் நேரிய வழியில் செல்பவர்கள் 

அதிர்ஷ்ட தேதிகள்: 7,16,25,2,11,20,29,2,3,12,21,30,6,14,24,9,18,27

அதிர்ஷ்ட கிழமை:திங்கள்,  செவ்வாய், வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட மாதங்கள்: பிப்ரவர், ஜூன், ஜூலை, செப்டம்பர், நவம்பர் 

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள், நீலம், பச்சை 

அதிர்ட்ஷ தெய்வம்:  பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் 

எண் 8:    

8,17,26 தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

எண் 8  சனியின்   ஆதிக்கத்தின் கீழ் வரும். சனியின் ஆதிக்கத்தைக் கொண்ட எண்ணில் பிறந்த இவர்கள்  உழைப்பை மதிப்பவர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் உள்ளவர்கள். 

சொந்த பந்தங்களைப் பகைத்துக் கொள்வார்கள். பந்தமாவது பாசமாவது என்று புலம்புபவர்கள். மனதில் அல்லது உடலில் அவ்வப்போது நோய் உண்டாகும்.

இவர்கள் பக்தி மிக்கவர்கள். திறமைசாலிகள் இளகிய மனம் உடையவர்கள். தகுதிக்கு மீறிய அலையல் தான தர்மம் செய்வார்கள். செய்யும் உதவிகளை வெளிச்சம் போட்டுக் காட்டாதவர்கள். சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள். 

தனது விதியை நினைத்து மனம் உருகுபவர்கள். மனதிலேயே கடவுளை வழி படுபவர்கள். துணிவே துணை என எதையும் செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். தன்னை நம்பி வந்தவரை காப்பாற்றுபவர். ஆனால் எமற்றியவரை ஏமாற்றியே தீருவர். 

சுற்றத்தாரை விட நண்பர்களே அதிகம் உதவுவார்கள். கௌரவமாக நடப்பதும் சில சமயம் கீழ்த்தரமாக நடப்பதும்இவர்களிடம் உண்டு. தொழில் நுட்ப அறிவைத் தருபவர் சனி பகவான். எனவே இவர்கள்  சிறந்த என்ஜினீயர், டாக்டர் என உருவாக இடமுண்டு.  உழைப்பே மூலதனம், துணிவே துணை என நாளும் சலியாது உழைக்க வல்லவர்கள். 

அதிர்ஷ்ட தேதிகள்: 3,12,21,30,4,13,22,31,6,15,24

அதிர்ஷ்ட கிழமை: வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட மாதங்கள்: மார்ச் ஏப்ரல்,  ஜூன்

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் :வெளிர் நீலம் மஞ்சள், பொன் நிறம் 

அதிர்ட்ஷ தெய்வம்:  ஸ்ரீ சனீஸ்வர பகவான் 

எண் :9 

9,18,27 தேதிகளில் பிறந்தவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள்.

எண் 9 செவ்வாயின்    ஆதிக்கத்தின் கீழ் வரும். செவ்வாயின்  ஆதிக்கத்தைக் கொண்ட எண்ணில் பிறந்த இவர்கள் உழைப்போம் உயர்வோம் என்ற தணியாத தாகம் மிக்கவர்கள். இதற்கு இவர்களின்  உடலும் உள்ளமும்  ஒத்துப் போகும். 

உறுதி மாறாதவர்கள். சுறுசுறுப்பு என்பதும் உற்சாகம் என்பதும் இவர்களது உடன்பிறப்பு. எல்லாரையும் அரவணைக்கும் பாங்கு இவர்களுக்கு உண்டு. அதட்டிக் கேட்கும் கம்பீரமும் உண்டு.

சூழ்சிகளை, சூது வாதுகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.  அன்ன சத்திரம், அறக் கட்டளைகள் அமைத்து புகழ் பெற வல்லவர்கள். தம்ழகம் முழுவதும் சத்துணவு திட்டத்தை அமைத்து பசிப் பிணி மருத்துவராக சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள மக்கள் நேசர் தாயுள்ளம் கொண்ட எம்.ஜி. ஆர் என்ற மூன்று கூட்டு  எழுத்தின் எண் 9 ஆகும். வெட்டிக் கதை பேசாதவர்கள். 

வாய்ச் சொல்லில் வீரராக இருப்பதை  விட செயல் வீரராகத் திகழ்வார்கள். சுதந்திரம், ச்ம்சத்துவம் என அடிக்கடி பேசுவார்கள். அதற்கு வாய்ப்பில்லாத போது போராடவும் தயார் என்று கூறுபவர்கள். 
‘ஆக்கமும் முடியும் அழிக்கவும் முடியும் என்னும் வைராக்கியம் கொண்டவர்கள் உழைப்பினாலும உண்மையான வாக்கினாலும் உயர்வடைய வல்லவர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 9,18,27,3,12,21,20,6,15,24

அதிர்ஷ்ட கிழமை:செவ்வாய், வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட மாதங்கள்: மார்ச , ஜூன்,செப்டம்பர், டிசம்பர்  

ஆடைக்கேற்ற அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு, வெண் நீலம் 

அதிர்ட்ஷ தெய்வம்:  ஸ்ரீ தண்டாயுதபாணி பழனி.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0